Google Translate இனி வேலை செய்யாது! சேவையை நிறுத்திய கூகுள்!

கூகுள் மொழிபெயர்ப்பு வசதியை கூகுள் நிறுவனம் கடந்த 2017ம் ஆண்டு சீனாவில் அறிமுகம் செய்திருந்த நிலையில் தற்போது இந்த வசதியை கூகுள் நிறுவனம் சீனாவில் நிறுத்தியுள்ளது.  

Written by - RK Spark | Last Updated : Oct 4, 2022, 08:20 PM IST
  • Google Translate சீனாவில் நிறுத்தம்.
  • போதிய வரவேற்பு இல்லாததால் நிறுத்தம்.
  • செப்டம்பர் 30ம் முதல் நிறுத்தப்பட்டுள்ளது.
Google Translate இனி வேலை செய்யாது! சேவையை நிறுத்திய கூகுள்! title=

கூகுள் அதன் வாடிக்கையாளர்களுக்கு வழங்கும் பல்வேறு அம்சங்களில் ஒன்றுதான் கூகுள் ட்ரான்ஸ்லேட், இதன்மூலம் மக்கள் மற்ற மொழிகளை தங்கள் மொழியிலேயே மொழிபெயர்த்து தெரிந்து கொள்ளலாம்.  இந்நிலையில் கூகுள் நிறுவனம் சீனாவில் அதன் கூகுள் ட்ரான்ஸ்லேட் வசதியை நிறுத்துவதாக அறிவிப்பினை வெளியிட்டு இருக்கிறது.  கடந்த செப்டம்பர் 30ம் தேதியன்றே சிலருக்கு கூகுளின் இந்த ட்ரான்ஸ்லேட் சேவை செயல்படவில்லை சீன சமூக வலைத்தளங்களின் மூலம் தெரிவிக்கப்பட்டுள்ளது, விபிஎன் இல்லமால் இந்த மொழிபெயர்ப்பு சேவையை அணுகமுடியாது என்ற நிலை ஏற்பட்டது.  இந்த மொழிபெயர்ப்பு வசதியை கூகுள் நிறுவனம் கடந்த 2017ம் ஆண்டு சீனாவில் அறிமுகம் செய்திருந்த நிலையில் தற்போது இந்த வசதியை நிறுத்தியுள்ளது, இதற்கு காரணம் என்னவென்றால் கூகுள் ட்ரான்ஸ்லேட் பயன்பாடு சீனாவில் குறைவாக இருப்பது தான் என்று கூறப்படுகிறது.

மேலும் படிக்க | கிரெடிட் கார்ட் மூலம் ஷாப்பிங் செய்யறீங்களா? EMI-ன் இந்த முக்கிய விஷயங்களில் கவனம் தேவை

கூகுள் குரோம் பிரவுசரில் உள்ளமைக்கப்பட்ட மொழிபெயர்ப்பு அம்சம் சீனாவில் உள்ள பயனர்களுக்கு இனி செயல்படாது.  அமெரிக்க தொழில்நுட்ப நிறுவனமான கூகுள் சீனாவுடன் அபாயமான உறவை கொண்டிருந்தது, நாட்டின் தணிக்கை விதிகளை கடைபிடிக்க விரும்பாததால் கூகுள் அதன் சர்ச் இஞ்சினை கடந்த 2010ம் ஆண்டு சீனாவிலிருந்து விலக்கி கொண்டது.  இதன் பின்னர் கூகுளின் சேவைகளில் சிலவையான ஜிமெயில் மற்றும் கூகுள் மேப்ஸ் போன்ற சேவைகளை நிறுத்தும் எண்ணத்திற்கு கூகுள் நிறுவனம் சென்றது.  தங்களது தணிக்கை விதிகளுக்கு உட்படாததால் சீனா கூகுள், பேஸ்புக், ட்விட்டர் போன்ற சமூக ஊடக சேவைகளை தடுக்க சீன அரசு நினைக்கிறது.

சீனாவில் பிரபலமாக இருந்துவந்த உள்நாட்டு மொழிபெயர்ப்பு தளங்களான Baidu மற்றும் Sogou போன்றவற்றிற்கு போட்டியாக கூகுள் அதன் மொழிபெயர்ப்பை களமிறக்கியது.  மேலும் கூகுள் சீனாவுக்கென்று தனியாக சர்ச் இன்ஜின் வழங்க முடிவு செய்தது, அனால் பின்னர் சில காரணங்களால் 2019ம் ஆண்டு இந்த முயற்சியை கைவிட்டது.

மேலும் படிக்க | வாட்ஸ் அப் மூலம் ஆதார், பான் மற்றும் முக்கிய ஆவணங்களை டவுன்லோடு செய்வது எப்படி?

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ 

Trending News