Windows 11 இயங்கு தளத்தை மாஸ்டர் செய்ய சில டிப்ஸ்..!!

விண்டோஸ் 11 (Windows 11 ) இந்த மாத தொடக்கத்தில் பயன்பாட்டிற்கு வந்தது, இது பழைய ஆப்ரேடிங் சிஸ்டத்திலிருந்து முற்றிலும் மாறுபட்டது. பழைய விண்டோஸ் 10 ஆப்ரேடிங் சிஸ்டம் 2015 ஆம் ஆண்டு தொடங்கப்பட்டது. 

Written by - ZEE TAMIL NEWS | Edited by - Vidya Gopalakrishnan | Last Updated : Oct 20, 2021, 02:00 PM IST
Windows 11 இயங்கு தளத்தை மாஸ்டர் செய்ய சில டிப்ஸ்..!! title=

புது தில்லி: விண்டோஸ் 11 (Windows 11 ) இந்த மாத தொடக்கத்தில் பயன்பாட்டிற்கு வந்தது, இது பழைய ஆப்ரேடிங் சிஸ்டத்திலிருந்து முற்றிலும் மாறுபட்டது. பழைய விண்டோஸ் 10 ஆப்ரேடிங் சிஸ்டம் 2015 ஆம் ஆண்டு தொடங்கப்பட்டது.  இப்போது அறிமுகப்படுத்தப்பட்டுள்ள  விண்டோஸ் 11 மூலம், பயனர்கள் கணினியின் புதிய காட்சி மறுவடிவமைப்பையும், மேம்பட்ட அம்சஙக்ளையும் பெற முடியும். இதை எளிதாக பய்ன்படுத்த பல கீ போர்ட் ஷார்ட்கட்களை பயனர்கள் பயன்படுத்திக் கொள்ளலாம்.

உங்கள் நோடிபிகேஷன்களை விரைவாகச் சரிபார்க்கவும், சமீபத்திய செய்திகள் அல்லது வானிலை சரிபார்க்கவும், ஸ்கிரீன் ஷாட் எடுக்கவும், அல்லது மைக்ரோசாஃப்ட் டீம்களில் சேட்களை திறக்கவும் என பலவற்றிற்கும் சில சிறந்த குறுக்குவழிகளை  தெரிந்து கொள்ளலாம். விண்டோஸ் 11 அப்டேட்டை பதிவிறக்கிய பிறகு பயனர்கள் அவற்றைப் பயன்படுத்தலாம். Windows Key + N, Windows Key + W போன்ற சில கீபோர் ஷார்ட் கட்கள் உள்ளன. 

ALSO READ | உங்கள் கணினியை புதுமையாக்க வருகிறது Windows 11: இந்த பயனர்கள் இதை இலவசமாக பெறலாம்

செய்தி மற்றும் இண்டெரெஸ்ட் பீட்  பெற Windows Key + W

செய்திகள் மற்றும் உங்களுக்கு பிடித்த விஷயங்கள் தொடர்பான தகவல்களை பெற, விண்டோஸ் 11 பயனர்களுக்கு ப்ரவுஸர் விண்டோ திறக்காமல் சமீபத்திய செய்திகள், வானிலை போன்றவை தொடர்பாக தகவல்களை அறிந்து கொள்ளலாம். பயனர்கள் இந்த பேனலைப் பயன்படுத்தி தேடலாம். இந்த பேனலுக்கு, சமீபத்திய செய்திகளைப் பார்க்க பயனர்கள் Windows Key + N  ஐ அழுத்த வேண்டும்.

ஸ்னாப் லேஅவுட்டிற்கு Windows Key + Z

வழக்கமான 2 விண்டோ ஸ்னாப்பிங் வசதியை தவிர, விண்டோ 11 பயனர்களை 3 காலம் லேஅவுட்  அமைப்பில் விண்டோஸ்களை ஸ்னாப் செய்யலாம். அதற்கு Windows Key + Z ஐ அழுத்துவதன் மூலம் பயனர்கள் ஸ்னாப் லேஅவுட்டை அணுகலாம்.

Also Read | 10 பைசாவில் 1 கி.மீ பயணம்: அசத்தும் Autm 1.0 மின்சார வாகனம்

மைக்ரோசாப்ட் டீம்ஸ் சேட்டிற்கு  Windows Key + C

உள்ளமைக்கப்பட்ட ஸ்கைப் (Skype) செயலியை பயன்படுத்தி பயனர்கள் அழைப்புகள் மற்றும் சேட் செய்ய அனுமதிப்பதில் விண்டோஸ் 10 உதவியது. இப்போது விண்டோஸ் 11, கம்பெனிகள் பயன்படுத்தும் மைக்ரோசாஃப்ட் டீம்ஸ் செயலியில் கவனம் செலுத்துகிறது. மைக்ரோசாஃப்ட் அக்கவுண்ட் உள்ள எந்தவொரு பயனரும் Windows Key + C குறுக்குவழியைப் பயன்படுத்தி சேட்டிங் செய்ய இந்த சேவை அனுமதிக்கிறது. டைரக்ட் டெஸ்க்டாப்பில் இருந்து விரைவாக சேட்டிங்கை தொடங்க இது உதவுகிறது.

Read Also | 8 மணி நேரம் தண்ணீரில் இயங்கும் அசத்தல் ஸ்மார்ட்போன் அறிமுகம்; விவரம் இங்கே

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G

Apple Link - https://apple.co/3loQYeR

Trending News