ஸ்மார்ட்போனுக்கான சலுகைகள்: ஸ்மார்ட்போன் ரசிகர்களுக்கு சூப்பர் செய்தி!! சாம்சங்க் போன் பிரியரா நீங்கள்? உங்களுக்கு ஒரு நல்ல செய்தி உள்ளது. ஆன்லைன் விற்பானை தளமான பிளிப்கார்ட், Samsung Galaxy Z Flip 4 5G ஸ்மார்ட்போனில் பல அருமையான சலுகையைக் கொண்டு வந்துள்ளது. பிளிப்கார்ட்டில் மற்றொரு விற்பனை தொடங்கியுள்ளது. இந்த சேலில் இந்த ஸ்மார்ட்போனை வாங்குவதற்கு மாபெரும் சலுகை வழங்கப்படுகின்றது. இப்படிப்பட்ட சலுகையை பற்றி வாடிக்கையாளர்கள் நினைத்துக்கூட பார்த்திருக்க முடியாது. அந்த அளவிற்கு பெரிய சலுகை இதில் வழங்கப்படுகின்றது.
சாம்சங்கின் இந்த ஸ்மார்ட்போன் ஒரு பிரீமியம் வகை ஸ்மார்ட்போனாகும். இதன் விலை ரூ.1,01,999 ஆகும். இது மிகவும் நேர்த்தியான ஸ்மார்ட்போனாக இருந்தாலும், இதன் விலை காரணமாக பலர் இதை வாங்க முடிவதில்லை. சிலருக்கு இது மிகவும் பிடித்திருந்தாலும், இதன் விலை தங்கள் பட்ஜெட்டுக்குள் வராததால், தங்கள் எண்ணத்தை மாற்றிக்கொள்ள வேடிய நிலை ஏற்படுகின்றது. அப்படிப்பட்டவர்களுக்காகவே பிளிப்கார்ட் ஒரு சூப்பரான சலுகையை கொண்டு வந்துள்ளது. இந்த சலுகைகளை பயன்படுத்தி இந்த ஸ்மார்ட்போனை குறைந்த விலையில் எப்படி வாங்குவது என்பதை இந்த பதிவில் காணலாம்.
இதில் கிடைக்கும் தள்ளுபடி எவ்வளவு?
இதில் கிடைக்கும் தள்ளுபடிகளை பற்றி இப்போது பார்க்கலாம். இந்த ஸ்மார்ட்போனின் விலை ஏற்கனவே 1,01,999 ரூபாயிலிருந்து 89,999 ரூபாயாக குறைந்துள்ளது. இந்த போனில் கிடைக்கு 11% தள்ளுபடியால் விலை இந்த அளவு குறைந்துள்ளது. ஆனால், இதை பெற நீங்கள் பெரிதாக எதையும் செய்ய வேண்டியதில்லை, ஏனெனில், இந்த சலுகை ஏற்கனவே வழங்கப்படுகின்றது. இந்த ஸ்மார்ட்போனில் கிடைக்கும் தள்ளுபடிகள் இதோடு முடிந்துவிடவில்லை.
மேலும் படிக்க | அன்லிமிடெட் ஆ பேசனுமா? ரூ 179 ரீசார்ஜ் பிளான்..அள்ளி வீசும் ஏர்டெல்
இந்த சலுகைகளை வாடிக்கையாளர்கள் பயன்படுத்திக் கொள்ளலாம்
இந்த ஸ்மார்ட்போனை வாங்க வாடிக்கையாளர்கள் 89,999 ரூபாயை செலவழிக்க வேண்டிய அவசியம் இல்லை. இதில், ரூ. 20,000 பதிப்பிலான எக்ஸ்சேஞ்ச் போனஸ் அதாவது பரிமாற்ற சலுகை கிடைக்கின்றது. இது மட்டுமின்றி, வங்கி சலுகையின் கீழ், வாடிக்கையாளர்களுக்கு ஸ்மார்ட்போனை வாங்கும்போது 7000 ரூபாய் கூடுதல் தள்ளுபடி வழங்கப்படும். இது கிரெடிட் கார்டு மற்றும் டெபிட் கார்டு பரிவர்த்தனைகளில் வழங்கப்படும்.
இதனுடன், வாடிக்கையாளர்களுக்கு 12,000 ரூபாய்க்கான தள்ளுபடியும் வழங்கப்படுகிறது. இது கேஷ்பேக் மற்றும் கூப்பன்கள் மூலம் வழங்கப்படும். இப்படி பல்வேறு விதங்களில் வழங்கப்படும் தொகையை சேர்த்தால், இந்த ஸ்மார்ட்போனை வாங்க, 89,999 ரூபாய் செலுத்துவதற்குப் பதிலாக வெறும் 51,000 ரூபாய் மட்டும் செலுத்தினால் போதும். மேலும் நீங்கள் அதிர்ஷ்டசாலியாக இருந்தால் 5% கூடுதல் தள்ளுபடியும் இதில் கிடைக்கும்.
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ