காட்டுக்கே ராணின்னாலும், குட்டிக்கு நான் தான் அம்மா! சிங்கத் தாயின் பாசம்

Motherhood of Lioness: அருகில் சென்று பார்க்க முடியாத விலங்குகளின் பல அரிய தருணங்களில் அவற்றின் அன்பு ததும்பும் பாச வீடியோக்கள் அதிகம் வைரலாகின்றன

Written by - Malathi Tamilselvan | Last Updated : Oct 2, 2022, 06:35 PM IST
  • சிங்கமா இருந்தாலும் அம்மா, அம்மா தான்!
  • கர்ஜிக்கும் சிங்கத்தின் பாச முகம்
  • சீறும் சிங்கமாக வளர்வதற்கு முன் தாயின் அரவணைப்பில் கட்டுண்டு கிடக்கும் சிங்கக் குட்டிகள்
காட்டுக்கே ராணின்னாலும், குட்டிக்கு நான் தான் அம்மா! சிங்கத் தாயின் பாசம் title=

வைரல் வீடியோ:  சமூக ஊடகங்களின் வரத்து, நமது வாழ்க்கையில் பல்வேறு மாற்றங்களை ஏற்படுத்தி உள்ளது. சமூக ஊடகங்களில் பதிவிடப்படும் வித வீடியோக்கள் நம்மை பரவசப்படுத்தினால், அவற்றில் சில பயப்படுத்துகின்றன. சமூக ஊடகங்களில் பகிரப்படும் வீடியோக்களில் விலங்குகளின் வீடியோக்களுக்கு நல்ல வரவேற்பு இருக்கிறது. அவற்றில் இருந்து நாம் பல விஷயங்களை கற்றுக் கொள்கிறோம். வழக்கமாய் நாம் பார்க்க முடியாத பல விஷயங்களை இந்த வீடியோக்களில் நாம் காண்கிறோம்.

அருகில் சென்று பார்க்க முடியாத விலங்குகளின் பல அரிய தருணங்களை இவற்றில் கண்டு மகிழ்கிறோம். அன்றாடம் நடைபெறும் வழக்கமான செயல்களில் ஏற்படும் சிறு மாற்றமும் பதிவு செய்யப்பட்டால், அந்த வீடியோ சமூக ஊடகங்களில் பதிவிடப்பட்டு வைரலாகிறது. 

மேலும் படிக்க | பாய்ந்து வந்து மானை தாக்கும் சிங்கம்! தப்ப முடியாமல் கதறும் காட்டு மான்

மனிதர்களுக்கும் விலங்குகளுக்கும் பல்வேறு வேறுபாடுகள் இருந்தாலும், ஒருசில ஒற்றுமைகளும் உள்ளன. பசி, உயிர் வாழ்தல் என்பவற்றைத் தவிர, அன்பு பாசம் என்பதும் இரு உயிரினங்களும் ஒன்றாகவே இருக்கிறது. அவற்றை வெளிப்படுத்தும் விதமும், தன்மையும் மாறுபடலாம். ஆனால், பாசமும் பந்தமும் காட்டில் வசிக்கும் கொடிய விலங்குகளுக்கும் உண்டு.

அப்படியொரு வீடியோ, சமூக ஊடகங்களில் வைரலாகிறது. புலி, சிங்கம் என்ற பெயரைக் கேட்டால் நமக்கு நடுக்கமாக இருக்கலாம். ஆனால், அவற்றின் குட்டிகளுக்கு? சிங்கமாக இருந்தாலும், அதைப் பார்த்து அனைவரும் பயப்பட்டாலும், தனது குழந்தைகளை அன்புடன், பாசத்துடன் அணுகும் சிங்கத் தாயின் வீடியோ வைரலாகிறது.

மேலும் படிக்க | பதுங்கிப் பாயும் புலி! கடைசி நிமிடத்தில் எஸ்கேப் ஆன தோகைமயில்! பெண் மயில்களின் நிலை?

கடுமையான பலம் இருந்தாலும் காட்டு விலங்குகளின் பாசமும் ஊற்றெடுக்கும் என்பதைக் காட்டும் இந்த  வீடியோ இணையத்தில் வைரலாகிறது. சீறிப் பாயும் சிங்கத்தின் வலிமை, தனது குட்டிகளின் முன், பொட்டிப்பாம்பாய் அடங்கிவிடுவதைக் காண முடிகிறது.  

இந்த வீடியோவில் இருக்கும் சிங்கத்திற்கு குட்டிகள் பல இருந்தாலும், அனைத்தையும் தனது அன்பால் அரவணைக்கிறது. அதன் சீற்றம் எங்கே? சிங்க கர்ஜனை எங்கே? ஓ சிங்கப்பெண்ணே என்று இந்த பாசக்கார புலியைப் பார்த்தால் பாடத் தோன்றுகிறதா? 

மேலும் படிக்க | என்னை பிளான் பண்ணி சிக்க வைச்சிட்டீங்களே! சீறும் முதலையை வேட்டையாடும் இளைஞர்

இந்த தாய் சிங்கத்தின் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகிறது. வைரல் வீடியோவில் குட்டிகளைப் பார்த்தால் பூனைகளாய் தோன்றுகிறதா? 

மேலும் படிக்க | பாய்ந்து வந்து கட்டிக்கொண்ட பெண் சிங்கம்: பாசமா, பகையா? வியக்க வைக்கும் வைரல் வீடியோ

மேலும் படிக்க | சிங்கிளாக வந்து சிங்கக்கூட்டத்தை சிதறடிக்கும் ஆக்ரோஷமான விலங்கு 

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News