விண்ணில் வெற்றிகரமாய் சீறிப்பாய்ந்தது PSLV-C45 செயற்கைக்கோள்!

இஸ்ரோவின் 'எமிசாட்' செயற்கைக்கோள் மற்றும் வெளிநாடுகளை சேர்ந்த 28 செயற்கைக்கோள்களுடன் பிஎஸ்எல்வி-‌சி45 ராக்கெட் வெற்றிகரமாக விண்ணில் பாய்ந்தது!

Last Updated : Apr 1, 2019, 09:58 AM IST
விண்ணில் வெற்றிகரமாய் சீறிப்பாய்ந்தது PSLV-C45 செயற்கைக்கோள்! title=

இஸ்ரோவின் 'எமிசாட்' செயற்கைக்கோள் மற்றும் வெளிநாடுகளை சேர்ந்த 28 செயற்கைக்கோள்களுடன் பிஎஸ்எல்வி-‌சி45 ராக்கெட் வெற்றிகரமாக விண்ணில் பாய்ந்தது!

ராணுவப் பயன்பாட்டிற்கான எமிசாட் என்ற நவீன மின்னணு நுண்ணறிவு செயற்கைக்கோளை இஸ்ரோ நிறுவனம் உருவாக்கியுள்ளது. 436 கிலோ எடைகொண்ட இந்த செயற்கைக்கோள் மூலம் மின்காந்த அலைக்கற்றைகளைக் கண்காணிக்க முடியும்.

இதுதவிர, அமெரிக்காவின் 24 செயற்கைக் கோள்கள், லிதுவேனியாவின் 2 செயற்கைக்கோள்கள், ஸ்பெயின், ஸ்விட்சர்லாந்து நாடுகளின் தலா ஒரு செயற்கைக்கோள் என 28 மைக்ரோ மற்றும் நானோ செயற்கைக்கோள்கள் வணிக ரீதியாக ஏவப்பட்டது. மேலும், பரிசோதனை முயற்சியில், இந்திய விண்வெளி அறிவியல் மற்றும் தொழில்நுட்ப நிறுவனம் தயாரித்த சிறிய வகை ஆய்வு சாதனங்களும் அதில் செலுத்தப்பட்டுள்ளது.

இவற்றைத் தாங்கியபடி, PSLV-C45 ராக்கெட் இன்று காலை 9.27 மணிக்கு ஆந்திர மாநிலம், ஸ்ரீஹரிகோட்டாவில் அமைந்துள்ள சதீஷ் தவான் விண்வெளி மையத்தின் இரண்டாவது ஏவுதளத்தில் இருந்து விண்ணில் ஏவப்பட்டது. இதற்கான 27 மணி நேர கவுண்ட் டவுன் நேற்று காலை 6.27 மணிக்குத் தொடங்கியது. உலகில் முதன்முறையாக 3 வெவ்வேறு புவிவட்டப் பாதையில் செயற்கைக்கோள்கள் நிலைநிறுத்தப்பட உள்ளன. ராக்கெட் விண்ணில் பாய்ந்ததும் 753 கிலோ மீட்டர் தொலைவில் எமிசாட்டும், 505 கிலோ மீட்டர் தொலைவில் 28 செயற்கைக்கோள்களும் நிலைநிறுத்தப்படும். இதற்காக ராக்கெட்டின் எஞ்சின்கள் 4 முறை ரீ ஸ்டார்ட் எனப்படும் மறுதொடக்க செயல்பாட்டிற்கு உள்ளாக்கப்படவுள்ளன.

PSLV-C45 ராக்கெட் ஏவப்படுவதை பொதுமக்கள் நேரடியாக காணும் வசதியும் செய்யபட்டிருந்தது. இதுவரை பொதுமக்கள் நேரடியாக அனுமதிக்கப்படாத நிலையில், இன்று 5 ஆயிரம் பேர் இதை கண்டுகளித்தனர்.

 

Trending News