எத்தனை வயதானாலும் இளமை குறையாத 3 ராசிக்கார பெண்கள்! யார் தெரியுமா?

3 Zodiac Signs Will Never Get Aged : ஒரு சில ராசிக்கார பெண்களுக்கு எத்தனை வயதானாலும் இளமையே குறையாமல் அதே அழகுடன் இருப்பார்களாம். அவர்கள் யார் தெரியுமா?   

Written by - Yuvashree | Last Updated : Jan 10, 2025, 07:07 PM IST
  • இந்த 3 ராசிகள் இளமை குறையாமல் இருப்பர்
  • அழகாகவும் இருப்பர்..
  • யார் யார் தெரியுமா?
எத்தனை வயதானாலும் இளமை குறையாத 3 ராசிக்கார பெண்கள்! யார் தெரியுமா? title=

3 Zodiac Signs Will Never Get Aged : ஒருவர் பிறக்கும் நாள் மற்றும் நேரத்தை வைத்து, அதன் அடிப்படையில் ஒருவருக்கு ராசி மற்றும் நட்சத்திரமானது எழுதப்படும். இவை, அவர்களின் குணாதிசயங்கள் மற்றும் வருங்காலத்தை கூட கணிக்க உதவும் என பல வருட காலங்களாக மக்களிடையே நம்பப்படுகிறது. பலர், இதன் மீது நாட்டம் கொண்டு அதன்படி தங்களின் வாழ்வை நடத்துகின்றனர். இதில், ஆண்களுக்கும் பெண்களுக்கும் வேறு ராசிகள் வேறுபடும். அப்படி, எத்தனை வயதானாலும், சில பெண்கள் அழகு குறையாமல் அதே இளமையுடன் அப்படியே இருப்பார்களாம். அவர்கள் யார் யார் தெரியுமா? 

மகரம்: 

மகர ராசியை சேர்ந்த பெண்கள், தங்கள் வேலையில் கவனத்துடனும் குறிக்கோள் கொண்டவர்களாகவும் இருப்பர். சுய ஒழுக்கம், கடின உழைப்பு என பல்வேறு விஷயங்களில் சரியாக இருக்கும் இவர்கள், சவால்களை ஏற்க தயங்காதவர்களாகவும் இருப்பர். 

தனித்துவமான குணாதிசயங்கள் கொண்ட இந்த பெண்களிடம் பிறரை வசீகரிக்கும் தனித்துவமான சில விஷயங்கள் இருக்கும். பொதுவாகவே இவர்களை பார்த்து பலர் வியந்து போவார்களாம். இவர்களுக்கு வயது ஆக ஆக, அழகும் கூடிக்கொண்டே போகுமாம். அதே போல இவர்கள் உலகறிவு-பொது அறிவு என பலவற்றை பெற்ற பெண்களாகவும் இருப்பார்களாம். 

துலாம்: 

துலாம் ராசியை சேர்ந்த பெண்கள், பிறரை வசீகரிக்கும் குணாதிசயங்கள் பல படைத்தவர்களாக இருப்பார்களாம். இவர்களுக்கு பேச்சுத்திறமை அதிகமாகவே இருக்குமாம். மேலும், எந்த ஒரு பெரிய சண்டையையும் எளிதில் தீர்த்து வைக்கும் திறமையும் இவர்களுக்குள் இருக்குமாம். எந்த உறவில் இருந்தாலும், அதற்கு அர்த்தம் சேர்ப்பவர்களில் இவர்கள் ஒருவராக இருப்பார்களாம்.

துலாம் ராசி பெண்கள், பெரும்பாலும் கலைத்துறையை சேர்ந்தவர்களாக இருப்பார்கள் என்றும் கூறப்படுகிறது. மேலும், எப்போதும் அனைவர் மீதும் அன்பை பொழியும் இவர்கள் அந்த அன்பு திரும்ப கிடைக்க வேண்டும் என்ற காரணத்திற்காக எந்த விஷயத்தையும் செய்ய மாட்டார்களாம். இவர்களுக்கு வயதாகும் போது, உடல்-முக மாற்றங்கள் மட்டுமன்றி குணாதிசயமும் பெரிதாக மெருகேருமாம். இதனால் இவர்கள் அனைவராலும் விரும்பப்படுபவர்களாக இருப்பார்களாம்.

கன்னி: 

கன்னி ராசியை சேர்ந்த பெண்கள், எந்த விஷயத்தையும் கப்பென பிடித்துக்கொள்ளும் திறன் படைத்தவர்களாக இருப்பார்களாம். பிரச்சனைகளை தீர்க்கும் திறன் கொண்ட இவர்கள், எந்த விஷயத்திற்கும் இயல்பான தீர்வுகளை கொடுக்கும் குணம் கொண்டவர்களாக இருப்பார்களாம். அதே போல, இந்த ராசியை சேர்ந்த பெண்கள் பிறரிடம் இருக்கும் சின்ன சின்ன விஷயங்களையும் தெரிந்து கொண்டு, அதனை சுட்டி காட்டுபவர்களாக இருப்பர். அது தனிப்பட்ட வாழ்க்கையாக அல்லது தொழில் ரீதியான வாழ்க்கையாக இருந்தாலும் சரி. 

அதே போல கன்னி ராசியை சேர்ந்த பெண்களுக்கு எந்த விஷயத்தையும் நேரடியாக கூறினால் பிடிக்குமாம். எதையும் இவர்கள் சுற்றி வளைத்து பேச விரும்பாதவர்களாக இருப்பார்களாம். பிறர் மீது அதிக அக்கறை செலுத்துபவர்களாக இருக்கும் இவர்கள் எந்த வேலை எடுத்தாலும் அதனை சரியாக செய்ய வேண்டும் என்ற கவனம் கொண்டவர்களாக இருப்பார்களாம்.

இந்த ராசியை சேர்ந்த பெண்கள், தோற்றத்தில் மட்டுமல்ல யோசிக்கும் விதத்தில், புத்திக்கூர்மையில் என பல விஷயங்களில் வசீகரமானவர்களாக இருப்பார்களாம். அதே போல எத்தனை வயதானாலும் இவர்கள் யோசிக்கும் விஷயங்களில் துடிப்பும் உயிர்ப்பும் இருக்கும். இதுவே பிறரின் கவனத்தை பெரிதும் ஈர்க்குமாம். 

மேலும் படிக்க | ஏய் நீ ரொம்ப அழகா இருக்கே! உங்களை இப்படி அடிக்கடி யாராவது சொன்னால் நீங்க இந்த ராசி தான்...

மேலும் படிக்க | இந்த 3 ராசிகள் மீது கருனை காட்டும் சூரியன் மற்றும் புதன்! 21 நாட்கள் ஜாக்பார்ட் தான்!

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News