வந்துவிட்டது JioRail! இனி Jio போனிலும் ரயில் டிக்கெட் முன்பதிவு...

முகேஷ் அம்பானியின் Reliance Jio ஆனது தனது வாடிக்கையாளர்களுக்கு JioRail app-னை இன்று அறிமுகம் செய்துள்ளது!

Last Updated : Jan 28, 2019, 02:12 PM IST
வந்துவிட்டது JioRail! இனி Jio போனிலும் ரயில் டிக்கெட் முன்பதிவு... title=

முகேஷ் அம்பானியின் Reliance Jio ஆனது தனது வாடிக்கையாளர்களுக்கு JioRail app-னை இன்று அறிமுகம் செய்துள்ளது!

இந்த புதிய JioRail செயலி மூலம் JioPhone மற்றும் JioPhone 2 வாடிக்கையாளர்கள் தங்களது கைப்பேசியில் தட்கல் பயண சீட்டு உள்பட அனைத்து வகையான பயண சீட்டுகளையும் முன்பதிவு செய்துகொள்ளலாம்.

இந்திய இரயில்வேயின் IRCTC செயலியில் இருப்பது போல், பற்று அட்டை (அ) கடன் அட்டை மூலம் வாடிக்கையாளர்கள் பயண சீட்டு பெற இயலும் எனவும் Reliance Jio தெரிவித்துள்ளது. மேலும் பயனர்கள் தங்களது பயணத்தின் வழித்தடம், PNR நிலைமை ஆகியவற்றையும் இந்த செயலியின் மூலம் அறிந்துக்கொள்ளலாம்.

தற்போது Jio App Store-ல் கிடைக்கும் இந்த செயலியானது, பயனர்களுக்கு IRCTC கணக்கு இல்லாத நிலையிலும் புதிய கணக்கினை JioRail செயலியில் இருந்தே உருவாக்கும் வசதியினை வழங்குகிறது.

இதற்கிடையில், இன்று Reliance Jio-வின் celebration packs பயன்பாட்டு காலம் முடிவடைகிறது என்பதையும் Reliace jio நினைவூட்டியுள்ளது. Jio-வின் இந்த celebration pack மூலம் வாடிக்கையாளர்கள் தினம் 2GB கூடுதல் இணைய டேட்டாக்களை பெற்று வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த Jio celebration pack-னை வாடிக்கையாளர்கள் புதுபிக்காத பட்சத்தில் குரல் அழைப்புகள் உள்பட அனைத்து சலுகைகளையும் பயனர்கள் இழக்க நேரிடும் என்பது குறிப்பிடத்தக்கது.

Trending News