ராணுவப் பயன்பாட்டிற்கான GSAT-7A தகவல்தொடர்பு செயற்கைக்கோளைத் தாங்கியபடி GSLV F-11 ராக்கெட் விண்ணில் செலுத்தப்பட்டது.
ஆந்திர மாநிலம், ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதீஷ் தவான் விண்வெளி ஆராய்ச்சி மையத்தின் இரண்டாவது ஏவுதளத்திலிருந்து இன்று 4.10 மணியளவில் GSLV F-11 ராக்கெட் விண்ணில் ஏவப்படடும் என ஏற்கனவே தெரிவித்திருந்தது. இந்த ராக்கெட்டில், முழுவதும் உள்நாட்டிலேயே தயாரிக்கப்பட்ட கிரையோஜெனிக் என்ஜின் பொருத்தப்பட்டுள்ளது. அதிக எடைகொண்ட செயற்கைக்கோள்களை தாங்கிச் செல்லும் GSLV ராக்கெட் 13வது முறையாக ஏவப்படுகிறது.
இஸ்ரோவால் உருவாக்கப்பட்ட 2 ஆயிரத்து 250 கிலோ எடைகொண்ட GSAT-7A தகவல்தொடர்பு செயற்கைக்கோள் விண்ணில் புவி சுற்றுவட்டப் பாதையில் நிலைநிறுத்தப்பட உள்ளது. இது குறைந்தபட்சம் 8 ஆண்டுகள் செயல்பாட்டில் இருக்கும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது. ராக்கெட் அனுப்பும் திட்டத்துக்கான 26 மணி நேர கவுன்-டவுன் நேற்று பிற்பகல் 2.10 மணிக்கு தொடங்கியது. ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதீஷ் தவண் விண்வெளி ஆராய்ச்சி மையத்தின் இரண்டாவது ஏவுதளத்திலிருந்து இன்று மாலை 4.10 மணியளவில் ராக்கெட் விண்ணில் வெற்றிகரமாக ஏவப்பட்டது.
Communication satellite GSAT-7A on-board GSLV-F11 has been launched at Satish Dhawan Space Centre in Sriharikota. pic.twitter.com/fPTpjuIFFT
— ANI (@ANI) December 19, 2018