நிலவில் கூடிய விரைவில் 4G Network: அசத்தும் NASA, Nokia ஜோடி!!

நமக்கு வீட்டிலோ வெளியிலோ செல்போன் சிக்னல் கிடைக்கவில்லை என்றால், நாம் பொறுமையை இழக்கிறோம், கோவம் அதிகமாகிறது. ஆனால் இப்போது நிலவிற்கு போனாலும், நமக்கு சிக்னல் கிடைக்கும்.

Written by - ZEE TAMIL NEWS | Last Updated : Oct 20, 2020, 04:16 PM IST
  • நாசா நிலவில் 4 ஜி நெட்வொர்க்குக்கான் ஏற்பாடுகளை செய்து வருகிறது.
  • பெல் லேப்ஸ் ஒரு சிறிய செல் தொழில்நுட்பத்தை உருவாக்க உதவியது.
  • ராக்கெட்டில் இவற்றை வைப்பதும் எளிதாக இருக்கும்.
நிலவில் கூடிய விரைவில் 4G Network: அசத்தும் NASA, Nokia ஜோடி!! title=

நியூயார்க்: நமக்கு வீட்டிலோ வெளியிலோ செல்போன் சிக்னல் கிடைக்கவில்லை என்றால், நாம் பொறுமையை இழக்கிறோம், கோவம் அதிகமாகிறது. ஆனால் இப்போது நிலவிற்கு போனாலும், நமக்கு சிக்னல் கிடைக்கும். ஆம்!! உண்மைதான். நாசா (NASA) நிலவில் 4 ஜி நெட்வொர்க்குக்கான் ஏற்பாடுகளை செய்து வருகிறது.

நிலவில் (Moon) ஒரு தளத்தை உருவாக்குவதற்கும், அங்கு மனித இருப்பைத் தக்கவைத்துக்கொள்வதற்குமான தனது 2028 இலக்கை அடைய, நாசா, நிலவில் தொழில்நுட்பத்திற்கான சூழலை உருவாக்க, ஒரு டஜன் நிறுவனங்களுக்கு 370 மில்லியன் டாலர்களை வழங்கியது.

அந்த கண்டுபிடிப்புகளில் தொலை மின் உற்பத்தி, கிரையோஜெனிக் முடக்கம், ரோபாட்டிக்ஸ், பாதுகாப்பான தரையிறக்கம் மற்றும் 4 ஜி ஆகியவை அடங்கும். 4ஜி இணைப்பு இல்லாவிடில், விண்வெளி வீரர்கள் நிலவில் தாங்கள் ஆடும் கோல்ஃப் ஷாட்களையும் லூனார் ரோவர் செல்பிகளையும் எப்படி ட்வீட் செய்வார்கள்? யோசிக்க வேண்டிய விஷயம்தான்!!

நிலவில் தற்போதுள்ள வானொலி தரங்களை விட 4 ஜி அதிக நம்பகமான, நீண்ட தூர தகவல்தொடர்புகளை வழங்க முடியும் என்று நாசா கூறுகிறது. பூமியைப் போலவே, 4 ஜி (4G) நெட்வொர்க் நிலவிலும் இறுதியில் 5 ஜி ஆக மேம்படுத்தப்படும்.

இந்த திட்டத்திற்காக நோக்கியாவின் (Nokia) (NOK) பெல் லேப்ஸுக்கு 14.1 மில்லியன் டாலர் வழங்கப்பட்டது. முன்பு AT&T ஆல் இயக்கப்பட்ட பெல் லேப்ஸ், 4G-LTE நெட்வொர்க்கை உருவாக்க விண்வெளிப் பயணம் பொறியியல் நிறுவனமான இண்ட்யூடிவ் மெஷின்சுடன் கூட்டுசேரும்.

4 ஜி நிலவில் பூமியை விட நன்றாக இயங்கும். ஏனெனில், அங்கு 4 ஜி சிக்னலில் தலையிட எந்த மரங்களும், கட்டிடங்களும், டிவி சிக்னல்களும் இருக்காது என சிலர் வேடிக்கையாக சொல்லிக்கொண்டிருக்கிறார்கள். நிலவின் செல்லுலார் நெட்வொர்க் நிலவின் மேற்பரப்பின் சூழல்களைத் தாங்கும் வகையில் சிறப்பாக வடிவமைக்கப்பட்டுள்ளது. தீவிர வெப்பநிலை, கதிர்வீச்சு மற்றும் விண்வெளியின் வெற்றிடம் ஆகியவற்றிற்கு இது ஈடு கொடுக்கும். ராக்கெட்டுகள் நிலவின் மேற்பரப்பில் கணிசமான அதிர்வை ஏற்படுத்தினாலும், நிலவி ஏற்படும் தரையிறக்கங்கள் மற்றும் ஏவுதல்களின் போது இந்த சிக்னல் தொடர்ந்து செயல்படும்.

ALSO READ: Mi 80W Wireless Charging: வெறும் 19 நிமிடங்களில் முழு பேட்டரியை சார்ஜ் செய்யலாம்!

விண்வெளி வீரர்கள் வயர்லெஸ் நெட்வொர்க்கை தரவு பரிமாற்றம், சந்திர ரோவர்களைக் கட்டுப்படுத்துதல், சந்திர புவியியல் மீது நிகழ்நேர வழிசெலுத்தல் (சந்திரனுக்கான கூகிள் மேப்ஸை நினைத்துப் பாருங்கள்) மற்றும் உயர்-வரையறை வீடியோவின் ஸ்ட்ரீமிங் ஆகியவற்றிற்கு பயன்படுத்துவார்கள் என்று பெல் லேப்ஸ் தெரிவித்துள்ளது. இது பூமியில் உள்ளவர்களுக்கு விண்வெளி வீரர்களின் நிலவு பாய்ச்சலை காண்பிக்கும்.

பூமியில் 4 ஜி நெட்வொர்க் (4G Network) மிகப்பெரிய மின் ஜெனரேட்டர்கள் மற்றும் ரேடியோக்களைக் கொண்ட மாபெரும் செல் கோபுரங்களால் இயக்கப்படுகிறது. பெல் லேப்ஸ் ஒரு சிறிய செல் தொழில்நுட்பத்தை உருவாக்க உதவியது. ஆனால் அவை வரம்பில் மிகவும் மட்டுப்படுத்தப்பட்டவை, ஆனால் பாரம்பரிய செல் கோபுரங்களை விட மிகக் குறைந்த சக்தியைப் இவை பயன்படுத்துகின்றன. மேலும் ராக்கெட்டில் இவற்றை வைப்பதும் எளிதாக இருக்கும். அந்த சிறிய செல் தொழில்நுட்பம் தற்போது உலகம் முழுவதும் 5 ஜி நெட்வொர்க்குகளுக்கு பயன்படுத்தப்படுகிறது.

ALSO READ: 3 தமிழக மாணவர்களால் உருவாக்கப்பட்ட Nano Satellite-ஐ செலுத்தவுள்ளது NASA

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G

Apple Link - https://apple.co/3loQYeR

Trending News