உலகம் முழுவதும் லட்சக்கணக்கான மக்கள் வாட்ஸ்அப்பைப் பயன்படுத்துகின்றனர். சுமார் 180 நாடுகளில் 1.5 பில்லியன் மக்கள் வாட்ஸ்அப்பில் மிகவும் ஆக்டிவ் ஆக உள்ளவர்கள் இருக்கிறார்கள். இந்நிலையில், பயனர்களின் வசதியைக் கருத்தில் கொண்டு அவ்வப்போது புதிய அம்சங்களை வாட்ஸ்அப் அறிமுகப்படுத்துகிறது. இருப்பினும், வாட்ஸ்அப்பின் பல முக்கியமான மற்றும் மிகவும் பயனுள்ள அம்சங்களை பற்றி பலருக்கு தெரிவதில்லை
வாட்ஸ்அப்பில் (WhatsApp), உங்கள் தொலைபேசியைத் தொடாமல் அல்லது தட்டச்சு செய்யாமல் வாட்ஸ்அப் செய்திகளை அனுப்பலாம் என்பது தெரியுமா. இது தவிர, சேட்டிங்கை இன்னும் சுவாரஸ்யமாக ஆக்கும் அம்சங்களும் உள்ளன. இருப்பினும், இதற்காக செட்டிங்குகளில் சில மாற்றங்களைச் செய்ய வேண்டும்.
ALSO READ | Alert: WhatsApp பயனர்கள் செய்யும் சில தவறுகளுக்கு அதிக விலை கொடுக்க நேரிடலாம்
அன்ரீட் (Unread) என மார்க் செய்தல்
பல முறை பிறர்ட் நமக்கு அனுப்பும் தகவல்களுக்கு பதிலளிக்க மறந்து விடுகிறோம், அல்லது நேரம் இருப்பதில்லை.. இதற்கு, வாட்ஸ்அப்பில் உங்கள் தொடர்பிலிருக்கும் எந்த எண்ணையும் திறக்கலாம். நீங்கள் விரும்பினால், செய்தியைப் Unread, என மார்க் செய்து பிறகு பதிலளிக்கலாம். இந்த செட்டிங்கில் , அன்ரீட் என குறிப்பிட்ட தொடர்பு எண்ணில் ஒரு மார்க் தோன்றும், இது உங்களுக்கு பின்னர் நினைவூட்டுகிறது. இதற்காக, Android தொலைபேசியில் சேட்டை அழுத்திப் பிடிக்க வேண்டும். வலது பக்கத்தில், ஒரு மார்க் ஆன்ரிட் ஆப்ஷன் தோன்றும். iOS இல் சேட்ட்டின் வலது பக்கத்தை ஸ்வைப் செய்யும் போது, Unread ஐகான் தோன்றும். அதன் மீது தட்டவும்.
தொலைபேசியைத் தொடாமல் உங்கள் வாட்ஸ்அப் செய்திகளுக்கு பதிலளிக்கலாம்.
தொலைபேசியைத் தொடாமல், தட்டச்சு செய்யாமல், பதில் அனுப்புவதற்கு கூகிள் அஸிஸ்டென்ட் உதவியை நீங்கள் எடுக்க வேண்டும். இதில், நீங்கள் கூறுவதை அப்படியே தட்டச்சு செய்யும்.
வாட்ஸ்அப்பில் எழுத்துருவை (Font) எவ்வாறு மாற்றுவது
வாட்ஸ்அப் சேட்டிங்கை மேலும் சுவார்ஸ்யமானதாக ஆக்க , புதிய எழுத்துருவை முயற்சி செய்யலாம். இதில் சாய்வு எழுத்துருவைத் தேர்வு செய்யலாம். வார்த்தையை போல்ட் செய்யலாம். Bold செய்ய வேண்டிய எழுத்துக்களின் முன்னும் பின்னும் ஸ்டார் இணைத்தால், உங்கள் செய்தியை அனுப்பும்போது, அது Bold எழுத்துருவில் காணப்படும். மறுபுறம், சாய்வு (Italic) எழுத்துருவைப் பொறுத்தவரை, வார்த்தையின் முன்னும் பின்னும் அண்டர் ஸ்கோர் குறியை பயன்படுத்தப்பட வேண்டும்.
ALSO READ | Facebook வழங்கும் அசத்தல் அம்சம்; பதிவுகளை வேறு தளங்களுக்கு எளிதாக மாற்றலாம்
தேசம், சர்வதேசம், கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR