Flipkart Republic Day Sale: ஸ்மார்ட் டிவி-களில் நம்ப முடியாத தள்ளுபடி, அலைமோதும் கூட்டம்

Flipkart Republic Day Sale: ஜனவரி 15ஆம் தேதி தொடங்கிய பிளிப்கார்ட் குடியரசு தின விற்பனை ஜனவரி 20ஆம் தேதி வரை நடைபெறும். இந்த விற்பனையில், ஸ்மார்ட்போன்கள் மற்றும் ஸ்மார்ட் டிவிகளில் அதிக அளவிலான தள்ளுபடிகள் வழங்கப்படுகின்றன. 

Written by - Sripriya Sambathkumar | Last Updated : Jan 17, 2023, 06:12 PM IST
  • ஆனலைன் விற்பனைத் தளமான பிளிக்பார்ட் அவ்வப்போது பல வித சலுகைகளையும் தள்ளுபடிகளையும் வாடிக்கையாளர்களுக்கு வழங்கி வருகிறது.
  • தற்போது நடைபெறும் குடியரசு தின விற்பனையில் ஸ்மார்ட் டிவி-ஐ மலிவான விலையில் வாங்கலாம்.
  • இரண்டு நிறுவனங்கள் ஸ்மார்ட் டிவியை மிகக் குறைந்த விலையில் சேலில் விற்கின்றன.
Flipkart Republic Day Sale: ஸ்மார்ட் டிவி-களில் நம்ப முடியாத தள்ளுபடி, அலைமோதும் கூட்டம் title=

பிளிப்கார்ட் குடியரசு தின விற்பனை (Flipkart Republic Day Sale) தொடங்கியுள்ளது. ஜனவரி 15ஆம் தேதி தொடங்கிய விற்பனை ஜனவரி 20ஆம் தேதி வரை நடைபெறும். இந்த விற்பனையில், ஸ்மார்ட்போன்கள் மற்றும் ஸ்மார்ட் டிவிகளில் அதிக அளவிலான தள்ளுபடிகள் வழங்கப்படுகின்றன. இந்த சேலில் தாம்சனின் ஸ்மார்ட் டிவி மற்றும் வாஷிங் மெஷின் ஆகியவற்றை வாடிக்கையாளர்கள் மிக மலிவாக வாங்கலாம். மேலும் இந்த சேலில், Blaupunkt தொலைக்காட்சிகளின் விலையும் கணிசமாக குறைத்து வழங்கப்படுகின்றது. 

ஆனலைன் விற்பனைத் தளமான பிளிக்பார்ட் அவ்வப்போது பல வித சலுகைகளையும் தள்ளுபடிகளையும் வாடிக்கையாளர்களுக்கு வழங்கி வருகிறது. தற்போது நடைபெறும் குடியரசு தின விற்பனையில் ஸ்மார்ட் டிவி-ஐ மலிவான விலையில் வாங்க எண்ணும் வாடிக்கையாளர்கள் இந்த இரண்டு நிறுவனங்களும் ஸ்மார்ட் டிவியை மிகக் குறைந்த விலையில் சேலில் விற்கின்றன என்பதை நினைவில் கொள்ள வேண்டும்.

Blaupunkt தொலைக்காட்சிகளில் அற்புதமான தள்ளுபடிகள்

பிளிப்கார்ட் விற்பனையில் Blaupunkt TV-களில் 45% வரை பிரத்யேக தள்ளுபடிகள் வழங்கப்படுகின்றன. மேலும் வாடிக்கையாளர்களில் ICICI கிரெடிட் மற்றும் டெபிட் கார்டு வைத்திருப்பவர்கள் கூடுதலாக 10% தள்ளுபடியைப் பெறலாம். Blaupunkt-ன் இந்த டிவி-ஐ ஃபிளிப்கார்ட் குடியரசு தின விற்பனை ஸ்பெஷலில் ரூ.9,999 என்ற ஆரம்ப விலையில் வாங்கலாம். இந்த விற்பனையில், Blaupunkt ரசிகர்கள் சமீபத்தில் கூகிள் டிவி மற்றும் பிற பொருட்களுடன் சமீபத்தில் வெளியிடப்பட்ட QLED தொடர்களையும் பெறலாம்.

மேலும் படிக்க | ரூ.7,999 ஸ்மார்ட்போன்...பிளிப்கார்ட்டில் சலுகை விற்பனை ஆரம்பம் 

இந்த விற்பனையில், எந்த மாடலின் விலை எவ்வளவு இருக்கும்?

Flipkart Republic Day Sale

தாம்சன் தொலைக்காட்சிகளில் அதிக தள்ளுபடிகள்

தாம்சனின் புதிதாக அறிமுகப்படுத்தப்பட்ட QLED தொலைக்காட்சிகளையும் மிகவும் மலிவு விலையில் வாங்க வாடிக்கையாளர்களுக்கு ஒரு அரிய வாய்ப்பு உள்ளது. சிட்டி பேங்க் மற்றும் ஐசிஐசிஐ வங்கி கிரெடிட் மற்றும் டெபிட் கார்டு வைத்திருப்பவர்கள் பிளிப்கார்ட் குடியரசு தின விற்பனையின் போது கூடுதலாக 10% தள்ளுபடியைப் பெறலாம். 

தாம்சங்கின் சிறந்த விற்பனையாகும் மாடல்களான 42PATH2121-ஐ 14,999 ரூபாயிலும், 43PATH4545BL-ஐ 19,999 ரூபாயிலும், 50PATH1010BL BL-ஐ 24,999 ரூபாயிலும், 55 OP MAX9055-ஐ 28,999 ரூபாயிலும் 75 OATHPRO2121-ஐ 79,999 ரூபாயிலும் புதிதாக அறிமுகப்படுத்தப்பட்ட QLED மாடல் மற்றும் அதிகம் விற்பனையாகும் Q50H1000-ஐ 31,999 ரூபாயிலும் Q55H1001-ஐ 37999 ரூபாயிலும் வாங்க முடியும். 

சேலில் எந்த மாடலின் விலை எவ்வளவு இருக்கும்?

Flipkart Republic Day Sale

மேலும் படிக்க | பிஎஸ்என்எல் பிராட்பேண்ட் இணைப்புக்கு பணம் செலுத்த வேண்டியதில்லை! 

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

 

Trending News