தன் பேட்டரி திறனால் தனி புகழ் பெற்ற Motorola நிறுவனம் தனது முதல் Android Go மொபைலான Moto E5 Play-னை ஐரோப்பாவில் அறிமுகம் செய்துள்ளது!
Android Oreo Go 8.1 இயங்குத்தளத்தில் வெளியாகியுள்ள இந்த Moto E5 Play மொபைல் ஆனது இதற மொபைல்களை காட்டிலும் அதிக வேகத்துடனும், அதிக பேட்டரி திறனும் கொண்டு வெளியாகிறது என Motorola நிறுவனம் தெரிவித்துள்ளது.
குறைந்த கொள்ளலவு ஆட்கொள்ளும் செயலிகளை கொண்டு வருவது மட்டும் இன்றி இந்த மொபைல் ஆனது Google-ன் Go பதிப்பின் செயலிகளையும் முன்னதாகவே பதிவேற்றி வருகின்றது எனவும் Motorola நிறுவனம் தெரிவித்துள்ளது.
Moto E5 Play சிறப்பம்சங்கள்...
- Qualcomm Snapdragon 425 இயங்குதளம்
- 1GB RAM
- 16GB நினைவகம்.
- 5.3-inch 18:9 LCD தொடுதிரை
- 2100mAh பேட்டரி
ஆகிய சிறப்பம்சங்களுடன் வெளிவரும் இந்த மொபைல் ஆனது கருமை, சாம்பள் நிறம் மற்றும் டார்க் லேக் ஆகிய நிறங்களில் வருகிறது. 109 யூரோ என மதிப்பிடப்பட்டுள்ள இந்த மொபைல் ஆனது இந்திய மதிப்பில் Rs 8,700 என மதிப்பிடபட்டுள்ளது.