Amazon அசத்தல்: வீட்டிலேயே தியேட்டர் அனுபவம், டாப் ஸ்மார்ட் டிவி-களில் கலக்கல் தள்ளுபடி

Amazon Offer: வீட்டிலேயே நேர்த்தியான காட்சி அனுபவத்தை அளிக்கும் சில டிவி-களைப் பற்றியும், இவற்றில் கிடைக்கும் தள்ளுபடிகள் பற்றியும் இந்த பதிவில் காணலாம். 

Written by - Sripriya Sambathkumar | Last Updated : Feb 19, 2022, 02:46 PM IST
  • சாம்சங் ஸ்மார்ட் டிவியை 15 ஆயிரத்துக்குள் வாங்கலாம்.
  • எல்ஜி ஸ்மார்ட் டிவிகளில் பெரும் தள்ளுபடி கிடைக்கிறது.
  • பெரிய டிவி-களில் ரெட்மி 126 செமீ (50 இஞ்ச்) 4கே அல்ட்ரா எச்டி ஆண்ட்ராய்டு ஸ்மார்ட் எல்இடி டிவி ஒரு நல்ல தேர்வாக இருக்கும்.
Amazon அசத்தல்: வீட்டிலேயே தியேட்டர் அனுபவம், டாப் ஸ்மார்ட் டிவி-களில் கலக்கல் தள்ளுபடி title=

கோவிட் தொற்றுநோய் பரவியதிலிருந்து, நமது வாழ்க்கை முறை வெகுவாக மாறிவிட்டது. வீட்டை விட்டு வெளியே சென்று படம் பார்க்கும் பழக்கமும் குறைந்துவிட்டது. வீட்டிலேயே புதிய படங்களைப் பார்க்க மக்கள் ஆசைப்படுகிறார்கள். அப்படி இருக்கையில், வீட்டிலேயே தியேட்டர் அனுபவம் கிடைத்தால் எப்படி இருக்கும்?

வீட்டிலேயே நேர்த்தியான காட்சி அனுபவத்தை அளிக்கும் சில டிவி-களைப் பற்றியும், இவற்றில் கிடைக்கும் தள்ளுபடிகள் பற்றியும் இந்த பதிவில் காணலாம். இந்த ஸ்மார்ட் டிவிகளில் Mi, சாம்சங் மற்றும் ரெட்மி போன்ற சிறந்த பிராண்டுகள் அடங்கும். 

சாம்சங் ஸ்மார்ட் டிவியை 15 ஆயிரத்துக்குள் வாங்கலாம்

இந்த பதிவில் சாம்சங் 80 செமீ (32 இஞ்ச்) வொண்டர்டெயின்மெண்ட் சீரிஸ் எஹ்டி ரெடி எல்இடிஸ்மார்ட் டிவி பற்றி காணலாம். இது சந்தையில் ரூ.20,900 என்ற விலையில் விற்கப்படுகின்றது. ஆனால் அமேசானில் 14% தள்ளுபடிக்குப் பிறகு இந்த ஸ்மார்ட் டிவி ரூ.17,990க்கு விற்கப்படுகிறது. எக்ஸ்சேஞ்ச் ஆஃபரின் முழுப் பலனையும் பெற முடிந்தால், வாடிக்கையாளர்கள் ​​ரூ.2,410 தள்ளுபடியைப் பெற முடியும். 

மேலும் வங்கிச் சலுகையின் கீழ் எச்டிஎஃப்சி வங்கி மில்லினியா கிரெடிட் கார்டுகள் மற்றும் எச்எஸ்பிசி கேஷ்பேக் கிரெடிட் கார்டுகளைப் பயன்படுத்தினால், 5% அதாவது ரூ.900 கேஷ்பேக் கிடைக்கும். ஒட்டுமொத்தமாக இந்த ஸ்மார்ட் டிவியை ரூ.14,680க்கு வாங்கலாம்.

எல்ஜி ஸ்மார்ட் டிவிகளில் பெரும் தள்ளுபடி

நீங்கள் அமேசானில் இருந்து எல்ஜி 80 செமீ (32 இஞ்ச்) எச்டி ரெடி எல்இடி டிவி வாங்கினால், அதற்கு ரூ.27,990க்கு பதிலாக ரூ.19,890 செலுத்தினால் போதும். இந்த டிவி-ஐ வாங்க எச்டிஎஃப்சி பேங்க் மில்லினியா கிரெடிட் கார்டுகள் மற்றும் எச்எஸ்பிசி கேஷ்பேக் கிரெடிட் கார்டுகளை பயன்படுத்தினால் ரூ.995 கேஷ்பேக்கைப் பெறுவீர்கள். மேலும் இதில் கிடைக்கும் முழு எக்ஸ்சேஞ்ச் சலுகையைப் பெறும்போது ரூ.2,410ஐச் சேமிக்க முடியும். மொத்தத்தில் இதில் கிடைக்கும் சலுகைகள் காரணமாக ரூ.16,485க்கு இந்த டிவியை வாங்க முடியும். 

மேலும் படிக்க | Flipkart Sale: மிகக் குறைவான விலையில் சாம்சங் ஃப்ரிட்ஜை வாங்கலாம் 

Mi இன் இந்த ஸ்மார்ட் டிவியை 20 ஆயிரத்திற்கு வாங்கலாம் 

Mi 100 செமீ (40 இஞ்ச்) ஹாரிசான் எடிஷன் ஃபுல் எஹ்டி ஆண்ட்ராய்ட் எல்இடி டிவி 4ஏ அமேசானில்  அதன் அசல் விலையான ரூ.29,999க்கு பதிலாக ரூ.23,999க்கு கிடைக்கிறது. எச்டிஎஃப்சி பேங்க் மில்லினியா கிரெடிட் கார்டுகள் மற்றும் எச்எஸ்பிசி கேஷ்பேக் கிரெடிட் கார்டுகளைப் பயன்படுத்தி இந்த டிவி-ஐ வாங்கினால், இதில் 5%, அதாவது ரூ.1,200 கேஷ்பேக் கிடைக்கும். எக்ஸ்சேஞ்ச் சலுகையின் முழு சலுகையும் கிடைத்தால், வாடிக்கையாளர்கள் ரூ.2,410 சேமிக்கலாம். அதன் பிறகு இந்த ஸ்மார்ட் டிவியை ரூ.19,880க்கு வாங்கலாம்.

ரெட்மி 50-இன்ச் ஸ்மார்ட் டிவியை மலிவாக வாங்கலாம்

நீங்கள் ஒரு பெரிய ஸ்மார்ட் டிவியை வாங்க விரும்பினால் ரெட்மி 126 செமீ (50 இஞ்ச்) 4கே அல்ட்ரா எச்டி ஆண்ட்ராய்டு ஸ்மார்ட் எல்இடி டிவி ஒரு நல்ல தேர்வாக இருக்கும். இந்த டிவி அமேசானில் 20% தள்ளுபடிக்குப் பிறகு ரூ.44,999க்கு பதிலாக ரூ.35,999க்கு விற்கப்படுகிறது. எக்ஸ்சேஞ்ச் ஆஃபரின் முழுப் பலனையும் பெற முடிந்தால், வாடிக்கையாளகள் இதில் ரூ.2,410-ஐச் சேமிக்க முடியும். மேலும் சிட்டிபேங்க் கிரெடிட் அல்லது டெபிட் கார்டைக் கொண்டு இந்த டிவி-ஐ வாங்கினால், உடனடியாக ரூ.2,000 தள்ளுபடி கிடைக்கும். இந்த வழியில் நீங்கள் இந்த ஸ்மார்ட் டிவியை ரூ.31,589 க்கு வாங்க முடியும்.

மேலும் படிக்க | ஒன்பிளஸ் நோர்ட் சிஇ 2 vs ஒன்பிளஸ் நோர்ட் சிஇ; எது பெஸ்ட் 

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, டிவிட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR

Trending News