வாகன ஓட்டுநர் உரிம அட்டையினை இனி எந்நேரமும் கையில் எடுத்துச்செல்ல வேண்டிய அவசியம் இல்லை என மத்திய அரசு அறிவித்துள்ளது!
வாகன ஓட்டிகளிடம் போக்குவரத்து காவல்துறையினர் ஓட்டுநர் உரிம அட்டைகளை காண்பிக்க கூறி பிரச்சனைகள் எழுவதாகவும், இந்த பிரச்சணைகள் வழக்குப்பதிவு வரை செல்வதாகவும் போக்குவரத்து காவல்துறையினர் மீது விமர்சனங்கள் பல வைக்கப்பட்டு வருகின்றன. இந்நிலையில் இந்த சர்சைகளில் இருந்த சற்றே விலக்கு பெரும் வகையில்., காவல்துறையினரிடம் வாகன ஓட்டிகள் ஓட்டுநர் உரிமத்தினை MobilApp மூலம் காண்பித்தால் போதும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த அறிவிப்பின் படி வாகன ஓட்டிகளிடம் டிஜிட்டல் வடிவிலான ஓட்டுநர் உரிமம் உள்ளிட்ட ஆவணங்களை ஏற்கும்படி மாநில அரசுகளுக்கு மத்திய அரசு அறிவுறுத்தியுள்ளது,
டிஜிட்டல் வடிவிலான வாகன ஓட்டுநர் உரிமம், வாகன பதிவு ஆவணங்களை போக்குவரத்து காவல்துறையினர் ஏற்க மறுப்பதாக எழுந்த புகாரின் அடிப்படையில் ஆய்வு மேற்கொண்ட மத்திய சாலை போக்குவரத்துறை அமைச்சகம், இந்த அறிவிப்பினை வெளியிட்டுள்ளது.
எனினும் அரசின் அதிகரப்பூர் Mobile செயலிகளான DigiLocker மற்றும் mParivahan ஆகிய செயலிகளில் காண்பிக்கப்படும் ஆவணங்களை ஏற்க வேண்டும் என மாநில அரசுகளுக்கு உத்தரவிட்டுள்ளது!