Voter ID Transfer: ஆன்லைனில் திருமணதிற்கு பின் வாக்காளர் அட்டையை மாற்றுவது எப்படி?

திருமணத்திற்கு பின் வாக்காளர் அடையாள அட்டையை ஆன்லைனில் மாற்றுவது எப்படி? அதற்கு என்னென்ன ஆவணங்கள் தேவை என்பதை தெரிந்து கொள்வோம்.  

Written by - S.Karthikeyan | Last Updated : Mar 10, 2024, 06:22 PM IST
  • வாக்காளர் அடையாள அட்டை டிப்ஸ்
  • திருமணமான பெண்கள் முகவரி மாற்றலாம்
  • வீட்டில் இருந்தபடியே ஆன்லைனில் மேற்கொள்ளலாம்
Voter ID Transfer: ஆன்லைனில் திருமணதிற்கு பின் வாக்காளர் அட்டையை மாற்றுவது எப்படி? title=

விரைவில் நாடாளுமன்ற தேர்தல் வர இருக்கும் நிலையில் வாக்காளர் அடையாள அட்டை குறித்த பொதுவான சந்தேகங்கள் மக்களுக்கு இருக்கின்றன. குறிப்பாக திருமணத்துக்குப் பின் ஒரு பெண்ணின் முகவரி மாறலாம். மேலும் அவர் தனது வாக்காளர் அடையாள அட்டையை அவரது புதிய முகவரிக்கு மாற்ற வேண்டியிருக்கலாம். அப்படி வாக்காளர் அட்டையில் முகவரி மாற்ற வேண்டும் என விரும்புவர்கள் இப்போது ஆன்லைனிலேயே இதனை செய்து கொள்ளலாம்.

திருமணத்திற்கு பின் வாக்காளர் அடையாள அட்டையில் மாற்றம் செய்வதற்கான ஆவணங்கள்: 

இந்திய தேர்தல் ஆணையம், திருமணத்திற்குப் பிறகு வாக்காளர் அடையாள அட்டைகளை மாற்றுவதற்கு வசதியான ஆன்லைன் முறை மூலம் எளிதாக்கியுள்ளது. திருமணத்திற்குப் பிறகு உங்கள் வாக்காளர் அடையாள அட்டையில் இடமாற்றம் அல்லது முகவரி மாற்றத்திற்கு விண்ணப்பிக்க, உங்கள் பெயரில் அல்லது உங்கள் கணவர் பெயரில் உங்கள் புதிய முகவரியை நிரூபிக்கும் ஆவணத்தின் ஸ்கேன் செய்யப்பட்ட நகல் உங்களுக்குத் தேவைப்படும். இந்தப் புதிய முகவரி உங்களின் அதிகாரப்பூர்வ முகவரியாகப் புதுப்பிக்கப்படும். 

மேலும் படிக்க | வீட்டில் Wifi வாங்க திட்டமா... இலவச ஓடிடி... 1TB டேட்டா - Airtel AirFiber புதிய பிளான்!

இந்த ஆவணங்களை நீங்கள் கொடுக்கலாம்; 

தண்ணீர், எரிவாயு அல்லது மின்சாரம் கட்டணம் செலுத்திய ரசீதுகள், ஆதார் அட்டை, வங்கி பாஸ்புக், தபால் நிலைய பாஸ்புக், இந்திய பாஸ்போர்ட், வருவாய்த் துறையின் நிலம் தொடர்பான பதிவுகள், பதிவுசெய்யப்பட்ட குத்தகை அல்லது வாடகை பத்திரம். கூடுதலாக, உங்கள் வாக்காளர் அடையாள அட்டையை மாற்றுவதற்கு விண்ணப்பிக்க, தேசிய வாக்காளர் சேவைகள் போர்ட்டலில் நீங்கள் பதிவுசெய்த கணக்கு வைத்திருக்க வேண்டும்.

ஆன்லைனில் திருமணத்திற்குப் பிறகு வாக்காளர் அடையாள அட்டையை மாற்றுவது எப்படி?

வாக்காளர் அடையாள அட்டையைப் புதுப்பிக்க வேண்டும் என்றால் படிவம் 8-ஐ நிரப்ப வேண்டும். இந்த படிவம் திருமணத்திற்குப் பிறகு வாக்காளர் அடையாள அட்டையை மாற்றுவதற்குப் பயன்படுத்தப்படுகிறது.

- தேசிய வாக்காளர் சேவை போர்ட்டல் (NVSP) இணையதளத்தில் login செய்யவும்.
- ‘Shifting of residence/ correction of entries in existing electoral roll’ பக்கத்தை தேர்வு செய்து அதில் படிவம் 8-ஐ நிரப்பவும் என்ற ஆப்சனை தேர்வு செய்யவும்.
- உங்கள் EPIC எண்ணைக் காட்ட ‘Self’ என்பதைத் தேர்வு செய்து சமர்ப்பிக்கவும்.
- உங்கள் வாக்காளர் விவரங்களை பார்த்து, புதிய முகவரி சட்டமன்றத் தொகுதிக்குள் உள்ளதா அல்லது வெளியில் உள்ளதா என்பதைக் குறிப்பிடும் 'குடியிருப்பை மாற்றுதல்' விருப்பத்தைத் தேர்ந்தெடுக்கவும்.
- மாநிலம், மாவட்டம், சட்டமன்றம் அல்லது நாடாளுமன்றத் தொகுதி, ஆதார் எண், மொபைல் எண், மின்னஞ்சல் மற்றும் புதிய முகவரி உள்ளிட்ட தேவையான விவரங்களுடன் படிவம் 8ஐப் பூர்த்தி செய்யவும். தேவையான முகவரிச் சான்று ஆவணத்தைப் பதிவேற்றி, தகவலை அறிவித்து, கேப்ட்சா குறியீட்டை உள்ளிட்டு, ’Preview and Submit’ என்பதற்குச் செல்லவும்.
- பூர்த்தி செய்யப்பட்ட படிவம் 8ஐ மதிப்பாய்வு செய்து பின்னர் சமர்ப்பிக்கவும்.

நீங்கள் படிவம் 8 ஐச் சமர்ப்பித்த பிறகு, உங்கள் பதிவு செய்யப்பட்ட மொபைல் எண்ணில் ஒரு செய்தியைப் பெறுவீர்கள் அல்லது உங்கள் விண்ணப்பத்தின் ஆதார் எண்ணுடன் மின்னஞ்சலைப் பெறுவீர்கள். புதிய வாக்காளர் அடையாள அட்டையை சில நாட்களில் தேர்தல் அலுவலகத்திலிருந்து பெற்றுக் கொள்ளலாம் அல்லது என்விஎஸ்பி போர்ட்டலில் இருந்து டிஜிட்டல் வாக்காளர் ஐடியைப் பதிவிறக்கம் செய்யலாம். புதிய முகவரி மாற்றத்துக்கும் இதே நடைமுறையையே பின்பற்ற வேண்டும்.

மேலும் படிக்க | Instagram போஸ்ட்களை ஒரே நேரத்தில் மொத்தமாக நீக்குவது எப்படி? இதோ வழிகாட்டி

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News