அதிகளவில் மக்கள் பயன்படுத்தும் செயலிகளில் முன்னணி வகிப்பது Whatsapp செயலி. கடந்த சில காலங்களாகவே Whatsapp தீவிரமாக செயல்பட்டு பல அப்டேட்டுகளை தந்து கொண்டிருக்கிறது. அந்த வகையில் தற்போது Whatsapp-ல் குறுஞ்செய்தி வரும்போது திரையில் புகைப்படத்துடன் கூடிய நோட்டிபிகேஷன் வசதியை அறிமுகம் செய்துள்ளது. அதே சமயம் இந்த வசதி apple ios beta பயனாளர்களுக்கு மட்டுமே செயல்படும் என்றும் மற்ற பயனாளர்களுக்கு இந்த வசதி தற்போது செயல்படாது என்றும் கூறப்பட்டுள்ளது.
ALSO READ | iPhone 12 Mini பம்பர் தள்ளுபடி, மிஸ் பண்ணிடாதீங்க அப்புறம் வருத்தப்படுவீங்க
WaBetalInfo தளத்தில் Whatsapp நிறுவனம் இதுகுறித்த அறிவிப்பை வெளியிட்டுள்ளது. இந்த புதிய அப்டேட்டின் படி Whatsappல் ஒரு நபரிடம் இருந்தோ அல்லது குழுவிலிருந்தோ ஒரு பயனர் குறுஞ்செய்தியை பெறும்போது, குறுஞ்செய்தி அனுப்பியவரின் புகைப்படமும் திரையில் தோன்றும். இந்த அம்சம் தற்போது ios 15 beta பயனாளர்களுக்கு மட்டுமே பயன்படும் என்று கூறப்பட்டுள்ளது. மேலும் இன்னும் பல பயனாளர்களுக்கும் விரைவில் இந்த வசதியை செயல்படுத்தும் நோக்கில் Whatsapp நிறுவனம் தீவிரமாக வேலை செய்து வருகிறது. Whatsapp நிறுவனம் தற்போது மெட்டா நிறுவனத்திற்கு மாறியதிலிருந்து, அதிகளவில் புதுமையான சேவைகளை மக்களுக்கு வழங்க முயற்சி மேற்கொண்டு வருகிறது. பேஸ்புக் மற்றும் இன்ஸ்டாகிராமில் குறுஞ்செய்திகளுக்கு ரியாக்ட் செய்யும் வசதி இருப்பது போல் Whatsapp-லும் வசதி அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
இந்த அம்சத்தில் பயனர்கள் டைப் செய்யவேண்டிய தேவையில்லை, அதனையடுத்து குறுஞ்செய்தியை டெலீட் செய்வதற்கான கால அளவையும் நீடித்துள்ளது. மேலும் இந்த வருடத்தில் புகைப்படத்துடன் கூடிய நோட்டிபிகேஷன் அமசத்தை இந்நிறுவனம் அறிமுகப்படுத்துவதன் மூலம், பயனர்கள் யார் குறுஞ்செய்தியை அனுப்பியுள்ளார்கள் என்பதை புகைப்படத்தை வைத்து எளிதில் பார்த்துவிடலாம் என்பது குறிப்பிடத்தக்கது.
ALSO READ | Jio வாடிக்கையாளர்களுக்கு சூப்பர் செய்தி: இந்த வழியில் இலவசமாக கிடைக்கும் 43gb data
உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.
முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR