1,000 குறைவான ப்ளூடூத் ஸ்பீக்கர்... அமேசானில் இப்போது மெகா தள்ளுபடி!

Best Bluetooth Speaker: அமேசானில் தற்போது அட்டகாசமான ப்ளூடூத் ஸ்பீக்கர் அதிரடி தள்ளுபடியில் கிடைக்கிறது. அந்த வகையில், ஆயிரம் ரூபாய்க்கு குறைவாக கிடைக்கும் ப்ளூடுத் ஸ்பீக்கர்களை இதில் காணலாம்.

Written by - Sudharsan G | Last Updated : Dec 14, 2023, 10:36 AM IST
  • அமேசானில் தற்போது மெகா எலக்ட்ரானிக்ஸ் டேஸ் விற்பனை நடைபெறுகிறது.
  • இதில் ப்ளூடூத் ஸ்பிக்கர் அதிரடி தள்ளுபடியில் கிடைக்கிறது.
  • குறிப்பாக, 549 ரூபாயிலும் தரமான ப்ளூடூத் ஸ்பிக்கர் கிடைக்கிறது.
1,000 குறைவான ப்ளூடூத் ஸ்பீக்கர்... அமேசானில் இப்போது மெகா தள்ளுபடி! title=

Best Bluettoth Speaker Under Rs 1000: இசை கேட்பது என்பது அனைவருக்கும் பிடித்தமான ஒன்றாகும். தமிழ்நாட்டை பொறுத்தவரை மற்ற இசைகளை விட திரையிசை பாடல்கள்தான் அதிகம் ஆதிக்கம் செலுத்துகின்றன. இதில், நாம் அந்த பாடல்களை காணொலியாக பார்ப்பதை விட ஒலி வழியாக கேட்கவே அதிகம் ஆர்வம் காட்டுவோம். முன்பு வானொலியில் தொடங்கிய இந்த பயணம் பல வடிவங்களை கடந்துவிட்டது. அதில், தற்போது ப்ளூடூத் ஸ்பீக்கர் என்பது தவிர்க்க முடியாத இடத்தை பிடித்துவிட்டது எனலாம். 

அந்த வகையில், ப்ளூடூத் ஸ்பீக்கர்கள் (Bluetooth Speaker) கச்சிதமான மற்றும் சிறியதாக இருப்பதால் அவை பரவலாக பிரபலமாகி வருகின்றன. ப்ளூடூத் ஸ்பீக்கரில் பாட்டை கேட்க மொபைலில் உங்கள் ப்ளூடூத் மூலம் ஸ்பீக்கருடன் இணைத்துகொண்டு, பாடலை போட்டால் போதும், நீங்களுக்கு பிடித்தமான பாடலை சிறந்த அனுபவத்துடனும், ஒலி தரத்துடனும் கேட்கலாம். 

அமேசான் அதன் மெகா எலக்ட்ரானிக்ஸ் டேஸ் (Amazon Mega Electronics 2023) விற்பனையில் பல புளூடூத் ஸ்பீக்கர் ஆப்ஷன்களை விற்பனைக்கு கொண்டுள்ளது. அமேசானில் தள்ளுபடி விலையில் 1,000 ரூபாய்க்கு குறைவான பட்ஜெட் ஆப்ஷன்களை காணலாம். அமேசான் மெகா எலக்ட்ரானிக்ஸ் டேஸ் சேலில் சிறந்த பட்ஜெட் புளூடூத் ஸ்பீக்கர் டீல்களைப் பார்ப்போம். 

மேலும் படிக்க | AI App மூலம் நிர்வாண புகைப்படங்கள்-உங்கள் போட்டோவும் இருக்கலாம்! அதிர்ச்சி ரிப்போர்ட்..

Infinity – JBL Clubz Mini Wireless Portable Bluetooth speaker

இந்த மினி வயர்லெஸ் புளூடூத் ஸ்பீக்கரின் விலை இப்போது 849 ரூபாய் ஆகும். இது அதன் அசல் விலையில் இருந்து 58 சதவீதம் தள்ளுபடி ஆகும். இது 2.5W ஸ்பீக்கர் ஆகும். இது Deep Bass ஒலியை கேட்க கச்சிதமாக வடிவமைக்கப்பட்டுள்ளது. Voice Assistant ஆப்ஷனை பயன்படுத்த  மைக்ரோபோனைக் கொண்டுள்ளது. ஸ்பீக்கரில் புளூடூத் 5.0 உள்ளது மற்றும் இதனை முழுமையாக சார்ஜ் செய்தால் 5 மணிநேரம் தொடர்ந்து இயக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. 

Portronics SoundDrum 10W Bluetooth Speaker

இந்த ப்ளூடூத் ஸ்பீக்கர் அமேசானில் 999 ரூபாய்க்கு கிடைக்கிறது. இது 10W ஸ்பீக்கர் யூனிட்டுடன் வருகிறது மற்றும் சக்திவாய்ந்த Bass கொண்டுள்ளது. ஸ்பீக்கரும் உள்ளமைக்கப்பட்ட FM உடன் வருகிறது. இதில் ஒருமுறை சார்ஜ் செய்தால் 5 முதல் 6 மணிநேரம் தொடர்ந்து இயக்கலாம். கூடுதலாக, ஹேண்ட்ஸ் ஃப்ரீ அழைப்பிற்காக ஸ்பீக்கரில் மைக்ரோஃபோன் உள்ளது.

Zebronics ZEB-County 3W Wireless Bluetooth Speaker

இந்த புளூடூத் ஸ்பீக்கர் அதன் அசல் விலையில் 45 சதவீதம் கிடைக்கிறது. அமேசானில் இதன் விலை தற்போது 549 ரூபாய் மட்டுமே. ஸ்பீக்கரில் கச்சிதமான வடிவமைப்பும், பயணத்தின்போது அதை எடுத்துச் செல்ல ஏதுவான கைப்பிடியும் உள்ளது. இது 3W ஸ்பீக்கர் யூனிட் ஆகும். இது புளூடூத் வழியாக பாடல்களை மட்டும் இயக்குவது மட்டுமில்லாமல் உங்கள் FM ஸ்ட்ரீம் செய்ய முடியும். இது ஆக்ஸ் கேபிள் கொண்டுள்ளது.

Mivi Play Bluetooth Speaker 

அமேசானின் தற்போதைய தள்ளுபடி விற்பனையில் இந்த Mivi Play ப்ளூடூத் ஸ்பீக்கரின் விலை 699 ரூபாய். இது மேட் இன் இந்தியா ஸ்பீக்கர் ஆகும், இதில் Bass கச்சிதமாக கேட்கும். ஒருமுறை முழுமையாக சார்ஜ் செய்தால் 12 மணிநேரம் வரை இதனை இயக்கலாம் என நிறுவனம் தெரிவித்துள்ளது. இது பச்சை, நீலம், ஆரஞ்சு போன்ற பல வண்ணங்களில் கிடைக்கிறது.

மேலும் படிக்க | Top 5 Smartphones: 25 ஆயிரம் ரூபாய் விலைக்குள் இருக்கும் டாப் 5 ஸ்மார்ட்போன்கள்

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News