ஆன்லைன் டெலிவரியில் அமேசானின் அடுத்த பாய்ச்சல்! இனி பொருட்கள் பறந்து வரும்

ஆன்லைனில் ஆர்டர் செய்தால் டிரோன் மூலம் வீட்டுக்கு பொருட்களை டெலிவரி செய்யும் திட்டத்தை தொடங்கியிருக்கிறது அமேசான் நிறுவனம்.

Written by - S.Karthikeyan | Last Updated : Nov 19, 2022, 07:51 PM IST
ஆன்லைன் டெலிவரியில் அமேசானின் அடுத்த பாய்ச்சல்! இனி பொருட்கள் பறந்து வரும் title=

ஆன்லைனில் ஆர்டர் செய்தால் பொருட்கள் வீடு தேடி வருவது இப்போது இயல்பாகிவிட்டது. உணவு, மருந்து, உடை என அனைத்து பொருட்களும் வீட்டில் இருந்தபடியே ஆர்டர் செய்து வாங்கிவிட முடியும். இதில் அமேசான் மற்றும் பிளிப்கார்ட் நிறுவனங்கள் கோலோச்சிக் கொண்டிருக்கின்றன. இந்தியாவில் மீஷோ உள்ளிட்ட நிறுவனங்களுன் ஆன்லைன் மூலம் பொருட்களை வீடு தேடிச் சென்று டெலிவரி செய்து கொண்டிருக்கின்றன. இந்நிலையில், இதிலும் அடுத்த பாய்ச்சலை நிகழ்த்த இருக்கிறது. 

அதாவது, ஆன்லைனில் ஆர்டர் செய்யும் பொருட்களை பறந்து வந்து கொடுக்கும் திட்டத்தை விரைவில் செயல்படுத்த இருக்கிறது. வாடிக்கையாளர்கள் ஆர்டர் செய்யும் பொருட்கள் டிரோன் மூலம் வாடிக்கையாளர்களின் வீட்டுக்கே கொண்டு சேர்க்கும் புதிய முயற்சியை அமேசான் கையில் எடுத்துள்ளது. இந்த திட்டத்துக்கு Amazon prime Air என பெயரிட்டுள்ளது. அடுத்த ஆண்டு இறுதிக்குள் இந்த திட்டத்தை நடைமுறைக்கு கொண்டு வர அமேசான் முடிவெடுத்திருக்கிறது.

மேலும் படிக்க | 84 நாட்களுக்கு இனி உங்களுக்கு டென்ஷன் இல்லை! ஏர்டெல்லின் அட்டகாசமான ரீச்சார்ஜ் பிளான் 

அமேசானின் ஆன்லைன் டெலிவரி செய்யும் டிரோனின் பெயர் ‘MK30’. தற்போது இருக்கும் டிரோன்களைவிட சத்தம் மிக குறைவாக இருக்கும் இந்த டிரோன்கள் 2024 முதல் முழுநேர டெலிவரி பணியை தொடங்க இருக்கின்றன. அதிகபட்சம் 100 பவுண்ட் எடையை தாங்கும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது.  

அமெரிக்காவின் Federal Aviation Administration (FAA) முன்னிலையில் இதன் பாதுகாப்பு மற்றும் திறன் சோதனை செய்யப்பட்டு பின்னர் செயல்பாட்டிற்கு கொண்டுவரப்படும் என அமேசான் நிறுவனம் தெரிவித்துள்ளது. டிரோன்கள் பயன்பாட்டுக்கு வந்த பின்னர் மிக விரைவாக அமேசான் பொருட்கள் டெலிவரி செய்யப்படும். Amazon Prime Air Delivery திட்டம் முதல்கட்டமாக கலிபோர்னியா, டெக்ஸாஸ் ஆகிய மாகாணங்களில் அறிமுகம் செய்யப்படும். பின்னர் படிப்படியாக அமெரிக்கா முழுவதும் அறிமுகம் செய்யப்படும். 2025 ஆம் ஆண்டிற்கு பிறகு உலகம் முழுவதும் உள்ள பல்வேறு நாடுகளில் அறிமுகம் செய்ய அமேசான் திட்டமிட்டுள்ளது.

மேலும் படிக்க | ரூ.200-ஐ விட குறைந்த விலையில் செம ஸ்பீட்: ஏர்டெல், ஜியோவுக்கு தலைவலியாய் வந்த திட்டம் 

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

 

 

 

Trending News