விரைவில் வெளியாகும் OnePlus 12 ஸ்மார்ட்போன்! இத்தனை சிறப்பம்சங்களா?

OnePlus 12: ஒன்ப்ளஸ் 12 ஆனது குவால்கமின் புதிய ஸ்னாப்ட்ராகன் 8 ஜென் எஸ்ஓசி 3 ஐப் பயன்படுத்துவதாகக் கூறப்பட்டாலும், சிப் தயாரிப்பாளரால் இது இன்னும் அறிவிக்கப்படவில்லை.   

Written by - RK Spark | Last Updated : May 28, 2023, 09:52 AM IST
  • புதிய சிப்செட் பொதுவாக நவம்பர் அல்லது டிசம்பரில் ஆண்டின் இறுதியில் வெளியிடப்படலாம்.
  • ஒன்பிளஸ் 12 ஆனது பின்புறத்தில் இரட்டை கேமரா அமைப்பைக் கொண்டிருப்பதாக கூறப்படுகிறது.
  • ஒன்ப்ளஸ் 11 ஸ்மார்ட்போன் பிப்ரவரி மாதத்தில் இந்தியாவில் அறிமுகப்படுத்தப்பட்டது.
விரைவில் வெளியாகும் OnePlus 12 ஸ்மார்ட்போன்! இத்தனை சிறப்பம்சங்களா? title=

OnePlus 12: இந்த வருடத்தின் தொடக்கத்தில் ஒன்ப்ளஸ் 11 ஸ்மார்ட்போன் அறிமுகப்படுத்தப்பட்டது, இதோடு அடுத்த ஜென் சாதனம் பற்றிய விவரங்கள் ஆன்லைனில் கொடுக்கப்பட்டுள்ளது.  இந்நிறுவனத்தின் மிகவும் விலையுயர்ந்த சலுகையாக கருதப்படும் ஒன்ப்ளஸ் 12 ஸ்மார்ட்போன் ஆனது ஒரு முதன்மை சிப்பைக் கொண்டிருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.  இந்த ஸ்மார்ட்போன் வேகமாக சார்ஜ் செய்யும் தொழில்நுட்பம் மற்றும் பெரிய பேட்டரிக்கான ஆதரவை வழங்குகிறது.  இதுதவிர சிறந்த ஜூம் திறன்களுக்காக இது பெரிஸ்கோப் லென்ஸுடன் வருவதாகவும் கூறப்படுகிறது.  இப்போது ஒன்ப்ளஸ் 12 ஸ்மார்ட்போனின் சிறப்பம்சங்களை பற்றி முழுமையாக பார்க்கலாம்.  ஒன்ப்ளஸ் 12 ஆனது குவால்கமின் புதிய ஸ்னாப்ட்ராகன் 8 ஜென் எஸ்ஓசி 3 ஐப் பயன்படுத்துவதாகக் கூறப்பட்டாலும், சிப் தயாரிப்பாளரால் இது இன்னும் அறிவிக்கப்படவில்லை.  புதிய சிப்செட் பொதுவாக நவம்பர் அல்லது டிசம்பரில் ஆண்டின் இறுதியில் வெளியிடப்படலாம், எனவே அடுத்த ஆண்டு அறிமுகமாகும் ஃபிளாக்ஷிப் மொபைல்களில் புதிய சிப் பயன்படுத்தப்படலாம்.

மேலும் படிக்க | OPPO Smartphone: இந்தியாவில் அறிமுகமாகும் Oppo F23 5G! விலை மற்றும் சிறப்பம்சங்கள்!

ஒன்பிளஸ் 12 ஆனது பின்புறத்தில் இரட்டை கேமரா அமைப்பைக் கொண்டிருப்பதாக கூறப்படுகிறது.  பின்புறத்தில் இரண்டு 50 மெகாபிக்சல் கேமராக்கள் மற்றும் பெரிஸ்கோப் லென்ஸுடன் 64 மெகாபிக்சல் சென்சார் ஆகியவை இதில் இடம்பெற்றிருக்கும்.  100W ஃபாஸ்ட் சார்ஜிங் தொழில்நுட்பத்திற்கான ஆதரவுடன் 5,000எம்ஏஹெச் பேட்டரியைக் காணலாம்.  புதிய ஒன்பிளஸ் ஸ்மார்ட்போன் 6.7 இன்ச் டிஸ்ப்ளேவுடன், அதிக கியூஹெச்டி தெளிவுத்திறனில் செயல்படும் என்றும், பேனல் 120Hz-ல் புதுப்பிக்கப்படும்.  ஒன்பிளஸ் 12 இந்த ஆண்டு டிசம்பர் மாதத்தில் அறிமுகப்படுத்தப்படும், ஆனால் அது சீனாவில் தான் அறிமுகப்படுத்தப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.  அடுத்த ஆண்டில் தான் இந்த சாதனம் உலகளவில் விற்பனைக்கு கொண்டு வரப்பட்டும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.  ஒன்ப்ளஸ் 11 ஸ்மார்ட்போன் பிப்ரவரி மாதத்தில் இந்தியாவில் அறிமுகப்படுத்தப்பட்டது.  ஃபிளாக்ஷிப்பை சற்று முன்னதாகவே ஒன்ப்ளஸ் அறிமுகப்படுத்தக்கூடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.  

ஒன்ப்ளஸ் 11 இந்தியாவில் ரூ. 56,999 விலையில் கிடைத்த நிலையில், தற்போது அறிமுகமாகப்போகும் ஒன்ப்ளஸ் 12 ஸ்மார்ட்போனும் இதேபோன்ற விலை வரம்பில் கிடைக்கப்பெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.  ஏனெனில் நிறுவனம் இந்த பிரிவை அதன் முதன்மை தொலைபேசிக்காக இலக்காகக் கொண்டுள்ளது.  எனவே, புதிய ஒன்ப்ளஸ் 12 இந்தியாவில் அறிமுகப்படுத்தப்படும் போது இந்தியாவில் ரூ.60,000க்குள் இருக்கும் என்று எதிர்பார்க்கலாம்.  இந்த ஸ்மார்ட்போனை பல இ-காமர்ஸ் தளங்கள் மற்றும் ஆஃப்லைன் ஸ்டோர்கள் மூலம் வாங்கி கொள்ளலாம்.

மேலும் ஒன்பிளஸ் ஸ்மார்ட்போன்கள் தற்போது மலிவாக வாங்க வாய்ப்பு கிடைத்துள்ளது. இ-காமர்ஸ் இணையதளமான அமேசான் தற்போது ஒன்பிளஸ் போன்களுக்கு தள்ளுபடி சலுகைகளை தருகிறது. OnePlus ஃபோன்களில் கிடைக்கும் சலுகைகள் பற்றி தெரிந்து கொள்வோம்.  OnePlus Nord 2T 5G ஃபோனில் 6.43 இன்ச் டிஸ்ப்ளே மற்றும் ஆண்ட்ராய்டு 12 பொருத்தப்பட்டுள்ளது. இதில் 50எம்பி மெயின் மற்றும் 32எம்பி செல்பீ கேமரா உள்ளது. ஸ்மார்ட்போனில் Mediatek Dimensity 1300 செயலியுடன் 4500mAh பேட்டரி உள்ளது, இது 80W SuperVOOC சார்ஜிங் வேகத்துடன் வருகிறது. 8ஜிபி ரேம் மற்றும் 128ஜிபி சேமிப்பு கொண்ட இந்த போன் அமேசானில் ரூ.28,998க்கு கிடைக்கிறது. OnePlus 10R 5G ஃபோன் 12 ஜிபி ரேம் மற்றும் 256 ஜிபி வரை சேமிப்பகத்துடன் வருகிறது. இது 50MP பிரதான கேமரா மற்றும் 6.7 இன்ச் டிஸ்ப்ளே கொண்டுள்ளது. இந்த கைபேசியில் MTK D8100 Max, 5000mAh பேட்டரி மற்றும் ஆண்ட்ராய்டு 12 போன்ற அம்சங்களுடன் வருகிறது. இதன் விலை 34,999 ரூபாயில் இருந்து தொடங்குகிறது.

மேலும் படிக்க | விற்பனையில் சரித்திரம் படைத்த ஐபோனை வெறும் ரூ. 9,140-க்கு வாங்குவது எப்படி?

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News