இப்போதெல்லாம் அனைத்து வேலைகளும் இணையம் மூலமாகவே செய்யப்படுகின்றன. யுபிஐ வந்த பிறகு பணம் செலுத்த வங்கிக்குச் செல்ல வேண்டிய காலம் எல்லாம் மலையேறிவிட்டது. நொடியில் ஒருவருக்கு செலுத்த வேண்டிய பணம் பரிவர்த்தனை செய்யப்பட்டுவிடுகிறது. ஆனால், இணையம் இருந்தால் மட்டுமே இது சாத்தியம். இணையம் இல்லாமல் யுபிஐ பரிவர்த்தனை செய்வது என்பது இயலாத ஒன்று.
இப்படி தான் பலரும் நினைத்துக் கொண்டிருக்கிறார்கள். உண்மை என்னவென்றால், இணையம் இல்லாமலும் யுபிஐ பரிவர்த்தனை சாத்தியம். அது எப்படி சாத்தியம் என நீங்கள் வியப்பாக கேட்கலாம். இணையம் இல்லாமல் நீங்கள் பரிவர்த்தனை செய்ய முடியும். எப்படி என இங்கே தெரிந்து கொள்வோம்.
மேலும் படிக்க | 7th Pay Commission:ஊழியர்களுக்கு புத்தாண்டில் எக்கச்சக்க பரிசுகள்
* மொபைல் டேட்டா அல்லது இணையம் இல்லாமல் பணம் செலுத்த, நீங்கள் USSD சேவையைப் பயன்படுத்த வேண்டும்
* இதற்கு முதலில் உங்கள் ஸ்மார்ட்போனில் '*99#' டயல் செய்ய வேண்டும்.
* இதற்குப் பிறகு, நீங்கள் ஒரு பாப்-அப் மெனுவைக் காண்பீர்கள்.
* அதில் கொடுக்கப்பட்டுள்ள பல விருப்பங்களிலிருந்து முதல் விருப்பத்தை அதாவது 'பணம் அனுப்பு' என்பதை நீங்கள் தேர்வு செய்ய வேண்டும்.
* இப்போது, UPI ஐடி, வங்கிக் கணக்கு விவரங்கள் மற்றும் மொபைல் எண் உள்ளிட்ட பணத்தை அனுப்ப பல விருப்பங்கள் தோன்றும்.
* அதில், பணம் செலுத்தும் முறையைத் தேர்ந்தெடுத்து, தேவையான விவரங்களைப் பூர்த்தி செய்த பிறகு, நீங்கள் எவ்வளவு பணம் செலுத்த வேண்டும் என்பதை நிரப்பவும்.
* இதற்குப் பிறகு, உங்கள் UPI பின்னை உள்ளிட்டு பணத்தை மாற்ற வேண்டும்.
* இந்த வழியில், இணையம் இல்லாமல் கூட உங்கள் ஸ்மார்ட்போனிலிருந்து UPI ஐ மாற்ற முடியும். இந்தச் செயல்முறையை முடிக்க, உங்கள் ஃபோன் எண்ணை UPI இல் பதிவு செய்ய வேண்டும்.
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ