சாம்சங் நிறுவனத்தின் தொலைகாட்சிகள் பிரபலமானவை. தற்போது அதன் பிரீமியம் AI தொலைக்காட்சிகளை தள்ளுபடி விலையில் விற்பதாக சாம்சங் நிறுவனம் அறிவித்துள்ளது. சுதந்திர தின கொண்டாட்டங்களை முன்னிட்டு வெளியிட்டுள்ள சிறப்பு சலுகைகளில் எந்த தொலைகாட்சிப் பெட்டிக்கு எவ்வளவு தள்ளுபடி சலுகை என்பதைத் தெரிந்துக் கொள்வோம்.
AI TVகள் மூலம் மேம்படுத்தப்பட்ட தொழில்நுட்பத்துடன் கிடைக்கும் நவீன தொலைகாட்சிப் பெட்டிகளுக்கு சாம்சங் நிறுவனம் அற்புதமான சலுகைகள் வழங்குகிறது. இந்த விற்பனையில், நியோ 8கே, நியோ குலெட், ஒலெட், கிரிஸ்டல் 4கே யுஎச்டி (Neo 8K, Neo QLED, OLED Crystal 4K UHD) ஆகியவற்றிற்கு தள்ளுபடி வழங்கப்படுகிறது.
சாம்சங்கின் AI டிவி சீரிஸ் வரிசையில் ஆகஸ்ட் 3 முதல் ஆகஸ்ட் 31, 2024 வரை Samsung.com, ஆன்லைன் போர்ட்டல்கள் மற்றும் இந்தியா முழுவதும் உள்ள சாம்சங் சில்லறை விற்பனை நிலையங்களில் சலுகை விலையில் தொலைகாட்சிப் பெட்டிகளை வாங்கலாம். வாடிக்கையாளர்கள் பிரீமியம் AI டிவிகளுடன் சிறப்பு சலுகைகளைப் பெறலாம்.
ரூ.89,990 மதிப்புள்ள இலவச செரிஃப் டிவி அல்லது வாங்கும் டிவியின் மாடலுக்கு ஏற்றாற்போல, ரூ.47,990 மதிப்புள்ள இலவச சவுண்ட்பார் கொடுக்கப்படும். கூடுதலாக, பெரிய டிவிகளில் 20 சதவீதம் வரை கேஷ்பேக் பெறலாம். சுலப தவணையில் டிவிகளை வாங்குவதற்கு, 2,777 ரூபாய் மாதத் தவணையில் நீண்ட கால (36 மாதங்கள் வரை) EMI பெறும் வசதியையும் வாடிக்கையாளர்கள் பெறலாம்.
மேலும் படிக்க | ஆத்மநிர்பர் திட்டத்தின் கீழ் 15,000+ 4G டவர்கள்... அதிரடி காட்டும் BSNL நிறுவனம்
நியோ QLED 8K
NQ8 AI Gen3 செயலி பொருத்தப்பட்டுள்ள Neo QLED 8K டிவி, செயற்கை நுண்ணறிவு அம்சம் பொருத்தப்பட்டு, மேம்படுத்தப்பட்ட அனுபவத்தை வழங்குகிறது. டிவியா, நிஜமாக நேரில் நடக்கும் சம்பவமா என்று எண்ணும் அளவுக்கு படத் தரத்தை வழங்கும் டிவி இது. 256 AI நெட்வொர்க் உள்ளது.
OTT, வீடியோ கேம், நேரலை என எந்தவொரு காட்சியாக இருந்தாலும் 8K அனுபவத்தை வழங்கும் வகையில், படங்கள் மற்றும் ஒலி இரண்டையும் மாற்றும் அம்சம் கொண்ட தொலைகாட்சிப் பெட்டி இது. கூடுதலாக, அங்கீகரிக்கப்படாத தீங்கிழைக்கும் செயலிகளை செயல்படுத்துவது மற்றும் ஃபிஷிங் தளங்களுக்கான அணுகல்களை தடுக்கும் நாக்ஸ் பாதுகாப்பு கொண்ட அருமையான டிவி இது.
OLED டிவி
கண்களுக்கு இதமான OLED டிவியானது, எந்த ஒளி நிலையிலும் ஆழமான கருப்பு மற்றும் தெளிவான படங்களை அருமையாக கொடுக்கும் அதேவேளையில், தேவையற்ற பிரதிபலிப்புகளை நீக்குகிறது. வலிமையான NQ4 AI Gen2 செயலி மூலம் இயக்கப்படும் சாம்சங்கின் OLED TV வரம்பில் Real Depth Enhancer மற்றும் OLED HDR Pro போன்ற அம்சங்கள் பொருத்தப்பட்டுள்ளன.
படத்தின் தரத்தை பல மடங்கு உயர்த்தும் இந்த சாம்சங் டிவியில் மோஷன் எக்ஸ்செலரேட்டர் 144 ஹெர்ட்ஸ் போன்ற அம்சங்களுடன் மென்மையான இயக்கம் மற்றும் விரைவான மறுமொழி விகிதங்கள் உண்டு. கேமிங்கிற்கான அருமையான தேர்வு என்றால், அது Samsung OLED என்று சொல்லலாம்.
QLED டிவி
சாம்சங்கின் QLED TV குவாண்டம் டாட் தொழில்நுட்பத்துடன் அற்புதமான படத் தரத்தை வழங்கும் டிவி ஆகும். காட்சிகளில் உள்ள அசல் வண்ணத்தை இயல்பாகவே காட்டும் அதேவேளையில், கண்களை உறுத்தாமல் இருப்பதை உறுதி செய்கிறது. அல்ட்ரா-ஸ்லிம் வடிவமைப்பு கொண்ட இந்த டிவி, வீட்டின் அழகை அதிகப்படுத்திக் காட்டும்.
மேலும் படிக்க | அமேசான் பிரைம் டே சேல்...சோனி முதல் சாம்சங் வரை.. 45% தள்ளுபடியில் 42 இன்ச் டிவி..!
UHD டிவி
சாம்சங்கின் UHD TV, டைனமிக் கிரிஸ்டல் கலர் தொழில்நுட்பத்துடன் வண்ணங்களை மேலும் அழகாக்கி உயிர்ப்பிக்கிறது, ஒவ்வொரு நிழலிலும் உயிரோட்டமான மாறுபாடுகள் மற்றும் நுட்பமான விவரங்களை வழங்கும் இந்த டிவியில், மோஷன் எக்ஸ்செலரேட்டர் வேகமாக நகரும் செயலை மென்மையாகவும் தெளிவாகவும் கொண்டு செல்கிறது.
செரிஃப் டிவி
குவாண்டம் டாட் தொழில்நுட்பத்தின் காரணமாக, காட்சிகள் பிரகாசமாகவோ அல்லது இருட்டாகவோ இருந்தாலும் யதார்த்தமான காட்சிகளை உறுதி செய்யும் சாம்சங் செரிஃப் டிவி என்பது இதன் சிறப்பம்சம் ஆகும். HDR10+ அம்சம், அதன் அற்புதமான திறனால் ஒவ்வொரு பிரேமையும் மேம்படுத்துகிறது.
செரிஃப் டிவி, எந்தக் கோணத்தில் இருந்து பார்த்தாலும் பிரமிக்க வைக்கிறது. இந்த டிவி வைக்கப்பட்டிருக்கும் அறையின் அழகை மேம்படுத்துவதால் இது அனைவரின் சிறந்த தேர்வாக இருக்கிறது. அற்புதமான செயல்திறன் மற்றும் நேர்த்தியான அழகியல் என இரண்டையும் வழங்கும் இந்த டிவி வீட்டின் அழகுக்கு மேலும் அழகூட்டுகிறது.
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ