Coca-Cola Smartphone: கோகோ கோலா ஸ்மார்ட்போன்: ரியல்மீ வெளியிட்ட டீசர்

Realme Coca Cola Themed: கோகோ கோலா நிறுவனத்தின் புதிய ஸ்மார்ட்போன் குறித்த டீசரை ரியல்மீ நிறுவனம் அதிகாரப்பூர்வமாக வெளியிட்டுள்ளது. Realme 10 4G-யில் உள்ள அதே விவரக்குறிப்புகளை Coca Cola ஃபோன் கொண்டிருக்கும்.

Written by - S.Karthikeyan | Last Updated : Jan 30, 2023, 11:50 AM IST
Coca-Cola Smartphone: கோகோ கோலா ஸ்மார்ட்போன்: ரியல்மீ வெளியிட்ட டீசர் title=

கோகோ கோலா நிறுவனம் குளிர்பானத்தில் உலகளவில் கோலோச்சிக் கொண்டிருந்த நிலையில், இப்போது ஸ்மார்ட்போன் மார்க்கெட்டிலும் கால்பதிக்க முடிவெடுத்துள்ளது. அதாவது பாட்டிலில் இருந்த கோகோ கோலா விரைவில் இப்போது பாக்கெட்டுக்குள் வர இருக்கிறது. அந்த நிறுவனம் விரைவில் வெளியிட இருக்கும் ஸ்மார்ட்போனின் டீசரை இப்போது ஸ்மார்போன் மார்க்கெட்டில் கோலோச்சிக் கொண்டிருக்கும் ரியல்மீ நிறுவனம் வெளியிட்டிருக்கிறது. 

இதற்கு முன்பே கோகோ கோலா நிறுவனம் மொபைல் மார்க்கெட்டில் களமிறங்க இருப்பதாக பலமுறை செய்திகள் வெளியாகின. ஆனால், அந்த செய்திகள் வதந்திகளாகவே இருந்த நிலையில், முதன்முறையாக இப்போது ஸ்மார்ட்போன் மார்க்கெட்டில் இறங்க இருக்கும் செய்தியை அதிகாரப்பூர்வமாக தெரிவித்துள்ளது. அதிலும், ஸ்மார்ட்போனில் உலகில் முன்னணி நிறுவனமாக இருக்கும் ரியல்மீ நிறுவனத்துடன் கூட்டணி அமைத்துள்ளது. ரியல்மீ நிறுவனத்தின் Realme 10 4G அப்டேட் வெர்சன் குறித்து செய்திகள் வெளியான நிலையில், இப்போது கோகோ கோலாவுடன் இணைந்து அந்த மாடல் போனை கோகோ கோலா பிராண்டில் வெளியிட இருக்கிறது.

மேலும் படிக்க | ஜியோவின் 4ஜி மொபைல் இலவசம்...! 2 ஆண்டுகளுக்கு ரீசார்ஜ் செய்ய வேண்டியதில்லை

Realme is set to get really refreshing என்ற கேப்சனுடன் மொபைலின் டீசர் வெளியாகி இருக்கிறது. இருப்பினும், அந்த ஸ்மார்ட்போனின் விவரக்குறிப்புகள் பற்றிய விவரங்கள் எதுவும் வெளியிடப்படவில்லை. ஆனால் வதந்திகளின் அடிப்படையில் Realme 10 4G-ல் உள்ள அதே விவரக்குறிப்புகள் Coca Cola ஃபோனில் இடம்பெறும் என கூறப்படுகிறது. Realme 10 4G இந்தியாவில் ரூ.13,999 ஆரம்ப விலையில் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. 

Realme 10 4G விவரக்குறிப்புகள்

Realme 10 4G ஆனது MediaTek Helio G99 SoC உடன் 4GB அல்லது 8GB RAM உடன் இணைக்கப்பட்டுள்ளது. இந்த போன் 64ஜிபி மற்றும் 128ஜிபி UFS 2.2 சேமிப்பகத்துடன் வருகிறது. சேமிப்பக விரிவாக்கத்திற்கான மைக்ரோ எஸ்டி கார்டு ஸ்லாட்டையும் கொண்டுள்ளது. இது ஆண்ட்ராய்டு 13க்கு மாறாக Realme UI 3.0 அடிப்படையிலான ஆண்ட்ராய்டு 12 இல் இயங்குகிறது. Realme 10 ஆனது 33W வயர்டு ஃபாஸ்ட் சார்ஜிங்கிற்கான ஆதரவுடன் 5000mAh பேட்டரியைக் கொண்டுள்ளது. இது 28 நிமிடங்களில் ஃபோனை 50 சதவீதம் வரை சார்ஜ் செய்ய முடியும்.

ஸ்மார்ட்போனில் 2400x1080 6.4-இன்ச் சூப்பர் AMOLED டிஸ்ப்ளே 90Hz புதுப்பிப்பு வீதம் மற்றும் 360Hz தொடு மாதிரி வீதம் உள்ளது. இது 1000 nits இன் உச்ச பிரகாசத்தைக் கொண்டுள்ளது மற்றும் Gorilla Glass 5 ஆல் பாதுகாக்கப்படுகிறது. Realme 10 ஆனது 50-மெகாபிக்சல் மெயின் ஷூட்டர் மற்றும் 2-மெகாபிக்சல் டெப்த் சென்சார் கொண்ட பின்புறத்தில் இரட்டை கேமரா அமைப்பைக் கொண்டுள்ளது. முன்பக்கத்தில், Realme 10 செல்ஃபிக்களுக்காக 16 MP கேமராவைக் கொண்டுள்ளது.

மேலும் படிக்க | ஜியோவின் 4ஜி மொபைல் இலவசம்...! 2 ஆண்டுகளுக்கு ரீசார்ஜ் செய்ய வேண்டியதில்லை

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

 

Trending News