அடுப்பங்கரையில் சமையல் செய்ய டிப்ஸ் ஃபார்வர்டு செய்வது முதல் ஆபீஸ் பணிகளை பரிமாறிக்கொள்வது வரை என, உலகமே இன்று வாட்ஸ் ஆப்பில்தான் இயங்கிவருகிறது. நாளுக்குநாள் பெருகிவரும் பயனர்களைத் தக்கவைக்கும் முயற்சியாகவும், போட்டி நிறுவனங்களை முந்திக்கொண்டு பயனர்களுக்கு முதலாவதாக வசதிகளை அறிமுகம் செய்யும் விதமாகவும் அவ்வப்போது பல்வேறு அம்சங்களை அறிமுகப்படுத்திவருகிறது வாட்ஸ் ஆப் நிறுவனம்.
அண்மையில், வாய்ஸ் மெசெஜ் வசதியில் புதிய மாற்றத்தைக் கொண்டுவந்த வாட்ஸ் ஆப், வாய்ஸ் மெசேஜை pause செய்து அனுப்பிக்கொள்ளும் வசதியை அறிமுகம் செய்தது. இந்நிலையில் தற்போது புதிய வசதி ஒன்றைக் கொண்டுவரவுள்ளதாம் அந்நிறுவனம்.
மேலும் படிக்க | நம்பரை சேமிக்காமல் வாட்ஸ்அப்பில் மெசேஜ் செய்வது எப்படி?
வாட்ஸ் ஆப்பில் தற்போது 100 எம்.பி வரைக்கும் மட்டுமே ஃபைல்களை அனுப்பும் வசதி இருந்துவருகிறது. பெரிய ஃபைல்களை அனுப்புவதானால் அவற்றை ஒரே நேரத்தில் அனுப்ப இயலாது. இதில் கூடுதல் வசதிகளைக் கொண்டுவரவேண்டும் என பயனர்கள் தொடர்ந்து கோரிக்கையும் வைத்து வைத்தனர். இந்நிலையில் இதில்தான் தற்போது புதிய வசதியைக் கொண்டுவரவுள்ளதாம் வாட்ஸ் ஆப்.
அதன்படி, 100 எம்.பிக்குப் பதிலாக இனிமேல் 2ஜிபி வரைக்கும்கூட ஃபைல்களை அனுப்பிக் கொள்ளமுடியுமாம். வாட்ஸ் ஆப்பின் ஐஓஎஸ் மற்றும் ஆண்ட்ராய்டில் இதற்கான சோதனை முயற்சிகள் நடந்துவருவதாகவும் விரைவில் பொதுமக்களின் பயன்பாட்டுக்கு இது கொண்டுவரப்படும் எனவும் கூறப்படுகிறது. இந்தத் தகவலானது வாட்ஸ் அப் பயனர்கள் மத்தியில் உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளது.
மேலும் படிக்க |Whatsapp-ல் இந்த அம்சங்கள் கூட இருக்கா?
உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, டிவிட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR