எலெக்ட்ரிக் வாகனம் ஓட்டினால், பராமரிப்பு தொடர்பான இந்த முக்கியமான விஷயங்களைச் செய்யுங்கள். இதனால் பேட்டரியில் எந்தப் பிரச்னையும் இருக்காது, பாதுகாப்பும் அதிகமாகும்.
மின்சார வாகனம்: நீங்களும் மின்சார வாகனம் வாங்கியிருக்கிறீர்களா? ஆம் எனில், அதன் பராமரிப்பில் நீங்கள் சிறப்பு கவனம் செலுத்த வேண்டும். Hero Electric இ-ஸ்கூட்டர்கள் அல்லது பைக்குகள் மற்றும் பிற மின்சார வாகனங்களுக்கு சில சிறப்பு ஆலோசனைகளை வழங்கியுள்ளது.
இவற்றை பின்பற்றினால், எந்த பிரச்சனையும் சந்திக்க மாட்டீர்கள். இதன் மூலம், உங்கள் காரின் பேட்டரி (how to take care of ev battery) நீண்ட காலத்திற்கு பிரச்சனை இல்லாமல் இருக்கும்.
வறண்ட மற்றும் குளிர்ச்சியான சூழலில் பேட்டரியை சார்ஜ் செய்யவும்
மின்சார வாகனங்களில் முக்கிய கூறுகளில் ஒன்று பேட்டரி. பேட்டரியை சார்ஜ் செய்யும்போது (Electric Vehicle battery charging tips) அதிக கவனம் தேவை.
மின்சார பைக்கின் பேட்டரியை எப்போதும் நன்கு காற்றோட்டம் உள்ள உலர்ந்த இடத்தில் வைக்க வேண்டும். அதை அதிக வெப்பநிலையிலிருந்து விலக்கி வைக்கவும், இதனால் அதன் செயல்திறன் தொடர்ந்து உறுதி செய்யப்படும்.
சீல் செய்யப்பட்ட பேட்டரியைத் திறக்க முயற்சிக்காதீர்கள்
உங்கள் மின்சார பைக்கின் சீல் செய்யப்பட்ட பேட்டரிகளை திறக்க முயற்சிக்காதீர்கள். சீல் செய்யப்பட்ட பேட்டரியைத் திறப்பது தவறு.
அது எந்த வகையான பேட்டரியாக இருந்தாலும் சரி. இ-ஸ்கூட்டர் அல்லது பைக்கின் பேட்டரியை சீண்டுவது பேட்டரிக்கு மட்டுமல்ல, உங்களுக்கும் கடுமையான சேதத்தை ஏற்படுத்தலாம்.
பயணத்திற்கு பிறகு பார்க்கிங் முக்கியமானது
எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் அல்லது பைக்கை நீங்கள் பயன்படுத்திய பிறகு வாகனத்தை நிழலில் நிறுத்துவதை உறுதி செய்ய வேண்டும். அதுதான் மின்சார வாகனத்தை பாதுகாப்பதின் முதல்படி ஆகும். இப்படி செய்வதன் மூலம் உங்கள் இ-ஸ்கூட்டர்-பைக்கின் பேட்டரியின் (Electric Vehicle) ஆயுளைப் பாதுகாக்கிறீர்கள்.
அசல் சார்ஜர் மூலம் மட்டுமே பேட்டரியை சார்ஜ் செய்யவும்
உங்கள் இ-ஸ்கூட்டரின் பேட்டரியை கவனித்துக்கொள்வதற்கான சிறந்த வழி, அதன் அசல் சார்ஜரைக் கொண்டு பேட்டரியை சார்ஜ் செய்வதே ஆகும். எப்போதும் இதை பழக்கத்தில் வைத்துக் கொள்வது மிகவும் நல்லது.
மலிவான சார்ஜரைப் பயன்படுத்துவது பேட்டரியின் உள் சுற்றுகளை சேதப்படுத்தும். அது, பேட்டரியின் செயல்படும் திறனையும், அதன் வாழ்க்கைச் சுழற்சியை நிரந்தரமாகக் குறைக்கக் கூடும்.
பேட்டரியில் அடிபடாமல் பார்த்துக் கொள்ளுங்கள்
உங்கள் பேட்டரியின் ஆயுளை அதிகரிக்க ஹீரோ எலக்ட்ரிக் பரிந்துரைக்கும் மிகவும் முக்கிய விஷயம் ஒன்று இருக்கிறது. பேட்டரியை கவனமாக கையாள்வது தான் அது.
எதனுடனும் பேட்டரியை மோதாமல் பார்த்துக் கொள்ள வேண்டும். ஏனெனில் பேட்டரியின் மீது வேறு பொருட்கள் மோதுவதால், பேட்டரின் உள்ளே இருக்கும் கலம் சேதமாகும், இது அதன் செயல்திறனை பாதிக்கும்.
உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, டிவிட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR