Samsung Galaxy S22: திடீரென குறைந்த விலை, வாங்க அலை மோதும் மக்கள்

Samsung Galaxy S22: பிளிப்கார்ட்டின் இந்த மாபெரும் சலுகையின் மூலம் பயனர்களுக்கு ரூ.22,000 தள்ளுபடி வழங்கப்படுகிறது. ஸ்மார்ட்போன் வாங்கும் எண்ணம் இருந்து, ஆனால் பட்ஜெட் குறைவாக இருப்பவர்கள், இந்த போனை இப்போது எளிதாக வாங்கலாம். 

Written by - Sripriya Sambathkumar | Last Updated : Apr 22, 2023, 07:47 AM IST
  • Samsung Galaxy S22 ஒரு நேர்த்தியான 5G ஸ்மார்ட்போன்.
  • S23 உடன் ஒப்பிடும்போது இந்த போனின் மிகப்பெரிய வித்தியாசம் சிப்செட் மற்றும் பேட்டரி ஆகும்.
  • சாம்சங் நீண்ட கால ஆதரவை உறுதியளித்துள்ளதால், மென்பொருள் ஆதரவைப் பற்றி ஒருவர் கவலைப்படத் தேவையில்லை.
Samsung Galaxy S22: திடீரென குறைந்த விலை, வாங்க அலை மோதும் மக்கள் title=

பிரபலமான ஸ்மார்ட்போன் நிறுவனமான சாம்சங்கின் அட்டகாசமான சாம்சங் கேலக்சி எஸ்22 (Samsung Galaxy S22) போனை வாங்கும் எண்ணம் கொண்டவர்களுக்கு ஒரு நல்ல செய்தி உள்ளது. ஆன்லைன் விற்பனை தளமான பிளிப்கார்ட்டில் இந்த போனுக்கு மாபெரும் தள்ளுபடி கிடைக்கிறது. இதன் 8ஜிபி ரேம் மற்றும் 128ஜிபி சேமிப்பு மாடலின் விலை ரூ.50,999 ஆக குறைந்துள்ளது. இதன் அசல் விலை ரூ.72,999 என்பது குறிப்பிடத்தக்கது.

பிளிப்கார்ட்டின் இந்த மாபெரும் சலுகையின் மூலம் பயனர்களுக்கு ரூ.22,000 தள்ளுபடி வழங்கப்படுகிறது. ஸ்மார்ட்போன் வாங்கும் எண்ணம் இருந்து, ஆனால் பட்ஜெட் குறைவாக இருப்பவர்கள், இந்த போனை இப்போது எளிதாக வாங்கலாம். சாம்சங் கேலக்சி எஸ்22 -ன் சிறப்பம்சங்களை பற்றி இந்த பதிவில் தெரிந்துகொள்ளலாம். 

Samsung Galaxy S22: மிக நேர்த்தியான ஒரு ஸ்மார்ட்போன்

Samsung Galaxy S22 ஒரு பழைய 5G ஸ்மார்ட்போன் ஆகும். சிறந்த கேமரா அமைப்பு மற்றும் வேகமான செயல்திறன் கொண்ட ஃபிளாக்ஷிப் போனை வாங்க எண்ணும் மக்கள் மிகவும் மலிவு விலையில் இந்த போனை இப்போது வாங்கலாம். தற்போதைய நிலவரப்படி, 51,000 ரூபாய்க்கு நாட்டில் வேறு எந்த முழு அளவிலான ஃபிளாக்ஷிப் போனும் கிடைக்கவில்லை. கூடுதலாக, சாம்சங் நீண்ட கால ஆதரவை உறுதியளித்துள்ளதால், மென்பொருள் ஆதரவைப் பற்றி ஒருவர் கவலைப்படத் தேவையில்லை.

மேலும் படிக்க | ஏர் கூலர் வாங்குவதற்கு முன்பு இதை எல்லாம் கவனத்தில் கொள்ள வேண்டும்..!

S23: இந்த போனுடன் ஒப்பிடலாம்

S23 உடன் ஒப்பிடும்போது இந்த போனின் மிகப்பெரிய வித்தியாசம் சிப்செட் மற்றும் பேட்டரி ஆகும். ஸ்டீரியோ ஸ்பீக்கர்கள், IP68 வாட்டர் ரெசிஸ்டண்ட் ரேட்டிங், 25W ஃபாஸ்ட் சார்ஜிங், 6.1 இன்ச் AMOLED டிஸ்ப்ளே மற்றும் டிரிபிள் ரியர் கேமராக்கள் போன்ற மற்ற அம்சங்கள் இரண்டு சாதனங்களிலும் ஒரே மாதிரியாக இருக்கும்.

காம்பாக்ட் ஃபார்ம் பேக்டரை விரும்புபவர்கள் கேலக்ஸி எஸ்22ஐப் பயன்படுத்த விரும்புவார்கள். ஆனால் சில விஷயங்கள் உங்களுக்கு பிடிக்காமல் இருக்கலாம். இதில் சிறிய பேட்டரி உள்ளது. அதாவது, தொலைபேசியை நாள் முழுவதும் இயக்க முடியாது. இதை குறைந்தபட்சம் இரண்டு முறை சார்ஜ் செய்ய வேண்டி வரலாம். எனினும், நீங்கள் அழைப்பு, சோதனை மற்றும் சமூக ஊடக தளங்களின் பயன்பாடு ஆகியவற்றுக்கு மட்டுமே இதை பயன்படுத்தினால், பேட்டரி விரைவில் தீர்ந்துவிடாது.

Samsung Galaxy S22+: இதில் மாபெரும் தள்ளுபடி கிடைக்கிறது

பட்ஜெட்டைக் கொஞ்சம் கூட்டினால் Samsung Galaxy S22+ ஸ்மார்ட்போனை வாங்கலாம். தற்போது இதன் விலை 62,850 ரூபாய் ஆகும். ஃபிளாக்ஷிப் போன் முதலில் இந்தியாவில் ரூ.84,999 ஆரம்ப விலையில் அறிவிக்கப்பட்டது. இது நிலையான மாடலை விட சிறந்த பேட்டரி ஆயுள் மற்றும் வேகமான சார்ஜிங் ஆதரவை வழங்கும். இந்த போன் 45W ஃபாஸ்ட் சார்ஜின் ஆதரவுடன் 4,500mAh பேட்டரியைக் கொண்டுள்ளது.

மேலும் படிக்க | மூத்த குடிமக்களுக்கு ஜாக்பாட் செய்தி: இனி வீட்டிலிருந்தபடியே இந்த வசதி கிடைக்கும்

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

 

Trending News