வோக் இந்தியா தனது பத்திரிகையின் மே பதிப்பின் புதிய அட்டையை வெளியிட்டுள்ளது. அந்த பத்திரிகையின் மே மாத பதிப்பின் அட்டையில் காற்று வெளியிடை திரைப்படம் மூலம் தமில் திரையுலகில் அறிமுகமான பிரபலமான பாலிவுட் நடிகையான அதிதி ராவ் இடம்பெற்றுள்ளார்.
இந்தியாவிலேயே முதன் முறையாக, ஒரு ஸ்மார்ட்போன் கொண்டு எடுக்கப்பட்ட புகைப்படமானது, ஒரு பேஷன் பத்திரிகையின் அட்டைப்படத்தில் பிரசுரமாகி உள்ளது. அந்த புகைப்படத்தை பதிவிட்ட பத்திரிகை, பிரபல பேஷன் மேகஸின் ஆன வோக் மற்றும் அந்த புகைப்படத்தை எடுக்க உதவிய ஸ்மார்ட்போன் - ஒன்ப்ளஸ் 6 ஆகும்.
Making headlines already Here's your first glimpse into the power of the #OnePlus6 camera as it becomes the first smartphone ever to shoot the cover photo for a magazine in India! @VOGUEIndia @aditiraohydari pic.twitter.com/fovuKBcQ9G
— OnePlus India (@OnePlus_IN) April 30, 2018
கோடை காலத்தை கழிக்கும் கான்செப்ட்டின் கீழ் தான் இந்த போட்டோஷூட் நிகழ்ந்துள்ளது. அதில் நடிகை அதிதி ராவ் கவர்ச்சியாக காட்சியளிக்கிறார். இந்த புகைப்படம் ஆனது, ஒன்ப்ளஸ் 6 ஸ்மார்ட்போனின் கேமரா திறன்களின் மீதான தெளிவான பார்வையை நமக்கு அளிக்கிறது. இதில் ஒன்ப்ளஸ் 6 ஆனது நிறங்களை எப்படி கைப்பற்றும் என்பதை காண முடிகிறது. மேலும் படத்தில் கூர்மையான போகஸ் இருப்பதையும் காண முடிகிறது.
வோக் கவர் போட்டோக்களை உருவாக்கி உள்ள எர்ரோகோஸ் ஆண்ட்ரூஹாஸ்க்கு ஒரு ஸ்மார்ட்போன் கொண்டு கவர் போட்டோவை உருவாக்கியது இதுவே முதல் முறையாகும். ஒன்ப்ளஸ் 6 கேமராவின் வழியாக ஒளி, பிரகாசம், நிறம், போன்ற அனைத்தையும் எரிக் கட்டுப்படுத்தியுளார். அதாவது ஒரு தொழில்முறை கேமரா ஷூட்டை போன்றே, ஒன்ப்ளஸ் 6-ஐ பயன்படுத்தி உள்ளார்.
வோக் அட்டை படமானது, ஒன்ப்ளஸ் 6-ன் கேமரா ஆனது புகைப்படத்துறையில் வரையறைகளை அமைக்கும் என்பதை காட்டுகிறது. ஒன்ப்ளஸ் 6 ஆனது ஒரு சிறந்த கேமரா ஸ்மார்ட்போனாக மட்டுமின்றி, சிறப்பான வன்பொருளையும் கொண்டிருக்கும். இதன் மொத்த அம்சங்களையும் அறிந்துகொள்ள மே 17, 2018 வரை காத்திருக்கவும்.