அமேசானில் அசத்தலான 5ஜி ஸ்மார்ட்போன்கள் ரூ.2000-க்கும் குறைவான விலையில்

Amazon Fab Phones Fest-ல் ஸ்மார்ட்போன்களின் அற்புதமான விற்பனை இன்று முதல் அதாவது மார்ச் 11 ஆம் தேதி தொடங்கியுள்ளது. இந்த விற்பனையில் கிடைக்கும் சிறந்த சலுகைகளைப் பற்றி இந்த பதிவில் காணலாம். 

Written by - Sripriya Sambathkumar | Last Updated : Mar 11, 2022, 04:23 PM IST
  • ஆன்லைன் ஷாப்பிங் தளங்கள் பல்வேறு கவர்ச்சிகரமான சலுகைகளை வழங்குகின்றன.
  • அமேசானின் Amazon Fab Phones Fest தொடங்கியுள்ளது.
  • ரியல்மி நார்ஸோ 30 5ஜி -ஐ வெறும் ரூ.449 க்கு வாங்க முடியும்.
அமேசானில் அசத்தலான 5ஜி ஸ்மார்ட்போன்கள் ரூ.2000-க்கும் குறைவான விலையில் title=

ஹோலி பண்டிகையை முன்னிட்டு, ஆன்லைன் ஷாப்பிங் தளங்கள் தங்கள் வாடிக்கையாளர்களுக்கு பல்வேறு கவர்ச்சிகரமான சலுகைகளை வழங்குகின்றன. அமேசானின் அமேசான் ஃபாப் ஃபோன்ஸ் ஃபெஸ்டில் (Amazon Fab Phones Fest) ஸ்மார்ட்போன்களில் அற்புதமான விற்பனை இன்று முதல் அதாவது மார்ச் 11 ஆம் தேதி தொடங்கியுள்ளது. இந்த விற்பனையில் கிடைக்கும் சிறந்த சலுகைகளைப் பற்றி இந்த பதிவில் காணலாம். 

iQOO Z3 5G

iQOO இன் இந்த 128GB ROM 5G ஸ்மார்ட்போனின் அசல் விலை ரூ.22,990 ஆகும்.  இது அமேசானில் ரூ.17,990க்கு விற்கப்படுகிறது. வாடிக்கையாளர்கள் எக்ஸ்சேஞ்ச் சலுகையின் முழுப் பலனையும் பெற்றால், இந்த போனில் ரூ.13,550-ஐச் சேமிக்க முடியும். மேலும் ரூ.1,500-க்கான கூப்பன் தள்ளுபடியும் வழங்கப்படுகிறது. ஹெச்டிஎஃப்சி வங்கி கார்டுகளைப் பயன்படுத்தி, நீங்கள் மேலும் ஆயிரம் ரூபாய் தள்ளுபடியைப் பெறலாம். ஒட்டுமொத்தமாக, ரூ.16,050 தள்ளுபடிக்குப் பிறகு, iQOO Z3 5G ஐ வெறும் ரூ.1,940க்கு வாங்கலாம்.

ரெட்மி நோட் 11

இந்த விற்பனையில், சக்திவாய்ந்த பேட்டரி கொண்ட ரெட்மி-யின்  5ஜி ஸ்மார்ட்போனை ரூ.19,999க்கு பதிலாக ரூ.15,999க்கு விற்கப்படுகிறது. உங்கள் பழைய ஸ்மார்ட்போனுக்கு பதிலாக இந்த ஸ்மார்ட்போனை வாங்கினால், ரூ.15,199 வரை தள்ளுபடி கிடைக்கும். எக்ஸ்சேஞ்ச் சலுகையின் முழுப் பலனையும் பெறும்போது, ​​இந்த போனின் விலை வெறும் ரூ.800 ஆகக் குறையும். 

மேலும் படிக்க | ஆண்ட்ராய்டு 12 ஸ்மார்ட்போன்களும், அவற்றை பாதிக்கும் டர்ட்டி பைப்பும்

சாம்சங் கேலக்சி எஸ்20 எஃப்இ 5ஜி 

8ஜிபி ரேம் மற்றும் 128ஜிபி சேமிப்பு கொண்ட இந்த சாம்சங் ஸ்மார்ட்போனை இந்த விற்பனையில் ரூ.74,999க்கு பதிலாக ரூ.36,990க்கு வாங்கலாம். எச்டிஎஃப்சி பேங்க் கார்டுகளைப் பயன்படுத்தி ரூ. 1,000 வரை சேமிக்கலாம். எக்ஸ்சேஞ்ச் சலுகையை முழுமையாகப் பயன்படுத்தினால் ரூ.13,550 தள்ளுபடியைப் பெறலாம். இதன் மூலம் ரூ.74,999 விலையில் இருக்கும் இந்த ஸ்மார்ட்ஃபோனை வாடிக்கையாளர்கள் வெறும் ரூ.22,440க்கு வாங்கலாம்.

ஓப்போ ஏ74 5ஜி

ஓப்போ-வின் இந்த சக்திவாய்ந்த டிஸ்ப்ளே 5ஜி ஸ்மார்ட்போன் அமேசான் விற்பனையில் ரூ 16,990 க்கு விற்கப்படுகிறது. அதன் அசல் விலை ரூ 20,990 ஆகும். எக்ஸ்சேஞ்ச் சலுகையின் முழுப் பலனையும் நீங்கள் பெற்றால், உங்களுக்கு ரூ.13,550 தள்ளுபடி கிடைக்கும். மேலும் எஹ்டிஎஃப்சி வங்கி அட்டைகளைப் பயன்படுத்தி இந்த போனை வாங்கினால் ஆயிரம் ரூபாய் சேமிக்கலாம். இந்த வழியில் Oppo A74 5G ஐ வெறும் 2,440 ரூபாய்க்கு வாங்கலாம்.

ரியல்மி நார்ஸோ 30 5ஜி 

இந்த விற்பனையில் ரியால்மி-யின் 5ஜி ஸ்மார்ட்போன் ரூ.17,999க்கு பதிலாக ரூ.16,999க்கு விற்பனை செய்யப்படுகிறது. உங்கள் பழைய ஸ்மார்ட்போனுக்கு பதிலாக இந்த ஸ்மார்ட்போனை வாங்கினால், ரூ.13,550 சேமிக்க முடியும் மேலும். இந்த டீலில் ரூ.2,000 கூப்பன் தள்ளுபடியும் வழங்கப்படுகிறது. எச்டிஎஃப்சி வங்கி கார்டுகளைப் பயன்படுத்தினால், மேலும் ஆயிர, ரூபாய் சேமிக்கலாம். இந்த வழியில், இந்த ஸ்மார்ட்போனை ரூ.449 க்கு வாங்க முடியும்.

மேலும் படிக்க | Holi Offers, கோடாக் ஸ்மார்ட் டிவியில் பெரும் தள்ளுபடி

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, டிவிட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR

Trending News