TNDTE டிப்ளோமா தேர்வு முடிவு அறிவிக்கப்பட்டது; tndte.gov.in

2019 அக்டோபர் மாதத்தில் நடைபெற்ற டிப்ளோமா தேர்வு முடிவுகள் (Polytechnic Result 2020) தமிழ்நாடு தொழில்நுட்பக் கல்வி இயக்கம் வெளியிட்டுள்ளது. 

Written by - ZEE TAMIL NEWS | Last Updated : Jan 11, 2020, 03:24 AM IST
TNDTE டிப்ளோமா தேர்வு முடிவு அறிவிக்கப்பட்டது; tndte.gov.in title=

சென்னை: 2019 அக்டோபர் மாதத்தில் நடைபெற்ற டிப்ளோமா தேர்வு முடிவுகள் (Polytechnic Result 2020) தமிழ்நாடு தொழில்நுட்பக் கல்வி இயக்கம் (Tamil Nadu Directorate of Techinical Education) தனது tndte.gov.in என்ற இணையதளத்தில் நேற்று (வெள்ளிக்கிழமை) வெளியிட்டுள்ளது. 

தேர்வில் தேர்ச்சி பெற்றவர்கள் தங்கள் முடிவை TNDTE இன் அதிகாரப்பூர்வ இணையதளத்தில் tndte.gov.in இல் பார்க்கலாம் என்றும், அதேநேரத்தில் ஒரே சமயத்தில் அதிகம் பேர் முடிவுகளை பார்ப்பதால் அதிகாரப்பூர்வ வலைத்தளம் மெதுவாக இயங்குவதால் மாணவர்கள் முடிவைப் பார்ப்பதில் சிரமத்தை சந்திக்க நேரிடும் என்றும் கூறப்பட்டு உள்ளது.

www.tndte.gov.in ஐ புதிய புள்ளி வலைத்தள இணைப்பில் காணலாம். அக்டோபர் 2019 டிப்ளோமா தேர்வு தனிப்பட்ட முடிவு 112.133.214.75/result_Oct2019 என்ற URL இல் கிடைக்கிறது. 

எப்படி தேர்வு முடிவுகளை தெரிந்துக்கொள்வது:
படி 1: முதலில் தேர்வு எழுதியவர்கள் tndte.gov.in என்ற இணையதளத்துக்குச் செல்ல வேண்டும்
படி 2: வலைதளத்தின் முகப்பு பக்கத்தில் "டிப்ளோமா ரிசல்ட் 2019" என்று இருக்கும். அதனை க்ளிக் செய்ய வேண்டும்.
படி 3: இப்போது தேர்வு முடிவுகள் அடங்கிய பக்கம் திறக்கப்படும்.
படி 4: அதில் கேட்கப்படும் விவரங்களை பதிவு செய்த பின்னர் தேர்வு முடிவுகளை தெரிந்து கொள்ளலாம்.

உங்களுக்கு சுவாரஸ்யமான சிறப்பு செய்தி, முக்கிய செய்திகள், அரசியல் குறித்து விவரங்களை தெரிந்துக்கொள்ள நமது ZEE HINDUSTAN TV ஐ பாருங்கள். தற்போது ஹிந்தி, தமிழ் மற்றும் தெலுங்கு மொழிகளில் ஒளிப்பரப்பாகிறது.

 

Trending News