மொபைல் டவுன்லோடு (Download) வேகத்தில் இந்தியா 109-வது இடத்தை பிடித்துள்ளதாக ஊக்லா நிறுவனம் வெளியிட்டுள்ள தகவல்களில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த ஆண்டு துவக்கத்தில் நொடிக்கு 7.65 எம்பியாக இருந்த மொபைல் டவுன்லோடு வேகம், நவம்பர் மாத நிலவரப்படி நொடிக்கு 8.80 எம்பியாக இருந்துள்ளது.
சர்வதேச சந்தையில் அதிவேக மொபைல் டவுன்லோடு வழங்கிய நாடுகள் பட்டியலில் நார்வே முதலிடம் பிடித்துள்ளது. நார்வே நாட்டில் நொடிக்கு 62.66 எம்பி வேகம் வழங்குகிறது. பிராட்பேண்ட் டவுன்லோடு வேகத்தை பொருத்த வரை இந்தியா 76-வது இடத்தில் உள்ளது.
இந்த ஆண்டு ஜனவரி மாத நிலவரப்படி பிராட்பேண்ட் டவுன்லோடு வேகம் சராசரியாக நொடிக்கு 12.12 எம்பியாக இருந்தது. இதுவே நவம்பர் மாத வாக்கில் நொடிக்கு 18.82 எம்பியாக அதிகரித்துள்ளது.
வேகமான பிராட்வேண்சட் இண்டர்நெட் வழங்கும் நாடுகளில் நொடிக்கு 153.58 எம்.பி. வேகம் வழங்கி சிங்கப்பூர் முதலிடத்தில் உள்ளது.