ஒன்பிளஸ் தனது வரவிருக்கும் Oneplus Nord 2 ஸ்மார்ட்போனை விரைவில் அறிமுகப்படுத்த தயாராகி வருகிறது. நிறுவனம் சமீபத்தில் தனது நோர்ட் சீரிஸில் புதிய OnePlus Nord CE 5G ஐ அறிமுகப்படுத்தியது. தகவல்களின்படி, Oneplus ஜூலை 24 அன்று அதிகாரப்பூர்வமாக ஒன்பிளஸ் நோர்ட் 2 ஐ வெளியிட முடியும்.
OnePlus Nord 2 5G தனது நார்டு 2 5ஜி ஸ்மார்ட்போன் மீடியாடெக் (MediaTek) டிமென்சிட்டி 1200 ஏ.ஐ. பிராசஸர் கொண்டிருக்கும். இந்த ஸ்மார்ட்போன் ஏ.ஐ. சார்ந்த பல்வேறு அம்சங்களை கொண்டிருக்கும். இதற்காக ஒன்பிளஸ் மற்றும் மீடியாடெக் நிறுவனங்கள் இணைந்து தற்போது மிகுந்த கவனத்துடன் பணியாற்றி இருக்கின்றன.
ALSO READ | 44 மெகாபிக்சல் செல்பி கேமராவுடன் Vivo S9 சீரிஸ் மார்ச் 3 அறிமுகம்!
இந்த பிராசஸரின் செயல்திறன் டிமென்சிட்டி 1200-ஐ விட வித்தியாசமானதாக இருக்கும். ஒன்பிளஸ் நார்டு 2 5ஜி மாடல் ஏ.ஐ. தொழில்நுட்பத்தின் உதவியுடன் புகைப்படங்களை மிக தெளிவாக எடுக்கும். புதிய ஒன்பிளஸ் நார்டு 2 5ஜி மாடல் விரைவில் இந்திய சந்தையில் அறிமுகமாக இருக்கிறது. இந்த புதிய ஒன்பிளஸ் ஸ்மார்ட்போன் அமேசான் தளத்திலேயே விற்பனை செய்யப்பட இருக்கிறது. ஒன்பிளஸ் நார்டு 2 5ஜி ஸ்மார்ட்போன் இம்மாத இறுதியில் அறிமுகம் செய்யப்படும் என தகவல்கள் கசிந்து வருகின்றது.
91 மொபைல்ஸ் வழியாக கிடைத்த தகவல்களின்படி, ஒன்பிளஸ் நோர்ட் 2 ட்ரிபிள் ரியர் கேமரா அமைப்பு மற்றும் ஹோல்-பஞ்ச் டிஸ்ப்ளே வடிவமைப்புடன் வரும். இதில் மீடியாடெக் டைமன்சிட்டி 1200 SoC இடம்பெறலாம். இத டிஸ்பிளே 90Hz ரெஃப்ரெஷ் ரேட் கொண்ட AMOLED ஆக இருக்கும் என்றும் கூறப்படுகிறது. மேலும் இது டிஸ்ப்ளேவின் மேல் இடது மூலையில் செல்பீ ஸ்னாப்பருக்கான ஹோல் பஞ்ச் கட்அவுட்டையும் கொண்டிருக்கும்.
ஒன்பிளஸ் நோர்ட் 2 ஸ்மார்ட்போன் ஒரு ட்ரிபிள் கேமரா அமைப்பைக் கொண்டிருக்கலாம். ஒன்பிளஸ் நோர்ட் 2 ஸ்மார்ட்போன் ஆனது அளவீட்டில் 160x73.8x8.1 மிமீ இருக்கு என்றும் கூறப்படுகிறது. மைஸ்மார்ட் ப்ரைஸ் வலைதளத்தின் படி ஒன்பிளஸ் நோர்ட் 2 ஸ்மார்ட்போனின் இந்திய விலை நிர்ணயம் ரூ.29,999 ஆக இருகலாம்.
ALSO READ | OnePlus Nord CE 5G: OnePlus Nord CE 5G ஸ்மார்ட்போன் அறிமுகம்
உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக ஊடகங்களில் எங்களை பின்தொடருங்கள்.
முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூகம், வேலைவாய்ப்பு என உள்ளூர் முதல் உலகம் முழுவதும் அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் வாசிக்க, ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்.
Android Link: https://bit.ly/3hDyh4G
Apple Link: https://apple.co/3loQYeR