Smartphones Under Rs.15,000 For College Students: மொபைல் வைத்திருப்பது இருப்பது அவசியமாகிவிட்டது. அதே வேளையில் மாதாமாதம் புது புது அப்டேட்களுடனும், அம்சங்களுடனும் ஸ்மார்ட்போன்கள் சந்தைக்கு வந்துகொண்டே இருக்கின்றன. ஆனால் இந்திய சமூகத்தில் ஒருவர் சராசரியாக ஒரு மொபைலை இரண்டு ஆண்டுகளுக்காவது பயன்படுத்துவார்கள். அதன்பின்னரும், அந்த மொபைல் அவர்களின் தாய், தந்தைக்கோ அல்லது வேறு யாருக்காவது கைமாறுமே தவிர மொபைல் பயன்பாட்டில்தான் இருக்கும்.
அப்படியிருக்கும் சூழலில், சிலர் தற்போது புதிய மொபைல்களை வாங்க வேண்டும் என திட்டமிடுவார்கள். இப்போது கல்வியாண்டின் தொடக்கம் என்பதால் கல்லூரிக்கு முதல்முதலாக செல்லும் மாணவர்களுக்கு மொபைலின் தேவை இருக்கும். மேலும் மாணவர்களின் தேவைக்கு அதிக பணத்தையும் செலவிட முடியாது என்பதால் பெற்றோர் பலரும் 15 ஆயிரம் ரூபாய்க்குள் வரும் மொபைலைதான் வாங்கித் தர நினைப்பார்கள். ஆனால், மாணவர்கள் லேட்டஸ்ட் மொபைல்களைதான் கேட்பார்கள்.
டாப் 3 மாடல்கள் இதோ!
அந்த வகையில், இந்த ஜூன் மாதத்தில் இந்திய ஸ்மார்ட்போன் சந்தையில் 15 ஆயிரம் ரூபாய்க்கும் குறைவான மொபைல்கள் வர உள்ளன. இதில், Realme 12 5G, Moto G64 5G, Poco M6 Pro 5G குறிப்பிடத்தக்கவை. பெற்றோர் தங்கள் கல்லூரி செல்லும் மாணவர்களுக்கு இதனை நிச்சயம் வாங்கித் தரலாம். இவற்றின் சிறப்பம்சங்களை இங்கு விரிவாக காணலாம்.
Moto G64 5G
இந்த மொபைல் இரண்டு வேரியண்டில் வருகிறது. இதன் டாப் வெர்ஷனின் விலை ரூ.15 ஆயிரத்தை விட சற்று அதிகமாகும். இந்த மொபைல் MediaTek Dimensity 7025 SoC பிராஸஸர் உள்ளது. இதன்மூலம், கேம்கள் முதல் பல வேலைகளை எந்த சிரமும் இன்றி இதல் செய்யலாம். இதில் 8+128ஜிபி மற்றும் 12+256ஜிபி என இரண்டு வேரியண்டில் இந்த மொபைல் வருகிறது.
இதனால் உங்கள் பாடம் தொடர்பான அனைத்தையும் இதில் சேமித்துக்கொள்ளலாம், ஸ்டோரேஜ் அதிகம் இருக்கும். கேமராவும் தரமாக இருக்கும். OIS சென்சாருடன் 50MP பின்புற கேமரா அமைப்பு இதில் உள்ளது, இதில் தெளிவான மற்றும் செறிவான புகைப்படங்களை நீங்கள் எடுக்கலாம். இதில் 6000mAh பேட்டரி கொடுக்கப்பட்டுள்ளது.
Poco M6 Pro 5G
இந்த மொபைலின் விலை ரூ.9,999 ஆகும். இந்த மொபைல் Snapdragon 4 Gen 2 Processor உடன் வருகிறது. குறிப்பாக, 8+256ஜிபி ஸ்டோரேஜ் உடன் வருகிறது. இது மாணவர்களுக்கு நல்ல ஸ்டோரேஜ் வசதியை தரும். கேமரா குவாலிட்டியும் நன்றாக இருக்கும்.
Realme 12 5G
இந்த மொபைலின் விலை ரூ.15 ஆயிரத்தை விட குறைவுதான். இதில் MediaTek Dimensity 6100+ பிராஸஸர் உடன் வருகிறது. இதில் 5,000mAh பேட்டரியுடனும், 45W பாஸ்ட் சார்ஜிங் வசதியுடன் வருகிறது. இதில் 6.72 இன்ச் IPS டிஸ்ப்ளே உள்ளது. இதன் ரெப்ரெஷ் ரேட் 120Hz ஆகும். இதுவும் மாணவர்களுக்கு ஏற்ற மொபைலாகும்.
மேலும் படிக்க | எக்கச்சக்க ஆப்பர்களில் கிடைக்கும் OnePlus மொபைல்கள்... எங்கு, எப்போது வாங்கலாம்?
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ