ரூ.540-க்கு Oppo 5G ஸ்மார்ட்போனை வாங்கலாம்..! எப்படி?

சிறப்பு தள்ளுபடி விற்பனையை தொடங்கியிருக்கும் பிளிப்கார்ட்டில் 19 ஆயிரம் ரூபாய் மதிப்புள்ள Oppo 5ஜி ஸ்மார்ட்போனை வெறும் 540 ரூபாய்க்கு வாங்கும் வாய்ப்பு எப்படி? என்பதை பார்க்கலாம்

Written by - S.Karthikeyan | Last Updated : Mar 2, 2023, 02:05 PM IST
ரூ.540-க்கு Oppo 5G ஸ்மார்ட்போனை வாங்கலாம்..! எப்படி? title=

ஜனவரி 27 முதல், பிளிப்கார்ட் சிறப்பு தள்ளுபடியில் எலக்ட்ரானிக்ஸ் விற்பனையை தொடங்கியுள்ளது. இதில் ஸ்மார்ட்போன்கள் மற்றும் மடிக்கணினிகள் முதல் ஸ்மார்ட் டிவிகள், ஃப்ரிட்ஜ்கள் மற்றும் ஏசிகள் வரை அனைத்திற்கும் தள்ளுபடிகள் வழங்கப்படுகின்றன. இப்போது, ஸ்மார்ட்போனில் கிடைக்கும் சலுகைகளைப் பற்றி பார்க்கலாம். இந்த Flipkart விற்பனையில், Oppo A53s 5G ஐ ரூ.18,990க்கு பதிலாக வெறும் ரூ.540க்கு வாங்கலாம். 

Oppo A53s 5G தள்ளுபடி

Oppo A53s 5G சந்தையில் ரூ.18,990க்கு கிடைக்கிறது. 128ஜிபி இன்டெர்னல் ஸ்டோரேஜ் ஸ்மார்ட்போனை பிளிப்கார்ட்டின் சிறப்பு எலக்ட்ரானிக்ஸ் விற்பனையில் வாங்கினால் 15% தள்ளுபடி கிடைக்கும். இதன் மூலம் ரூ.15,990-க்கு ஸ்மார்ட்போன் உங்களுக்கு கிடைக்கும். இந்த தள்ளுபடி மட்டுமல்லாமல் மேலும் சில தள்ளுபடிகளையும் பிளிப்கார்ட் வாடிக்கையாளர்களுக்கு அள்ளி வழங்குகிறது. 

ALSO READ | Flipkart Sale: ரூ.70,999 ஸ்மார்ட் டிவி-ஐ வெறும் ரூ. 25,186-க்கு வாங்க சூப்பர் வாய்ப்பு

ரூ.540-க்கு வாங்குவது எப்படி?

பிளிப்கார்ட் வழங்கும் இந்த ஆஃபரில் எக்ஸ்சேஞ்ச் தள்ளுபடிகள் அறிவிக்கப்பட்டுள்ளன. அதனால், உங்களுடைய பழைய ஸ்மார்ட்போனை எக்ஸ்சேஞ்ச் செய்து அதிகபட்சமாக ரூ.15,450 வரை தள்ளுபடி பெறலாம். உங்களுக்கு இந்த எக்ஸ்சேஞ்ச் சலுகை முழுமையாக கிடைத்தால் Oppo A53s 5G ஸ்மார்ட்போன் ரூ.18,990-க்கு பதிலாக ரூ.540-க்கு கிடைக்கும். 

ALSO READ | Flipkart Offer; வெறும் ரூ.99க்கு Realme ஸ்மார்ட்போன் வாங்க அரிய வாய்ப்பு

Oppo ஸ்மார்ட்போனின் அம்சங்கள்

Oppo A53s 5G ஸ்மார்ட்போன் 8ஜிபி ரேம் மற்றும் 128ஜிபி இன்டர்னல் சேமிப்புடன் வரும் 5ஜி ஸ்மார்ட்போன். MediaTek Dimensity 700 செயலி மூலம் இயக்கப்படும் இந்த ஸ்மார்ட்போன் 6.52 இன்ச் HD+ டிஸ்ப்ளே மற்றும் பவர்புல் 5,000mAh பேட்டரி ஆகியவை இடம்பெற்றிருக்கும். கேமராவைப் பொறுத்த வரை போனில் மூன்று பின்புற கேமரா இருக்கும். பிரதான சென்சார் கேமரா 13MP ஆகவும், இரண்டாவது மற்றும் மூன்றாவது கேமரா தலா 2MP சென்சாரை கொண்டதாக இருக்கும். டூயல் சிம்கார்ட் உள்ளது. செல்பி கேமரா 9 எம்.பி.

ஜனவரி 31 ஆம் தேதி வரை மட்டுமே இந்த ஆஃபர் என்பதால், வாய்ப்பை தவறவிடாதீர்கள்.

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, டிவிட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR

Trending News