ஜியோவின் தீபாவளி கொண்டாட்டம்; ஒரு ரீச்சார்ஜில் ரூ.3699 வரை தள்ளுபடி

ஜியோ தீபாவளி கொண்டாட்ட சலுகையாக ஒரு வருட ரீசார்ஜ் திட்டத்தை வாடிக்கையாளர்களுக்கு அறிவித்துள்ளது.   

Written by - S.Karthikeyan | Last Updated : Oct 23, 2022, 09:44 AM IST
  • ஜியோ ப்ரீப்பெய்ட் பிளான்
  • தீபாவளியையொட்டி அதிரடி சலுகை
  • வாடிக்கையாளர்களுக்கு பம்பர் பரிசு
ஜியோவின் தீபாவளி கொண்டாட்டம்; ஒரு ரீச்சார்ஜில் ரூ.3699 வரை தள்ளுபடி  title=

தீபாவளியையொட்டி ஜியோ தீபாவளி கொண்டாட்ட சலுகையை அறிமுகப்படுத்தியுள்ளது. இந்த சலுகையின் கீழ், வாடிக்கையாளர்கள் ஒரு ரீசார்ஜில் ரூ.3699 வரை தள்ளுபடி சலுகையைப் பெறுகின்றனர். இருப்பினும், இந்த சலுகை ஒரு ரீசார்ஜ் திட்டத்தில் மட்டுமே கிடைக்கும். இந்த ரீசார்ஜில், பயனர்களுக்கு ஒரு வருட வேலிடிட்டி கிடைக்கும். அதன் விவரங்கள் என்னென்ன என்பதை இங்கே தெரிந்து கொள்வோம். 

ஜியோவின் இந்த ஆஃபர் புதியதல்ல, ஏற்கனவே இருந்துவரும் ஆஃபர். இருப்பினும், இந்த திட்டத்தில் முந்தையதை விட பல மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன. இந்த திட்டத்தில் டிஸ்னி + ஹாட்ஸ்டார் முன்பு கிடைத்தது, இது இனி கிடைக்காது. அதே நேரத்தில், கூடுதல் நன்மைகளிலும் பல மாற்றங்கள் ஏற்பட்டுள்ளன. ஒரு வருட வேலிடிட்டி கொண்ட இந்த திட்டத்தில் தினசரி டேட்டா, எஸ்எம்எஸ் மற்றும் அன்லிமிடெட் அழைப்பு சலுகை வழங்கப்படுகிறது. இதில், வாடிக்கையாளர்கள் பல சிறப்புப் பலன்களைப் பெறுகின்றனர்.

மேலும் படிக்க | ஜியோவுக்கு 4,000 கோடி லாபம்... வாய் பிளந்த மற்ற நிறுவனங்கள்

ஜியோ ரூ 2999 ரீசார்ஜ் திட்டம்

ஜியோ தீபாவளி கொண்டாட்ட சலுகை ரூ. 2999 ரீசார்ஜ் திட்டத்தில் கிடைக்கிறது. இந்த திட்டத்தை தேர்ந்தெடுக்கும் வாடிக்கையாளர்களுக்கு, ஒரு வருட வேலிடிட்டி கிடைக்கும். இதில், வாடிக்கையாளர்கள் தினசரி 2.5 ஜிபி டேட்டா, 100 எஸ்எம்எஸ் மற்றும் அன்லிமிட்டெட் அழைப்பு நன்மைகளைப் பெறுகிறார்கள். முழு திட்டத்திலும், பயனர்கள் மொத்தம் 912.5GB டேட்டாவைப் பெறுகிறார்கள். இது தவிர, ஜியோ டிவி, ஜியோ சினிமா, ஜியோ செக்யூரிட்டி மற்றும் ஜியோ கிளவுட் ஆகியவற்றுக்கான இலவச சப்ஸ்கிரிப்சன் பெறுவார்கள். டேட்டா வரம்பு முடிந்ததும், பயனர்கள் 64Kbps வேகத்தில் டேட்டாவைப் பெறுவார்கள்.

ஜியோ தீபாவளி கொண்டாட்ட சலுகை 

இந்தச் சலுகையின் கீழ், ஜூமினில் இருந்து வாடிக்கையாளர்கள் ரூ.299 மதிப்புள்ள 2 மினி மேக்னட்களை இலவசமாகப் பெறுவார்கள். இது தவிர, Ferns & Petals நிறுவனத்திடம் இருந்து 799 ரூபாய்க்கு பொருட்கள் வாங்கினால் 150 ரூபாய் தள்ளுபடி கிடைக்கும். இக்ஸிகோவில் ரூ.4500 மற்றும் அதற்கு மேற்பட்ட விமான டிக்கெட்டுகளை புக்கிங் செய்யும் வாடிக்கையாளர்கள் ரூ.750 தள்ளுபடி பெறுகிறார்கள். ஜியோவில் இருந்து ரூ. 2990 அல்லது அதற்கு மேல் ஷாப்பிங் செய்தால் 1000 எக்ஸ்சேஞ்ச் சலுகை கிடைக்கும். இது தவிர, பயனர்கள் அர்பன் லேடரில் இருந்து ஷாப்பிங் செய்தால் ரூ.1500 தள்ளுபடி கிடைக்கும். அதாவது, பயனர்களுக்கு மொத்தம் ரூ.3699 சலுகை கிடைக்கும்.

மேலும் படிக்க | Flipkart Big Diwali Sale 2022: அசத்தல் ஸ்மார்ட்போன்களில் அதிரடி தள்ளுபடிகள்

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News