புதுடெல்லி: iPhone 13 தொடரை பிரபலமாக்க Apple (Apple iPhone 13) நிறுவனம் பல உத்திகளைக் செய்து வருகிறது. சிப் பற்றாக்குறையால், ஆப்பிள் மற்ற தயாரிப்புகளை நிறுத்தி ஐபோன் 13 தயாரிப்பை அதிகரித்தது. இதன் பலனை தற்போது ஆப்பிள் நிறுவனம் பெற்றுள்ளது. புதிய Wave7 ஆராய்ச்சி அறிக்கையின்படி, அமெரிக்காவில் உலகளாவிய சிப் பற்றாக்குறையால் சாம்சங் மிகவும் பாதிக்கப்பட்டுள்ளது. இதனால் உயர்நிலை சாம்சங் கேலக்ஸி போன்களின் விநியோகம் குறைந்து வருகிறது, இது Apple iPhone 13 தொடருக்கு பயனளித்துள்ளது.
ஐபோன் 13க்கான தேவை அதிகரித்துள்ளது
வெரிசோன், ஏடி&டி மற்றும் டி-மொபைல் போன்ற முக்கிய கேரியர்களின் 40 பிரதிநிதிகளுடன் இந்த ஆய்வு நடத்தப்பட்டது. இந்த அறிக்கையின் நோக்கம் அமெரிக்காவில் அக்டோபர் மாதத்திற்கான ஸ்மார்ட்போன் விற்பனையை வெளிச்சம் போட்டுக் காட்டுவதாகும். 65% ஸ்டோர் பிரதிநிதிகளின் கூற்றுப்படி, அக்டோபர் மாதத்தில் ஐபோன் 13 (iPhone 13) தொடருக்கான தேவை கடந்த ஆண்டு இதே மாதத்தில் iPhone 12 க்கான தேவையை விட அதிகமாக உள்ளது.
ALSO READ | Cheap and Best: அதிரடி அம்சங்கள், அடக்கமான விலை கொண்ட டாப் 5 ஸ்மார்ட்போன்கள்
எங்கும் தெரிக்கவிடும் ஐபோன் 13
கடந்த மாதம், Verizon இன் ஸ்மார்ட்போன் விற்பனையில் iPhone 72% ஆகவும், சாம்சங் 23% ஆகவும் இருந்தது. AT&T ஐப் பொறுத்தவரை, இந்த எண்ணிக்கை 76% ஐபோன் விற்பனைக்கு ஆதரவாக இருந்தது, இது சாம்சங்கின் விற்பனையில் 20% ஆக இருந்தது. டி-மொபைல் விற்பனையும் ஆப்பிளுக்கு சாதகமாக இருந்தது, சாம்சங் சாதனங்களின் 26% உடன் ஒப்பிடும்போது 66% ஐபோன்கள் விற்கப்பட்டன.
நவம்பர் 20 வரை, iPhone 13 இன் கிடைக்கும் தன்மை மேம்பட்டுள்ளது, iPhone 13 அடிப்படை மாடலுக்கான நிறைய சரக்குகள் கையிருப்பில் உள்ளன. அதன்படி iPhone 13 Pro மற்றும் iPhone 13 Pro Max ஷிப்பிங் தேதி டிசம்பர் மாதத்திற்கு தள்ளப்பட்டுள்ளது.
ALSO READ | Amazon Offer: ரூ. 500-க்கும் குறைவாக கிடைக்கிறது அட்டகாசமான Redmi 9 ஸ்மார்ட்போன்
உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.
முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூகம், வேலைவாய்ப்பு என உள்ளூர் முதல் உலகம் முழுவதும் அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் வாசிக்க, இப்போதே ஜீ இந்துஸ்தான் பயன்பாட்டைப் பதிவிறக்குங்கள்.
Android Link: https://bit.ly/3hDyh4G
Apple Link: https://apple.co/3loQYeR