Good news: இனி Whatsapp மூலமே McDonald’s-ல் ஆர்டர் செய்யலாம்!!

McDonald India செவ்வாய்க்கிழமை முதல் அதன் செயலியைத் தவிர WhatsApp மூலமும் ஆர்டர்களை எடுக்கத் தொடங்கியுள்ளது.

Written by - ZEE TAMIL NEWS | Last Updated : Dec 24, 2020, 01:21 PM IST
  • இனி MacDonald’s-க்கான உங்கள் ஆர்டரை WhatsApp மூலம் அனுப்பலாம்.
  • MacDonald’s India இந்த வசதியை வாடிக்கையாளர்களின் வசதிக்காக துவக்கியுள்ளது.
  • உங்களுக்கு பிடித்த உணவு வகைகளை மெனுவிலிருந்து WhatsApp மூலம் ஆர்டர் செய்யலாம்.
Good news: இனி Whatsapp மூலமே McDonald’s-ல் ஆர்டர் செய்யலாம்!!  title=

McDonald’s என்ற பெயரே பலரது பசி அணுக்களை தூண்டி விட்டுவிடும் திறன் படைத்தது. அப்படிப்பட்ட மெக்டொனால்டு காதலர்களுக்கு ஒரு நல்ல செய்தி. இப்போது உங்களுக்கு பிடித்த பர்கரை உங்கள் WhatsApp மூலமே ஆர்டர் செய்யலாம்.

McDonald India செவ்வாய்க்கிழமை முதல் அதன் செயலியைத் தவிர WhatsApp மூலமும் ஆர்டர்களை எடுக்கத் தொடங்கியுள்ளது.

WhatsApp மூலம் McDonald’s-ல் ஆர்டர் செய்வது எப்படி?

உங்களுக்கு பிடித்த பிக் மேக் அல்லது மேக் ஸ்லஷியை ஆர்டர் செய்ய, நீங்கள் செய்ய வேண்டியது உங்கள் எண்ணிலிருந்து 953916666 என்ற எண்ணுக்கு ‘Hi’ என்று செய்தி அனுப்ப வேண்டும். இது McDonald’s India-வின் அதிகாரப்பூர்வ WhatsApp எண்ணாகும். நீங்கள் ‘Hi’ என்ற செய்தியை அனுப்பியவுடன் MacDonald’s உடனான உங்கள் சேட் பாக்சில் அவர்களது மெனுவிற்கான லிங்க், அதாவது இணைப்பு கிடைக்கும்.

நீங்கள் இணைப்பைத் திறந்தவுடன், உங்களுக்கு பிடித்த உணவு வகைகளை மெனுவிலிருந்து ஆர்டர் செய்யலாம். மேலும், உங்கள் WhatsApp எண் மற்றும் டெலிவரி செய்ய வேண்டிய முகவரி போன்ற விவரங்களை உள்ளிட வேண்டும். ஆர்டர் உறுதிசெய்யப்பட்ட பிறகு, ஆர்டர் விவரங்களுடன் உங்கள் எண்ணுக்கு ஒரு விலைப்பட்டியல் அனுப்பப்படும்.

ALSO READ: 2020-ல் நொடிக்கு 2 முறைக்கு மேல் Swiggy-ல் order செய்யப்பட்ட ‘India’s Favourite Dish’ எது தெரியுமா?

இப்போது இந்த சேவை டெல்லி (Delhi) என்.சி.ஆர் மக்களுக்கு மட்டுமே அளிக்கப்படுகின்றது.

இந்த சேவை டெல்லி என்.சி.ஆரில் உள்ள McDonald’s உணவகங்களில் மட்டுமே கிடைக்கிறது. இதன் பொருள் நீங்கள் மும்பை, பெங்களூரு அல்லது புனே அல்லது வேறு எந்த இந்திய நகரத்திலும் இருந்தாலும், இப்போதைக்கு இந்த சேவையை நீங்கள் பெற முடியாது. எனினும் இந்த சேவை விரைவில் நாடு முழுவதும் வழங்கப்படும் என நிறுவனம் கூறியுள்ளது.

முன்னதாக, MacDonald’s-ன் மற்றொரு சேவையை நிறுவனம் அறிமுகப்படுத்தியது. இதன் மூலம் வாடிக்கையாளர்கள் மெக்டொனால்டு உணவகங்களில் இருக்கும் QR Code-ஐ ஸ்கேன் செய்து, தங்கள் விருப்பப்படி தொடர்பு இல்லாத டேக்அவே (Takeaway) அல்லது டைனிங்-இன் சேவையைத் தேர்ந்தெடுக்க முடியும்.

இப்போது WhatsApp மூலம் ஆர்டர் செய்யலாம் என வந்துள்ள இந்த வசதி McDonald’s பிரியர்களுக்கு அதிக மகிழ்ச்சியை அளித்துள்ளது!!

ALSO READ: Jan 1 முதல் Whatsapp இந்த phone-களில் இயங்காது: உங்க phone list-ல இருக்கா?

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G

Apple Link - https://apple.co/3loQYeR

Trending News