'கல்லை சாப்பிடுங்கள்...' கூகுள் தேடலின் AI சொன்ன வினோத பதில் - வச்சு செய்யும் நெட்டிசன்கள்!

Google Search AI Overview: கூகுள் தேடல் பிரிவில் வந்துள்ள புதிய AI Overview அம்சம், பயனர்களுக்கு பல்வேறு தவறான மற்றும் வினோத பதில்களை அளிப்பதாக புகார்கள் எழுந்துள்ளன. 

Written by - Sudharsan G | Last Updated : May 24, 2024, 06:39 PM IST
  • கூகுளின் AI Overview சமீபத்தில் அறிமுகப்படுத்தப்பட்டது.
  • AI Overview அம்சத்தை சில பயனர்கள் பயன்படுத்தி விமர்சித்துள்ளனர்.
  • சமூக வலைதளங்களில் AI Overview மீதான விமர்சனங்களையும் பதிவிட்டு வருகின்றனர்
'கல்லை சாப்பிடுங்கள்...' கூகுள் தேடலின் AI சொன்ன வினோத பதில் - வச்சு செய்யும் நெட்டிசன்கள்! title=

Google Search AI Overview: செயற்கை நுண்ணறிவு எனப்படும் AI தற்போது அனைத்து துறைகளிலும் தங்களின் வேர்களை பரப்பி வருகிறது. செயற்கை நுண்ணறிவு ஒவ்வொரு துறையின் முகத்தையே முற்றிலுமாக மாற்றி வருகிறது. அதிலும் குறிப்பாக கல்வித்துறையில் செயற்கை நுண்ணறிவின் தாக்கம் என்பது அதிகரித்துவிட்டது. மாணவர்கள், ஆசிரியர்கள், பேராசிரியர்கள் தொடங்கி அனைவரும் செயற்கை நுண்ணறிவை சார்ந்து இயங்க தொடங்கிவிட்டனர். இதனால், பல்வேறு முன்னணி நிறுவனங்களும் தங்களுக்கு தேவையான அளவில் AI தொழில்நுட்பத்தை பயன்படுத்த தொடங்கிவிட்டன. 

கூகுள் அதன் சமீபத்திய I/O 2024 விழாவில் அதன் பயனர்களுக்கு ஒரு சிறப்பான அறிவிப்பு ஒன்று வெளியிட்டிருந்தது. அதாவது கூகுள் தேடுதல் (Google Search) அம்சத்தில் பயனர்களின் பயன்பாட்டுக்கு செயற்கை நுண்ணறிவு அம்சமான AI Overview வசதியை வழங்குவதாக அறிவித்தது. பல பயனர்கள் பயன்படுத்திய நிலையில் அதுகுறித்த விமர்னங்களும் அதிகரித்து காணப்படுகிறது. 

AI Overview: எழும் குற்றச்சாட்டுகள்

கூகுள் தேடல் அம்சத்தில் கிடைக்கும் AI Overview தொடர்ந்து தவறான தகவல்களை வழங்குவதாக தங்களின் புகார்களை சமூக வலைதளங்கள் மூலம் பயனர்கள் தெரிவித்து வருகின்றனர். குறிப்பாக, பீட்சாவில் பசையை சேர்த்து சாப்பிடும்படியும், கற்களை சாப்பிடும்படியும் Google AI Overview பரிந்துரை செய்வதாக குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன, சமூக வலைதளங்களிலும் இதுகுறித்து தொடர்ந்து பதிவிடப்பட்டு வருகிறது. 

மேலும் படிக்க | AI வந்தாலும் இந்த வேலையில் உள்ளவர்களுக்கு எந்த பிரச்சனையும் வராது!

இந்த விவகாரம் முதன்முதலில் X தளத்தில்தான் எழுந்தது. X பயனரான Peter Yang என்பவர்,"Cheese பீட்ஸாவில் ஒட்டுவதில்லை" என கூகுள் தேடலில் தேடியுள்ளார். அதற்கு கூகுளின் AI Overview,'விஷமில்லாத பசையை பயன்படுத்தலாம்' என பதில் அளித்துள்ளது.11 வருடம் பழைய Reddit பதிவை அடிப்படையாக கொண்டு அந்த AI Overview பதிலளித்துள்ளது. 

வினோதமான பதில்கள்

தொடர்ந்து மற்றொரு பயனர் கூகுள் தேடலில்,'எத்தனை கற்களை தினமும் சாப்பிடலாம்' என கேட்டதற்கு AI Overview வினோதமான மற்றொரு பதிலை அளித்துள்ளது. குறைந்தபட்சம் ஒரு நாளுக்கு ஒரு கல்லையாவது சாப்பிடலாம் என்றும் அதில் கனிமம் மற்றும் வைட்டமிண்கள் உள்ளதால் செரிமான ஆரோக்கியத்திற்கு அத்தியாவசியமானது என பதில் அளித்துள்ளது. இது UC Berkeley விஞ்ஞானிகளை குறிப்பிட்டு இந்த பதிலை அது அளித்துள்ளது. 

அதுமட்டுமின்றி, மற்றொரு சர்ச்சையையும் கூகுளின் AI Overview கிளப்பியுள்ளது. அமெரிக்காவின் இஸ்லாமிய அதிபர்கள் குறித்து கேட்டதற்கு, அது பராக் ஒபாமாவை பதிலாக கூறியுள்ளது. ஒபாமா இஸ்லாமிய மதத்தை பின்பற்றுபவர் அல்ல. இருப்பினும் இதுசார்ந்த புரளிகள் சமூக வலைதளங்களில் இருப்பதையொட்டி இந்த பதில் அளிக்கப்பட்டுள்ளது.

கூகுளின் விளக்கம்

எனவே, இவ்வாறு தவறான தகவல்களை அளிக்கும் AI Overview அம்சத்தை உடனடியாக சீர் செய்ய வேண்டும் எனவும், அந்த அம்சத்தை தற்சமயம் நீக்க வேண்டும் எனவும் நெட்டிசன்கள் தங்களின் கருத்து தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில், கூகுள் இதுசார்ந்து விளக்கம் அளித்துள்ளது. அதில்,"இந்த தவறுகள் அனைத்தும் பொதுவாக மிக அரிதான கேள்விகளுக்கே ஏற்பட்டுள்ளது என்றும் இதுபோன்று குறைந்த நபர்களுக்கே நடந்துள்ளது" என்றும் பதிலளித்துள்ளது.

மேலும் படிக்க |இனி இறந்தவர்கள் உடனும் பேசலாம்... சீனாவில் டிரெண்டாகும் AI... வெறும் ரூ.235 தான்!

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News