மின்சார வாகனக் கடன்: பெட்ரோல், டீசல் விலை உயர்வு சாமானிய மக்களின் பிரச்சனைகளை அதிகரித்துள்ளது. உணவு, பானங்கள் முதல் மக்களின் பயணம் வரை அனைத்தும் விலை உயர்ந்ததாகிவிட்டன.
இப்படிப்பட்ட சூழ்நிலையில் பெட்ரோல், டீசல் விலை அதிகரித்து வருவதைத் தவிர்க்க மின்சார கார், மின்சார பைக் போன்ற மின்சார வாகனங்களை வாங்க மக்கள் ஆர்வம் காட்டி வருகிறார்கள். கடந்த சில நாட்களாக மின்சார வாகனங்கள் மீது மக்கள் மத்தியில் அதிக ஆர்வம் ஏற்பட்டுள்ளது.
மின்சார வாகனங்கள் குறித்த விழிப்புணர்வு மக்களிடையே அதிகரித்துள்ளதால், அரசும் மின்சார கார்களை வாங்க ஊக்குவித்து வருகிறது. மின்சார காரின் சிறப்பு என்னவென்றால், பெட்ரோல் டீசலை விட இந்த காருக்கு மிகக் குறைவான பணத்தையே செலவழிக்க வேண்டியிருக்கும்.
மின்சார வாகனம் வாங்கும்போது விதிக்கப்படும் வரியில் வாடிக்கையாளர்களுக்கு பெரும் சலுகையை அரசு வழங்கி வருகிறது. இதனுடன், வங்கிகளும் மின்சார வாகனங்களுக்கு எளிதாகவும் மலிவு விலையிலும் கடன் வழங்குகின்றன. மின்சார வாகனங்களுக்கு கிடைக்கும் கடன் பற்றி இந்த பதிவில் தெரிந்து கொள்வோம்.
வரி விலக்கு பலன் கிடைக்கும்
வருமான வரி விதிகளின்படி, ஒருவர் மின்சார வாகனம் வாங்கினால், வருமான வரியின் 80EEB பிரிவின் கீழ் 1.5 லட்சம் ரூபாய் விலக்கு அளிக்கப்படும். இந்த விலக்கு 80C இன் கீழ் கிடைக்கும் விலக்கிலிருந்து வேறுபட்டது.
இரு சக்கர மற்றும் நான்கு சக்கர வாகனங்களுக்கு இந்த தள்ளுபடி கிடைக்கும். இதனுடன், சில மாநிலங்களில் மின்சார வாகனங்களை ஊக்குவிக்கும் வகையில், வாகனத்தின் பதிவுக் கட்டணம் மற்றும் சாலை வரியை தள்ளுபடி செய்ய முடிவு செய்யப்பட்டுள்ளது. ஆனால், இந்த வரியின் பலன் வரி செலுத்தும் நபருக்கோ அல்லது மின்சார வாகனத்தை வணிகத்திற்காக பயன்படுத்துவவருக்கோ வழங்கப்படும்.
மேலும் படிக்க | மக்கள் இவ்வளவு Ola பைக்கா வாங்குறாங்க?? - வெளியான புள்ளி விவரம்
வங்கிகள் வாடிக்கையாளர்களுக்கு மின்சார வாகனக் கடனில் பெரும் தள்ளுபடியை வழங்குகின்றன
நாட்டின் மிகப்பெரிய பொதுத்துறை வங்கியான ஸ்டேட் பாங்க் ஆப் இந்தியா, மின்சார வாகனங்களுக்கான கடனில் வாடிக்கையாளர்களுக்கு பல கவர்ச்சிகரமான சலுகைகளை வழங்குகிறது. வாகனத்தின் ஆன்ரோடு விலையில் வாடிக்கையாளர்களுக்கு 90 சதவீதம் வரை வங்கி கடன் வழங்குகிறது.
இந்த கடனுக்கான வட்டி விகிதம் 7.05 சதவீதம் முதல் 7.75 சதவீதம் வரை இருக்கும். மறுபுறம், யூனியன் வங்கி மின்சார வாகனங்களுக்கு 10 லட்சம் வரை கடன் வழங்குகிறது. நான்கு சக்கர வாகனக் கடனை 84 மாதங்களிலும், இரு சக்கர வாகனக் கடனை 36 மாதங்களிலும் திருப்பிச் செலுத்தலாம். அதே நேரத்தில், தனியார் வங்கியான ஆக்சிஸ் வங்கி மாத சம்பளம் வாங்கும் நபர்களுக்கு சாலை விலையில் 85 சதவீதம் வரை கடனை வழங்குகிறது. இந்தக் கடனை 7 ஆண்டுகளுக்குள் திருப்பிச் செலுத்தலாம்.
மேலும் படிக்க | கார் பிரியர்களுக்கு ஷாக் கொடுத்த நிறுவனம்: கார் விலைகளில் அதிகரிப்பு
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR