Used Cars: 1 லட்சம் ரூபாய்க்கும் குறைவான விலையில் கிடைக்கும் சூப்பர் கார்கள்

Used Cars: நீங்கள் பயன்படுத்திய காரை வாங்கும் எண்ணத்தில் இருந்தால், இந்த பதிவு உங்களுக்கு பயனுள்ளதாக இருக்கும். ஒரு லட்சம் ரூபாய்க்குள் விற்கப்படும் சில யூஸ்ட் கார்கள் பற்றிய தகவல்களை இந்த பதிவில் காணலாம். 

Written by - Sripriya Sambathkumar | Last Updated : Nov 2, 2022, 04:20 PM IST
  • நமது நாட்டில் பயன்படுத்திய கார்களின் சந்தை மிகப்பெரியதாக உள்ளது.
  • ஒருவர் பயன்படுத்திய காரை வாங்கும்போதெல்லாம், அவர் பல ஆப்ஷன்களை பற்றி யோசிக்கிறார்.
  • பல இடங்களில் இதை பற்றி விசாரித்து, ஆராய்ந்து பின்னர் சரியான காரை வாங்க முயற்சிக்கிறார்.
Used Cars: 1 லட்சம் ரூபாய்க்கும் குறைவான விலையில் கிடைக்கும் சூப்பர் கார்கள் title=

செகண்ட் ஹேண்ட் கார்கள்: மலிவு விலை காரணமாக பலர் பயன்படுத்திய கார்களை வாங்க விரும்புகிறார்கள். நமது நாட்டில் பயன்படுத்திய கார்களின் சந்தை மிகப்பெரியதாக உள்ளது. ஒருவர் பயன்படுத்திய காரை வாங்கும்போதெல்லாம், அவர் பல ஆப்ஷன்களை பற்றி யோசிக்கிறார். பல இடங்களில் இதை பற்றி விசாரித்து, ஆராய்ந்து பின்னர் சரியான காரை வாங்க முயற்சிக்கிறார். நீங்கள் பயன்படுத்திய காரை வாங்கும் எண்ணத்தில் இருந்தால், இந்த பதிவு உங்களுக்கு பயனுள்ளதாக இருக்கும்.

பயன்படுத்திய காரை வாங்கலாமா வேண்டாமா என்பதில் வெவ்வேறு நபர்களுக்கு வெவ்வேறு வாதங்கள் இருக்கலாம். சிலர் பயன்படுத்திய காரை வாங்குவதில் உள்ள நன்மையைப் பார்க்கிறார்கள், சிலர் பயன்படுத்திய காரை வாங்குவதைத் தவிர்க்கிறார்கள். இந்த கார்களை வாங்குவதும் தவிர்ப்பதும், அவரவரது சொந்த விருப்பம். உங்களுக்கு இப்படிப்பட்ட கார்களை வாங்கும் எண்ணம் இருந்தால், ஒரு லட்சம் ரூபாய்க்குள் விற்கப்படும் சில யூஸ்ட் கார்கள் பற்றிய தகவல்களை இந்த பதிவில் காணலாம். நவம்பர் 1, 2022 அன்று இந்த கார்கள் மாருதி சுஸுகி ட்ரூ வேல்யூ இணையதளத்தில் காணப்பட்டன. 

மேலும் படிக்க | Car Loan Tips: கார் கடன் வாங்கும் முன் இந்த விஷயங்களை நினைவில் கொள்ளுங்கள் 

மாருதி ஸ்விஃப்ட் விடிஐ 

விஜயவாடாவில் மாருதி ஸ்விஃப்ட் விடிஐ கார் விற்பனைக்கு உள்ளது. இதற்கு 30 ஆயிரம் ரூபாய் விலை நிரணயிக்கப்பட்டுள்ளது. இது 2012 மாடல் கார் ஆகும். இந்த கார் இதுவரை 115337 கிமீ ஓடியுள்ளது. கார் டீசல் இன்ஜினை கொண்டுள்ளது. இது ஃபர்ஸ்ட் ஓனர் கார் ஆகும். இதன் பதிவு எண் விஜயவாடாவினுடையது ஆகும். 

மாருதி ஆல்டோ எல்எக்ஸ்ஐ

புஜ் நகரில் மாருதி ஆல்டோ எல்எக்ஸ்ஐ கார் விற்பனைக்கு உள்ளது. இதற்கு 40 ஆயிரம் ரூபாய் விலை நிரணயிக்கப்பட்டுள்ளது. இது 2008 மாடல் கார் ஆகும். இந்த கார் இதுவரை 135725 கிமீ ஓடியுள்ளது. கார் பெட்ரோல் இன்ஜினை கொண்டுள்ளது. இது ஃபோர்த் ஓனர் கார் ஆகும். இதன் பதிவு எண் புஜ் நகர எண்ணாகும்.  

மாருதி வேகன் ஆர் எல்எக்ஸ்ஐ

ஆக்ராவில் மாருதி வேகன் ஆர் எல்எக்ஸ்ஐ கார் விற்பனைக்கு உள்ளது. இதற்கு 45 ஆயிரம் ரூபாய் விலை நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இது 2006 மாடல் கார் ஆகும். இந்த கார் இதுவரை 75730 கிமீ ஓடியுள்ளது. கார் பெட்ரோல் இன்ஜினை கொண்டுள்ளது. இது ஃபோர்த் ஓனர் கார் ஆகும். இதன் பதிவு எண் ஆக்ரா எண்ணாகும்.  

மாருதி 800 STD BSII 

மாருதி 800 STD BSII கார் பானிபட்டில் விற்பனைக்கு உள்ளது. இதற்கு 50 ஆயிரம் ரூபாய் விலை நிரணயிக்கப்பட்டுள்ளது. இது 2008 மாடல் கார் ஆகும். இந்த கார் இதுவரை 82367 கிமீ ஓடியுள்ளது. கார் பெட்ரோல் இன்ஜினை கொண்டுள்ளது. இது ஃபர்ஸ்ட் ஓனர் கார் ஆகும். இதன் பதிவு எண் பானிபத் எண்ணாகும்.  

(பயன்படுத்தப்பட்ட காரை வாங்க நாங்கள் யாரையும் பரிந்துரைக்கவில்லை. இந்தக் கட்டுரை தகவல் நோக்கங்களுக்காக மட்டுமே எழுதப்பட்டுள்ளது.)

மேலும் படிக்க | Used Cars: பைக் விலையில் கார் வாங்கணுமா? இதோ சூப்பர் வாய்ப்பு 

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ 

 

Trending News