மக்களவை தேர்தல் 2019-யை முன்னிட்டு வாக்களிப்பது எப்படி இந்தியா என்ற விழிப்புணர்வு டூடுல் ஒன்றை கூகுள் நிறுவனம் தனது முகப்பு பக்கத்தில் வெளியிட்டுள்ளது.
பாராளுமன்றத்துக்கு 2வது கட்டமாக தமிழகம், புதுச்சேரி உள்பட 12 மாநிலங்களில் உள்ள 95 தொகுதிகளுக்கான ஓட்டுப்பதிவு இன்று காலை முதல் தொடங்கியது.
தமிழகத்தில் 38 பாராளுமன்ற தொகுதிகளுக்கும், புதுச்சேரி தொகுதிக்கும் இன்று வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது. இதில் வேலூர் தொகுதியில் பணப்பட்டுவாடா புகார் காரணமாக தேர்தல் தள்ளிவைக்கப்பட்டு உள்ளது. மீதமுள்ள தொகுதிகளில் வாக்குப்பதிவு தொடங்குவதற்கு முன்னதாக காலை 6 மணிக்கு வாக்குப்பதிவு எந்திரங்கள் சோதனை செய்து பார்க்கப்பட்டது. அதனைத் தொடர்ந்து காலை 7 மணிக்கு வாக்குப்பதிவு நடைபெற்ற வருகிறது.
இந்நிலையில் இன்று வாக்குப்பதிவு தொடங்குவதையொட்டி, அதனை வரவேற்கும் விதமாக கூகுள் நிறுவனம் சிறப்பு டூடுலை உருவாக்கியுள்ளது. அதில், GOOGLE என்ற வார்த்தையில் ஒரு விரல் புரட்சி டூடுல் அமைந்துள்ளது.