Tecno spark 8: ரூ. 10,000-ஐ விட குறைவாக கிடைக்கும் அட்டகாசமான ஸ்மார்ட்போன்

Tecno Spark 8 போனின் வடிவமைப்பு மற்றும் சிறப்பம்சங்கள் வாடிக்கையாளர்களால் பெரிதும் விரும்பப்படுகின்றன.  இந்த ஸ்மார்ட்போனின் விலை மற்றும் சிறப்பம்சங்களைப் பற்றி இந்த பதிவில் தெரிந்து கொள்வோம்.

Written by - ZEE TAMIL NEWS | Last Updated : Nov 11, 2021, 09:54 AM IST
  • இந்தியாவில் டெக்னோ ஸ்பார்க் 8 3ஜிபி ரேம் மற்றும் 32ஜிபி இன்டெர்னல் ஸ்டோரேஜ் மாறுபாட்டின் விலை ரூ.9,299 ஆகும்.
  • அட்லாண்டிக் ப்ளூ, டர்க்கைஸ் சியான், ஐரிஸ் பர்ப்பிள் ஆகிய வண்ணங்களில் வாடிக்கையாளர்கள் இதை வாங்கலாம்.
  • டெக்னோ ஸ்பார்க் 8 இரட்டை பின்புற கேமரா அமைப்பைக் கொண்டுள்ளது.
Tecno spark 8: ரூ. 10,000-ஐ விட குறைவாக கிடைக்கும் அட்டகாசமான ஸ்மார்ட்போன்  title=

Tecno Spark 8: Tecno இந்தியாவில் Tecno Spark 8 போனை அறிமுகப்படுத்தியுள்ளது. இந்த ஸ்மார்ட்போனில் செல்ஃபி கேமராவுக்கான வாட்டர் டிராப் நாட்ச், குறுகிய பெசல்கள் மற்றும் டூயல் கேமரா சென்சார்கள், குவாட்-எல்இடி ஃபிளாஷ் மற்றும் கைரேகை சென்சார் ஆகியவற்றைக் கொண்ட வட்டமான விளிம்புகள் கொண்ட செவ்வக மாட்யூல் ஆகியவை உள்ளன. 

இந்த ஸ்மார்ட்போனின் (Smartphone) போனின் வடிவமைப்பு மற்றும் சிறப்பம்சங்கள் வாடிக்கையாளர்களால் பெரிதும் விரும்பப்படுகின்றன. Tecno Spark 8 இன் விலை மற்றும் சிறப்பம்சங்களைப் பற்றி இந்த பதிவில் தெரிந்து கொள்வோம்.

Tecno Spark 8: விலை

இந்தியாவில் டெக்னோ ஸ்பார்க் 8 3ஜிபி ரேம் மற்றும் 32ஜிபி இன்டெர்னல் ஸ்டோரேஜ் மாறுபாட்டின் விலை ரூ.9,299 ஆகும். அட்லாண்டிக் ப்ளூ, டர்க்கைஸ் சியான், ஐரிஸ் பர்ப்பிள் ஆகிய வண்ணங்களில் வாடிக்கையாளர்கள் இதை வாங்கலாம்.

Tecno Spark 8: விவரக்குறிப்புகள்

டெக்னோ ஸ்பார்க் 8 (Tecno Spark 8) 6.56 இன்ச் எச்டி+ நாட்ச் டிஸ்ப்ளே கொண்டுள்ளது. இது MediaTek Helio G25 சிப்செட் மூலம் இயக்கப்படுகிறது. இது 3GB LPDDR4X ரேம் மற்றும் 64GB இன்டெர்னல் ஸ்டோரேஜ் உடன் microSD கார்ட் மூலம் 256GB வரை விரிவாக்கக்கூடியது.

ALSO READ: Flipkart Offer: வெறும் ரூ. 740-க்கு கிடைக்கிறது அட்டகாசமான OPPO லேட்டஸ்ட் ஸ்மார்ட்போன் 

Tecno Spark 8: கேமரா

டெக்னோ ஸ்பார்க் 8 இரட்டை பின்புற கேமரா (Mobile Camera) அமைப்பைக் கொண்டுள்ளது. இது குவாட்-எல்இடி ப்ளாஷ், AI லென்ஸுடன் 16MP முதன்மை சென்சார் ஆகியவற்றைக் கொண்டுள்ளது. இது AI பியூட்டி, ஸ்மைல் ஷாட், AI போர்ட்ரெய்ட், HDR, AR ஷாட், டைம் லேப்ஸ், பனோரமா, ஸ்லோ மோஷன் போன்ற அம்சங்களுடன் வருகிறது. முன்பக்கத்தில், செல்ஃபி மற்றும் வீடியோ சேட்டுக்கு இரட்டை ஃபிளாஷ் கொண்ட 8MP கேமரா உள்ளது.

Tecno Spark 8: பேட்டரி

Tecno Spark 8 ஆனது 5000mAh பேட்டரி மூலம் இயக்கப்படுகிறது.  மேலும் இது கஸ்டம் Android 11 OS, HiOS 7.6 உடன் வருகிறது. இதில் 4G LTE, டூயல்-பேண்ட் Wi-Fi, புளூடூத் 5.0 மற்றும் GPS ஆகியவை உள்ளன.

ALSO READ:ரகசியமாக வெளியானது Vivo மாஸ் ஃபோன், அதிரடி அம்சங்கள் 

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G

Apple Link - https://apple.co/3loQYeR

Trending News