நாம் ஏதேனும் ஒரு முக்கியமான வேளையில் இருக்கும்போதோ அல்லது முக்கியமான ஒருவரின் அழைப்பினை எதிர்பார்த்து கொண்டிருக்கும்போதோ திடீரென்று வரும் டெலிமார்க்கெட்டிங் மற்றும் ஸ்பேம் அழைப்புகள் நம்மை எரிச்சலூட்டும் மற்றும் இது நமது நேரத்தையும் வீணடிக்கலாம். கிரெடிட் கார்டுகளுக்கான தொடர்ச்சியான அழைப்புகள், மார்க்கெட்டிங், டெலிஷாப்பிங் அல்லது மோசடி அழைப்புகள் போன்றவை வந்து நமது மன அமைதியை சீர்குலைத்துவிடும். பெரும்பாலும் வரும் இதுபோன்ற மோசடி அழைப்புகளில் பேசும் நபர்கள் தங்களை வங்கி ஊழியர் போல காட்டிக்கொண்டு நம்மை ஏமாற்றுகின்றனர். இதுபோன்று வங்கி ஊழியர்கள் பேசுவது போல நடித்து நமது தனிப்பட்ட தகவல்களை கேட்டறிந்து பணமோசடி செய்யும் சம்பவம் பல இடங்களில் அரங்கேறி வருகிறது.
ஸ்பேம் அழைப்புகள் தலைவலியை ஏற்படுத்தும் செயல் என்றாலும், அவற்றைப் புறக்கணிப்பது ஒன்று மட்டுமே அதற்கு தீர்வல்ல. மொபைலை சைலண்டில் வைத்திருப்பது அல்லது அந்த அழைப்பை ஏற்காமல் புறக்கணிப்பது என்று இதுபோன்ற எதையாவது செய்வதனால் மட்டும் இந்த பிரச்சனை உங்களுக்கு தீர்ந்துபோக போவதில்லை. அதுவே நீங்கள் உங்கள் மொபைலில் DND Mode ஆன் செய்யலாம் என்றாலும் அது முடியாது, ஏனெனில் அதனை ஆன் செய்தால் நீங்கள் ஆர்டர் செய்திருக்கும் டெலிவரி நிறுவனங்களின் முக்கியமான அழைப்புகளைத் தவறவிட நேரிடும்.
இப்போது ஸ்பேம் அழைப்புகளை நிரந்தரமாகத் தடுக்க இந்திய தொலைத்தொடர்பு ஒழுங்குமுறை ஆணையம் (TRAI) ஒரு சிறப்புச் சேவையைக் கொண்டுள்ளது. ஸ்பேம் அழைப்புகளைத் தடுக்க தேசிய வாடிக்கையாளர் விருப்பப் பதிவேட்டை (NCPR) TRAI தொடங்கியுள்ளது. ஒருமுறை மட்டுமே ஆன் செய்தால் போதும், DND மூன்றாம் தரப்பு வணிக அழைப்புகளை மட்டுமே தடுக்கும், உங்கள் வங்கியிலிருந்து வரும் எஸ்எம்எஸ், ஆன்லைன் போர்ட்டல்கள் மற்றும் சேவைகள், மூன்றாம் தரப்பு தனிப்பட்ட அழைப்பு போன்றவற்றைத் தடுக்காது என்று தேசிய நுகர்வோர் விருப்பப் பதிவேடு உறுதியளிக்கிறது. இதனை எப்படி இயக்கலாம் என்று பின்வருமாறு காண்போம்.
1) உங்கள் எஸ்எம்எஸ் ஆப்பை திறந்து 'START' என டைப் செய்ய வேண்டும்.
2) இந்தச் செய்தியை 1909 என்ற எண்ணுக்கு அனுப்ப வேண்டும்.
3) உங்கள் சேவை வழங்குநர், வங்கி, ஹாஸ்பிட்டாலிட்டி மற்றும் பிற வகைகளின் பட்டியலை உங்களுக்கு அனுப்புவார்.
4) எதை தடுக்க விரும்புகிறீர்களோ அதற்கான குறியீட்டை நீங்கள் தேர்வு செய்ய வேண்டும். உதாரணமாக ரியல் எஸ்டேட், கல்வி, சுகாதாரம் போன்ற குறிப்பிட்ட வகையிலிருந்து வரும் அழைப்புகளைக் கட்டுப்படுத்த குறியீடுகள் உள்ளது.
- அனைத்து வகைகளுக்கும் முழுவதுமாக பிளாக் செய்யவும்
- வங்கி/காப்பீடு/கிரெடிட் கார்டுகள்/நிதி தயாரிப்புகளுக்கான BLOCK 1
- ரியல் எஸ்டேட்டுக்கு BLOCK 2
- கல்வி தொடர்பான ஸ்பேம்களுக்கு BLOCK 3
- ஆரோக்கியத்திற்கு BLOCK 4
- நுகர்வோர் பொருட்கள்/ஆட்டோமொபைல்கள்/பொழுதுபோக்கு/ஐடி-க்கு BLOCK 5
- தொடர்பு/ஒளிபரப்பிற்கு BLOCK 6
- சுற்றுலா மற்றும் ஓய்வுக்கு BLOCK 7
- உணவு மற்றும் பானங்களுக்கு BLOCK 8
5) இப்போது இதில் ஏதேனும் குறியீட்டை தேர்வு செய்து 1909 என்ற எண்ணுக்கு அனுப்புவதன் மூலம் ஸ்பேம் அழைப்புகளிலிருந்து விடுபடலாம்.
6) உங்கள் கோரிக்கையை உறுதிப்படுத்தும் செய்தியை உங்கள் தொலைத்தொடர்பு சேவை வழங்குநர் திருப்பி அனுப்புவார்.
7) DND சேவை 24 மணி நேரத்திற்குள் தொடங்கும்.
ஜியோவில் DND சேவையை இயக்குவதற்கான படிகள்:
- MyJio செயலியை திறக்கவும்.
- செட்டிங்ஸ் -> சர்வீஸ் அமைப்புகள் -> டூ நாட் டிஸ்டர்ப்
- பிளாக் செய்ய விரும்பும் வகைகயை தேர்ந்தெடுத்து அழைப்புகள் மற்றும் மெசேஜ்களை தடுக்கலாம்.
ஏர்டெல்லில் DND சேவையை இயக்குவதற்கான படிகள்:
- airtel.in/airtel-dnd எனும் ஏர்டெல்லின் அதிகாரப்பூர்வ தளத்திற்கு செல்ல வேண்டும்.
- மொபைல் எண்ணை உள்ளிட வேண்டும்.
- சரிபார்க்க மொபைல் எண்ணில் பெறப்பட்ட ஓடிபி-ஐ உள்ளிட வேண்டும்.
- பிளாக் செய்ய விரும்பும் வகைகளைத் தேர்ந்தெடுக்க வேண்டும்.
விஐ-ல் DND சேவையை இயக்குவதற்கான படிகள்:
- Discover.vodafone.in/dnd என்கிற பக்கத்திற்கு செல்ல வேண்டும்.
- மொபைல் எண், மின்னஞ்சல் முகவரி மற்றும் பெயரை உள்ளிட வேண்டும்.
- மார்க்கெட்டிங் அழைப்புகளைப் பெறுவதை பிளாக் விரும்பும் வகைகளைத் தேர்ந்தெடுக்கவும்.
பிஎஸ்என்எல்-ல் DND சேவையை இயக்குவதற்கான படிகள்:
- பிஎஸ்என்எல் எண்ணிலிருந்து 1909 க்கு "start dnd" என்று மெசேஜ் அனுப்ப வேண்டும்.
- நீங்கள் பிளாக் செய்ய விரும்பும் வகைகளைத் தேர்ந்தெடுக்கவும்.
- அழைப்பு, எஸ்எம்எஸ் அல்லது அனைத்தையும் நீங்கள் தேர்வு செய்யலாம்.
மேலும் படிக்க | Jackpot! உங்கள் தலை எழுத்தை மாற்றும் ‘இந்த’ பிங்க் நிற 20 ரூபாய் நோட்டு!
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ