Google Pay-ல் புதிய அம்சம்: UPI பரிவர்த்தனை இனி ஈஸி

கூகுள் பே மூலம் பணப்பரிவர்த்தனை செய்யும் வாடிக்கையாளர்கள் இனி ஈஸியாக பின் இல்லாமலேயே பணத்தை ஒருவருக்கு அனுப்ப முடியும்.   

Written by - S.Karthikeyan | Last Updated : Jul 30, 2023, 05:41 PM IST
  • கூகுள் பே-வில் புதிய அம்சம்
  • இனி பின் தேவையில்லை
  • ஈஸியாக பணம் அனுப்பலாம்
 Google Pay-ல் புதிய அம்சம்: UPI  பரிவர்த்தனை இனி ஈஸி  title=

இந்தியாவில் செயலிகள் மூலம் பணப்பரிவர்த்தனை செய்வது அதிகரித்து வருகிறது. கூகுள் பே, பேடிஎம், போன் பே உள்ளிட்ட செயலிகள் மூலம் வாடிக்கையாளர்கள் க்யூ ஆர் கோட் அல்லது மொபைல் நம்பர் இட்டு பணம் செலுத்தி வந்தனர். இதில் கூடுதல் அம்சத்தை யுபிஐ லைட் அறிமுகம் செய்திருக்கிறது. சிறிய டிஜிட்டல் பரிவர்த்தனைகளை எளிதாக்கும் வகையில் UPI LITE-ஐ வியாழக்கிழமை அறிமுகப்படுத்தியது. UPI Lite ஆனது பயனர்கள் ஒரு நாளில் ரூ. 4,000 வரை டெபாசிட் செய்த கொள்ளலாம். ரூ. 200 வரை பணத்தை பின் இல்லாமல் அனுப்பிக் கொள்ள முடியும்.

மேலும் படிக்க | ஆண்ட்ராய்டு பயனர்களுக்கு எச்சரிக்கை! ஆகஸ்ட் 31-க்குள் இத பண்ணிடுங்க!

யுபிஐ பணப்பரிவர்த்தனை ஈஸி

கூகுள் பே-வில் புதிய லைட் அம்சம் அறிமுகப்படுத்தியிருக்கும் நிலையில், இந்தச் சேவையில் பணம் செலுத்துவதற்கு எந்தவிதமான பின் நம்பரையும் உள்ளிட வேண்டிய அவசியமில்லை. UPI லைட்டின் நோக்கம் டிஜிட்டல் பணம் செலுத்துவதை எளிதாக்குவதே ஆகும். யுபிஐ லைட் மூலம், உடனடியாகப் பணம் செலுத்துவதற்காக ஒரு நாளில் ரூ. 4,000 வரை டெபாசிட் செய்யும் வசதியைப் வாடிக்கையாளர்கள் பெறுவார்கள். ஆனால் ஒரு முறை அதிகபட்சமாக 200 ரூபாய்  செலுத்த முடியும். தற்போது, 15 வங்கிகள் UPI லைட் வசதியை ஆதரிக்கின்றன.

UPI லைட் ஆக்டிவேட் செய்யும் முறை 

- முதலில் Google Pay தளத்துக்குச் செல்லவும்.
- மொபைலின் திரையின் மேல் வலது மூலையில் உள்ள சுயவிவர ஐகானில் கிளிக் செய்யவும்.
- கீழே ஸ்க்ரோல் செய்து, 'UPI லைட்' அம்சத்தைத் தேடி அதை கிளிக் செய்யவும்.
- அடுத்து UPI Lite பற்றிய வழிமுறைகள் மற்றும் விவரங்களுடன் புதிய திரை திறக்கும்.
- இப்போது Activate UPI Lite என்பதை கிளிக் செய்யவும்.
- உங்கள் வங்கிக் கணக்கை இணைத்து, திரையில் உள்ள வழிமுறைகளைப் பின்பற்றவும்.
- செயல்முறை முடிந்ததும், உறுதிப்படுத்தல் செய்தியைப் பெறுவீர்கள்.

மேலும் படிக்க | ரயில் கட்டணத்தில் விமான டிக்கெட்டுகளை புக் செய்யலாம், எப்படி? உடனே படியுங்கள்

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

 

Trending News