பிரபலமான மெசேஜிங் செயலியான வாட்ஸ்அப் புதிய அப்டேட்டுகளை சரமாரியாக களமிறக்கிக் கொண்டிருகிறது. அண்மையில் வாட்ஸ்அப்பில் சேனல்களை அறிமுகப்படுத்திய நிலையில், மற்றொரு புதிய அம்சத்தை வாட்ஸ்அப் அறிமுகப்படுத்துகிறது. இது குறித்து மெட்டா தலைமை நிர்வாக அதிகாரி மார்க் ஜுக்கர்பெர்க் பேசும்போது விரைவில் பயனர்கள் ஒரே நேரத்தில் இரண்டு வாட்ஸ்அப் கணக்குகளைப் பயன்படுத்த முடியும் என்று அறிவித்திருக்கிறார். ஃபேஸ்புக்கில் ஜுக்கர்பெர்க் எழுதியிருக்கும் ஒரு பதிவில், "WhatsApp-ல் இரண்டு கணக்குகளுக்கு மாறவும் - விரைவில் நீங்கள் வாட்ஸ்அப் செயலியில் ஒரு தொலைபேசியில் இரண்டு WhatsApp கணக்குகளை வைத்திருக்க முடியும்" என்று தெரிவித்துள்ளார்.
இந்த அம்சம் யூசர்களின் பல ஆண்டு கோரிக்கைகளில் ஒன்றாகும். அப்டேட்டில் சேர்க்க வேண்டும் என தொடர்ச்சியாக மார்க் ஜூக்கர் பெர்கை யூசர்கள் வலியுறுத்தி வந்த நிலையில், அந்த அம்சத்தை சேர்ப்பதாக கூறி வந்தார். இப்போது விரைவில் பயன்பாட்டுக்கு வரும் என்றும் அறிவித்திருக்கிறார். பலர் கோரிய புதிய அம்சம், பல WhatsApp கணக்குகளைப் பயன்படுத்தும் பயனர்களுக்கு பெரும் உதவியாக இருக்கும். முன்னதாக, வாட்ஸ்அப்பில் பல கணக்குகளைப் பயன்படுத்த, பயனர்கள் ஒரு வாட்ஸ்அப்பில் இருந்து வெளியேறி, மற்றொரு கணக்குடன் உள்நுழைய வேண்டும். இதன் மூலம் பல்வேறு நோக்கங்களுக்காக பல கணக்குகளைப் பயன்படுத்துபவர்களுக்கு சிக்கல்களை உருவாக்கும். இருப்பினும், இப்போது, பயனர்கள் இரண்டு சிம் கார்டுகள்/ஃபோன் எண்கள் இருந்தால், ஒரே சாதனத்தில் இரண்டு கணக்குகளைப் பயன்படுத்தலாம்.
மேலும் படிக்க | 56GB டேட்டா... அன்லிமிடட் டேட்டா - ஜியோவின் பம்பர் ப்ரீபெய்ட் திட்டம்!
ஒரே சாதனத்தில் இரண்டு WhatsApp கணக்குகளை அமைப்பது எப்படி:
- வாட்ஸ்அப்பில் ஒரே நேரத்தில் பயன்படுத்த இரண்டு கணக்குகளை அமைப்பது ஒரு எளிய செயல்.
- முதலில், ஒருவர் 'Settings'-க்கு செல்ல வேண்டும்.
- 'Settings' என்பதன் கீழ், உங்கள் பெயருக்கு அடுத்ததாக ஒரு சிறிய அம்புக்குறி இருக்கும் - அதைத் தட்டி 'Add Account' என்பதைத் தேர்ந்தெடுக்கவும்.
- முடிந்ததும், உங்கள் இரண்டாவது ஃபோன் எண்ணை உள்ளிட்டு, அந்த எண்ணுக்கு அனுப்பப்பட்ட OTP-ஐ சரிபார்த்து, நீங்கள் செல்லலாம்.
இரண்டு தனித்தனியான WhatsApp கணக்குகளுக்கு சுவிட்ச் செய்வது எப்படி?
ஒரே சாதனத்தில் இரண்டு வாட்ஸ்அப் கணக்குகளுக்கு இடையே மாறுவது இன்னும் எளிதானது - உங்கள் பெயருக்கு அடுத்துள்ள அம்புக்குறியைத் தட்டுவதன் மூலம் மற்றொரு கணக்குகளுக்கு சுவிட்சாகலாம்
தெரிந்து கொள்ள வேண்டிய மற்ற விஷயங்கள்:
நீங்கள் வாட்ஸ்அப்பில் இரண்டு கணக்குகளைப் பயன்படுத்துகிறீர்கள் என்றால், கவனிக்க வேண்டிய சில விஷயங்கள் உள்ளன. விருப்பத்தேர்வுகள், நோடிபிகேஷன் மற்றும் செட்டிங்ஸ் உட்பட ஒவ்வொரு கணக்கிற்கும் அதன் சொந்த அமைப்புகள் தனித்தனியாகவே இருக்கும். ஒவ்வொரு கணக்கிற்கும் தனித்தனியாக சாட்களை பிளாக்செய்ய அல்லது பேக்கப் எடுக்க, செய்திகளை நீக்கவும் செட்டிங்ஸ்களை அமைத்துக் கொள்ளலாம்.
அப்டேட் எப்போது வெளியிடப்படும்?
வாட்ஸ்அப்பின் பீட்டா மற்றும் நிலையான பதிப்புகள் இரண்டிலும் அப்டேட் ஏற்கனவே வெளியிடப்பட்டுள்ளது. பயனர்கள் புதிய அம்சத்தை விரைவில் அணுக முடியும். அதிகாரப்பூர்வ வாட்ஸ்அப்பை மட்டும் பயன்படுத்தவும். உங்கள் மொபைலில் அதிக கணக்குகளைப் பெறுவதற்கு போலி பதிப்புகள் அல்லது போலி பதிப்புகளைப் பதிவிறக்க வேண்டாம். அதிகாரப்பூர்வ வாட்ஸ்அப்பைப் பயன்படுத்தும் போது மட்டுமே உங்கள் செய்திகள் பாதுகாப்பாகவும் பிரைவசியாகவும் இருக்கும்" என்று மெட்டாவு எச்சரிக்கை அறிவுறுத்தலை வழங்கியுள்ளது.
மேலும் படிக்க | நவராத்திரிக்கு பம்பர் ஆப்பர்... 50 GB டேட்டாவை வாரி வழங்கும் வோடபோன்!
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ