Flipkart சலுகை: iPhone 12 இல் மெகா பம்பர் தள்ளுபடிகள்.. முந்துங்கள்

பிளிப்கார்ட் (Flipkart) தனது Big Bachat Dhamaal விற்பனையில் பல அற்புதமான சலுகைகளை வழங்குகிறது.

Written by - ZEE TAMIL NEWS | Last Updated : Jan 9, 2022, 09:24 AM IST
  • பிளிப்கார்ட்டில் பிக் பச்சட் தமால் விற்பனை
  • iPhone 12 இல் 30 ஆயிரத்துக்கும் அதிகமான தள்ளுபடியைப் பெறுங்கள்
  • ஜனவரி 9 வரை விற்பனை தொடரும்
Flipkart சலுகை: iPhone 12 இல் மெகா பம்பர் தள்ளுபடிகள்.. முந்துங்கள் title=

புதுடெல்லி: ஃபிளிப்கார்ட்டில் (Flipkart) Big Bachat Dhamaal விற்பனை ஜனவரி 7 முதல் தொடங்கியது. ஜனவரி 9-ம் தேதியுடன் முடிவடையும் இந்த விற்பனையில், ஸ்மார்ட்போன்கள் உள்ளிட்ட பல பொருட்களுக்கு பெரும் தள்ளுபடி வழங்கப்படுகிறது. இந்த விற்பனையின் மூலம், ஆப்பிள் நிறுவனத்தின் ஐபோன் 12 ஐ 30 ஆயிரம் ரூபாய்க்கு மேல் தள்ளுபடியுடன் வாங்கலாம். இந்த ஒப்பந்தம் பற்றி அனைத்தையும் தெரிந்து கொள்வோம்.

iPhone 12 இல் இதுவரை இல்லாத மிகப்பெரிய தள்ளுபடி
Flipkart இலிருந்து iPhone 12 இல் 18% தள்ளுபடிக்குப் பிறகு 53,999 ரூபாய்க்கு வாங்கலாம். இந்த ஸ்மார்ட்போனின் ஒரிஜினல் விலை 65,900 ரூபாய்க்கு ஆகும். ஃப்ளிப்கார்ட் இல் ஆக்சிஸ் வங்கியின் கிரெடிட் கார்டை (Axis Bank Credit Card) பயன்படுத்தி இந்த போனை வாங்கும் போது ரூ.2,700 கேஷ்பேக் கிடைக்கும், அதன்படி இந்த போனின் விலையை ரூ.51,299 ஆக குறைக்கும்.

ALSO READ | வெறும் ஆயிரம் ரூபாய்க்கு 32 இன்ச் Smart TV வாங்க அறிய வாய்ப்பு 

iPhone 12 இல் எக்ஸ்சேஞ்ச் ஆஃபர்
Flipkart இன் இந்த சிறந்த ஒப்பந்தத்தில், உங்களுக்கு ஒரு எக்ஸ்சேஞ்ச் சலுகையும் வழங்கப்படுகிறது. உங்கள் பழைய ஸ்மார்ட்போனுக்கு பதிலாக இந்த புதிய ஸ்மார்ட்போனை வாங்குவதன் மூலம் ரூ.15,450 வரை சேமிக்கலாம். இந்த எக்ஸ்சேஞ்ச் சலுகையின் முழுப் பலனையும் நீங்கள் பெற்றால், ஐபோன் 12 ஐ வெறும் ரூ.35,849க்கு வாங்கலாம். ஒட்டுமொத்தமாக, இந்த ஒப்பந்தத்தில் நீங்கள் ரூ.30,051 தள்ளுபடியைப் பெறலாம்.

iPhone 12 அம்சங்கள்
iPhone 12 இன் 64GB மாறுபாடு பற்றி பேசுகையில், இதில் A14 பயோனிக் சிப்பில் வேலை செய்கிறது. 6.1-இன்ச் சூப்பர் ரெடினா எக்ஸ்டிஆர் டிஸ்ப்ளே, டூயல் சிம் மற்றும் 5ஜி சேவைகள் மற்றும் இரண்டு சென்சார்கள் 12எம்பி கொண்ட இரட்டை பின்புற கேமரா அமைப்பையும் பெறுவீர்கள். இந்த போனின் முன்பக்க கேமரா  12எம்பி ஆகும். வலுவான பேட்டரி கொண்ட இந்த ஸ்மார்ட்போன் ஒரு வருட பிராண்ட் வாரண்டியுடன் வருகிறது.

Flipkart இன் Big Bachat Dhamal விற்பனை மூன்று நாட்களுக்கு மட்டுமே நடைபெறும். ஜனவரி 7ஆம் தேதி தொடங்கிய இந்த விற்பனைக்கு இன்று அதாவது ஜனவரி 9ஆம் தேதி கடைசி நாளாகும்.

ALSO READ | Vivo: மாஸாக வெளியானது 'Vivo V23, Vivo V23 Pro'..! அட்டகாசமான விலை.. 

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G

Apple Link - https://apple.co/3loQYeR

Trending News