இனி அலையவே வேண்டாம்... ரயிலில் காலி சீட் இருப்பதை எளிமையாக தெரிஞ்சிக்கலாம்!

How To Check Seat Vacany In Train: ரயிலில் காலியாக உள்ள இருக்கைகள் குறித்த தகவல்களை பெற டிக்கெட் பரிசோதகரை இனி தேட வேண்டாம், எளிமையாக மொபைலிலேயே பார்த்துக்கொள்ளலாம். 

Written by - Sudharsan G | Last Updated : Sep 26, 2023, 10:18 AM IST
  • IRCTC செயலிலோ அல்லது இணையதளத்திலோ உள்நுழைய வேண்டியதில்லை.
  • மொபைல் ஃபோனில் அதிகாரப்பூர்வ IRCTC செயலியையும் பயன்படுத்தலாம்.
  • காலி இருக்கைகள் இருப்பதை காணுவதன் மூலம் டிக்கெட் முன்பதிவை செய்துகொள்ளலாம்.
இனி அலையவே வேண்டாம்... ரயிலில் காலி சீட் இருப்பதை எளிமையாக தெரிஞ்சிக்கலாம்! title=

How To Check Seat Vacany In Train: பண்டிகை காலங்களில் மட்டுமின்றி அனைத்து நேரங்களிலும் மக்கள் ரயிலில் டிக்கெட் முன்பதிவு செய்வதையே விரும்புகின்றனர். ரயில் நிலையங்களின் கவுண்டர்களில் டிக்கெட் எடுப்பதை விட ஆன்லைனில் IRCTC செயலி மூலமோ அல்லது வேறு ரயில் டிக்கெட் முன்பதிவு செயலி மூலமோ டிக்கெட் எடுப்பது தற்போதைய சூழலில் எளிதாகிவிட்டது. 

மற்ற பொது போக்குவரத்தில் பயணம் செய்வது போன்று, இன்றும் ரயிலில் செல்வது ஒரு நல்ல வழி ஆகும். முன்னதாக, காலி இருக்கைகள் குறித்த தகவல்களை பெற பயணிகள், ரயிலில் டிக்கெட் பரிசோதகரை தேடி ஓட வேண்டியிருக்கும். ஆனால் இப்போது, ரயிலில் காலியாக உள்ள இருக்கைகள் குறித்த தகவல்களை உங்களது மொபைல் போன் மூலமே தற்போது எளிமையாக பெறலாம். இதற்கு நீங்கள் IRCTC செயலிலோ அல்லது இணையதளத்திலோ உள்நுழைய வேண்டியதில்லை. சாதரணமாக அதன் இணைப்பைக் கிளிக் செய்தால், ரயிலில் எந்த இருக்கைகள் காலியாக உள்ளன என்பதை நீங்கள் உடனடியாக அறிந்து கொள்ளலாம்.

மேலும் படிக்க | சினிமா வெறியர்கள் கவனத்திற்கு... 20 நாள் 20 திரைப்படங்கள் இலவசம் தான்... எந்த ஓடிடியில் தெரியுமா?

வழிமுறைகள்

Step 1: IRCTC இணையதளத்திற்குச் சென்று முதன்மைப் பக்கத்திற்குச் செல்லவும். டிக்கெட் முன்பதிவு பெட்டியின் மேலே "Charts/காலியிடங்கள்" ஆப்ஷன் தோன்றும்.
Step 2: இதை கிளிக் செய்யவும். அதன் பிறகு, Reservation Chart பக்கம் திறக்கும்.
Step 3: முதல் பெட்டியில் ரயிலின் பெயர்/எண்ணையும், இரண்டாவது பெட்டியில நீங்கள் உங்கள் பயணத்தை தொடங்கும் ரயில் நிலையத்தையும் உள்ளிடவும்.
Step 4: பிறகு "Get Train Chart" என்பதைக் கிளிக் செய்யவும். இதன் மூலம் நீங்கள் செல்ல விரும்பும் ரயிலில் காலி இடங்கள் பற்றிய தகவல்களைப் பெறுவீர்கள்.

ரயிலில் காலியாக உள்ள இருக்கைகளை எவ்வாறு கண்டறிவது?

மொபைல் ஃபோனில் அதிகாரப்பூர்வ IRCTC செயலியையும் பயன்படுத்தலாம். இந்த ஆப்ஸ் ஆண்ட்ராய்டு மற்றும் iOS இயங்குதளங்களில் கிடைக்கிறது மற்றும் காலியான இருக்கைகளை முன்பதிவு செய்ய உதவும். நீங்கள் அதை உங்கள் தொலைபேசியில் பதிவிறக்கம் செய்து நிறுவ வேண்டும். பின்னர் நீங்கள் கிடைக்கக்கூடிய காலி இருக்கைகளை எளிதாக பதிவு செய்யலாம். கீழே கொடுக்கப்பட்டுள்ள 5 படிகளைப் பார்ப்பதன் மூலம், காலியான இருக்கையை எவ்வாறு பார்ப்பது என்பதை நீங்கள் புரிந்து கொள்ளலாம். 

Step 1: IRCTC செயலியைத் திறக்கவும்.
Step 2: ரயில் ஐகானைத் தட்டவும்.
Step 3: Chart Vacancy ஆப்ஷனை கிளிக் செய்யவும். அதன் பிறகு, மொபைல் இணைய உலாவியில் முன்பதிவு விளக்கப்படப் பக்கம் திறக்கும்.
Step 4: இப்போது இரண்டாவது பெட்டியில் ரயிலின் பெயர்/எண் மற்றும் நீங்கள் உங்கள் பயணத்தை தொடங்கும் ரயில் நிலையத்தையும் உள்ளிடவும். அதன் பிறகு, காலியான இருக்கைகள் பற்றிய தகவல்கள் திரையில் காட்டப்படும்.

நீங்கள் தட்கல் முறையில் டிக்கெட் எடுக்க முயன்றால், உங்களுக்கு டிக்கெட் கிடைப்பது அரிது தான். அதில் எளிமையாக டிக்கெட் கிடைக்கவும் வழி உள்ளது. IRCTC Tatkal Automation Tool என்பது முன்பதிவு நேரத்தை கணிசமாகக் குறைக்க வடிவமைக்கப்பட்ட இலவச ஆன்லைன் கருவியாகும். பெயர்கள், வயது மற்றும் பயணத் தேதிகள் போன்ற பயணிகளின் விவரங்களை விரைவாக ஏற்றுவதன் மூலம் செயல்முறையை இது நெறிப்படுத்துகிறது. மேலும் தட்கல் டிக்கெட்டுகளை வாங்குவதற்கான நடைமுறையை துரிதமாக்குகிறது.  

மேலும் படிக்க | IRCTC தட்கல் ஆட்டோமேஷன் டூல் மூலமாக சட்டென்று ரயில் டிக்கெட்டை புக் செய்வது எப்படி?

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News