தண்ணீருக்குள் மூழ்கி போட்டோ எடுக்கலாம்... அச்சத்தலான வாட்டர் ப்ரூப் ஸ்மார்ட்போன்கள் இவை தான்

Best Waterproof Phones: ஸ்மார்ட்போன்கள் அத்தியாவசிய பொருளாக மாறிப்போன நிலையில், மக்களின் விருப்பங்கள் மற்றும் தேவைகளை மனதில் வைத்து, ஸ்மார்ட்போன் தயாரிப்பு நிறுவனங்கள், தினம் தினம் புதுப்புது மாடல்களை களம் இறக்குகின்றன. 

Written by - Vidya Gopalakrishnan | Last Updated : Aug 19, 2024, 05:20 PM IST
  • வாட்டர் ப்ரூப் அம்சம் கொண்ட சில நல்ல ஸ்மார்ட்போன் மாடல்கள் குறித்து அறிந்து கொள்ளலாம்.
  • நீருக்கடியில் புகைப்படம் எடுக்க அல்லது வீடியோக்களை எடுக்க சிறந்த போன்கள்.
  • ஸ்மார்ட்போன் தயாரிப்பு நிறுவனங்கள், தினம் தினம் புதுப்புது மாடல்களை களம் இறக்குகின்றன.
தண்ணீருக்குள் மூழ்கி போட்டோ எடுக்கலாம்... அச்சத்தலான வாட்டர் ப்ரூப் ஸ்மார்ட்போன்கள் இவை தான் title=

Best Waterproof Phones: ஸ்மார்ட்போன்கள் அத்தியாவசிய பொருளாக மாறிப்போன நிலையில், மக்களின் விருப்பங்கள் மற்றும் தேவைகளை மனதில் வைத்து, ஸ்மார்ட்போன் தயாரிப்பு நிறுவனங்கள், தினம் தினம் புதுப்புது மாடல்களை களம் இறக்குகின்றன. அந்த வகையில் வாட்டர் ரெசிஸ்டன்ஸ் மதிப்பீட்டில் சிறந்து விளங்கும் போன்களைப் பற்றி அறிந்து கொள்ளலாம். நீர் பட்டால் பாதிக்கப்படாத, தண்ணீருக்குப் பயப்படாத தொலைபேசியை வாங்க விரும்புபவர்களுக்கு ஏற்ற வகையில், பல போன்கள் உள்ளன. நீருக்கடியில் புகைப்படம் எடுக்க அல்லது வீடியோக்களை எடுக்க ஆர்வம் உள்ளவர்களுக்கு,ஏற்ற சில நல்ல ஸ்மார்ட்போன் மாடல்கள் குறித்து அறிந்து கொள்ளலாம்.

மோட்டோரோலா எட்ஜ் 50 (Motorola Edge 50)

நீருக்கடியில் பயன்படுத்த மோட்டோரோலாவின் எட்ஜ் 50 ஒரு சிறந்த போன். IP68 மதிப்பீட்டுடன் வரும் இந்த ஸ்மார்ட்ஃபோனின் (Smartphone) விலை ரூ.27,999. இந்த போன் தண்ணீரில் பயன்படுத்த மிகவும் பாதுகாப்பானது. இந்த ஸ்மார்ட்போனின் சிறப்பு அம்சம், இது மிகவும் மெல்லியதாகவும், இலகுவாகவும் இருக்கும் அதே நேரத்தில், வலிமையாகவும் இருப்பது தான். மேலும், இதன் கேமிரா, திரை இரண்டுமே மிகவும் தரமானது என்பது குறிப்பிடத்தக்கது

ஓப்போ F27 Pro+ (OPPO F27 Pro+)

நீருக்கடியில் பயன்படுத்தக் கூடிய OPPOவின் F27 Pro+ ஸ்மார்ட்போன் குறைவான விலையில் கிடைக்கும் சிறந்த ஸ்மார்ட்போன். இதன் விலை ரூ.27,999.  நீங்கள் எந்த கவலையும் இல்லாமல் தண்ணீரில் மூழ்கி புகைப்படம் எடுக்கலாம். இந்த ஸ்மார்ட்போன் IP69 மதிப்பீட்டில் வருகிறது. இது 30 மீட்டர் ஆழமான நீரிலும் 30 நிமிடங்கள் வேலை செய்யும்.

மேலும் படிக்க | சாம்சங் கேலக்ஸி போனுக்கு ரூ 18000 வரை தள்ளுபடி! இதைவிட அதிக சலுகை கிடைக்காது!

விவோ V40 Pro (Vivo V40 Pro)

அதிகவேக செயலி கொண்ட அற்புதமான வாட்டர்ப்ரூப் போன் தேவை என்றால் Vivo  V40 Pro சிறந்த தேர்வாக இருக்கும். இந்த விவோ மாடல் போனின் விலை ரூ.49,999. நல்ல கேமரா மற்றும் வேகமான செயலியுடன் கூடிய வாட்டர் ப்ரூஃப் போன் உங்களுக்கு வேண்டுமானால், இது உங்களுக்கு நல்ல தேர்வாக இருக்கும். மோட்டோரோலாவைப் போலவே, இந்த தொலைபேசியும் IP68 மதிப்பீட்டில் வருகிறது.

ஆப்பிள் ஐபோன் 15 (Apple iPhone 15 )

ப்ரீமியம் வகையை சேர்ந்த ஆப்பிள் போன்களில் உள்ள சிறப்பு அம்சங்கள் எப்போதுமே சிறந்தவையாக இருக்கும். ஐபோன் 15 என்பது ஆப்பிள் நிறுவனத்தின் சமீபத்திய அறிமுகங்களில் ஒன்றாகும், இதன் விலை ரூ.65,499. அனைத்து புதிய ஐபோன் போன்களும் வாட்டர் ரெசிஸ்டண்ட் என்பது குறிப்பிடத்தக்கது. P68 மதிப்பீட்டில் வரும் போனை, நீருக்கடியில் புகைப்படம் எடுக்க, 6 மீட்டர் ஆழத்தில் 30 நிமிடங்களுக்கு இதைப் பயன்படுத்தலாம்.

மேலும் படிக்க | அட்டகாசமான விலையில் சாம்சங் கேலக்ஸி A55 5G ஸ்மார்ட்போன்! நவீன தொழில்நுட்பத்தின் சிறப்பம்சங்கள்!

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News