சான்ஸ் அ இல்ல.. இவ்வளவு கம்மி விலையில் ரீசார்ஜ் பிளானா? ஏர்டெல் அசத்தல்

Airtel Cheapest Plan: இந்த போஸ்ட்பெய்ட் திட்டம் அன்லிமிடெட் காலிங், அதிகப்படியான டேட்டா சேவைகள், எக்கச்சக்கமான பொழுதுபோக்கு வசதிகள் என பலவற்றை கொண்டுள்ளன. இந்த திட்டம் பற்றி விரிவாக பார்க்கலாம்.

Written by - Vijaya Lakshmi | Last Updated : Jul 25, 2023, 09:53 AM IST
  • ஏர்டெல் புதிய திட்டத்தை அறிமுகப்படுத்தியுள்ளது.
  • அன்லிமிடெட் காலிங் மற்றும் டேட்டா வசதி கிடைக்கும்.
  • ஜியோ ரூ.599 திட்டத்தின் சிறப்பு என்ன?
சான்ஸ் அ இல்ல.. இவ்வளவு கம்மி விலையில் ரீசார்ஜ் பிளானா? ஏர்டெல் அசத்தல் title=

ஏர்டெல் 599 ரூபாய் திட்டம்: நாட்டின் மிகப்பெரிய தொலைத்தொடர்பு நிறுவனமான ஜியோ தனது சொந்த சந்தையை உருவாக்கியுள்ளது. இதைக் கருத்தில் கொண்டு ஏர்டெல் நிறுவனமும் தனது பகடைக்காயை வீசி பயனர்களை கவர்ந்து வருகிறது. இத்தகைய சூழ்நிலையில், ஏர்டெல் பயனர்களுக்கு மலிவு விலையில் போஸ்ட்பெய்டு குடும்பத் திட்டத்தை அறிமுகப்படுத்தியுள்ளது. ஏர்டெல் இந்த திட்டத்துடன் ஜியோவுக்கு போட்டியை அளிக்கிறது. இந்தக் குடும்பத் திட்டத்தின் விலை வெறும் ரூ.599 ஆகும். இது தவிர, நிறுவனம் ரூ.799 மற்றும் ரூ.998 ஆகிய இரண்டு திட்டங்களையும் அறிமுகப்படுத்தியுள்ளது.

ஏர்டெல் திட்டத்தில் கிடைக்கும் வசதிகள்
இந்த திட்டத்தை அறிமுகப்படுத்திய பிறகு, ஏர்டெல் நிறுவனமும் தனது இடத்தைப் பிடித்துள்ளது. இந்த மலிவுத் திட்டத்தில் பயனர்களும் மிகவும் மகிழ்ச்சியடைந்துள்ளனர், ஏனெனில் இந்தத் திட்டத்தில் மக்கள் பல வசதிகளைப் பெறுகிறார்கள். இந்த போஸ்ட்பெய்ட் ரீசார்ஜ் திட்டத்தில், நிறுவனம் பயனர்களுக்கு ஒரு ஆட்-ஆன் இணைப்பை வழங்குகிறது. இது தவிர, Amazon Prime, Disney + Hotstar மற்றும் Airtel Xstream ஆகியவற்றின் சந்தாக்கள் இதில் கிடைக்கின்றன. அதே நேரத்தில், ரூ.799 மற்றும் ரூ.998 திட்டங்களில் டைரக்ட் டு ஹோம் மற்றும் பிராட்பேண்ட் திட்டங்களுடன் வருகிறது.

மேலும் படிக்க | குறைந்த விலையில் அட்டகாசமான லேப்டாப் வேணுமா... அமேசானில் அதிரடி ஆப்பர்!

ஏர்டெல் நிறுவனம் இரண்டு நபர்களின் குடும்பத்தை கருத்தில் கொண்டு ரூ.599 போஸ்ட்பெய்டு திட்டத்தை அறிமுகப்படுத்தியுள்ளது. இதன் மூலம் ஒரு நபருக்கு கிடைக்கும் அனைத்து வசதிகளும் மற்றொருவருக்கும் கிடைக்கும்.

அன்லிமிடெட் காலிங் மற்றும் டேட்டா வசதி
இந்த திட்டத்தின் மூலம் லோக்கல், STD அல்லது ரோமிங் என எதுவானாலும் அன்லிமிடெட் காலிங் பேசலாம். மேலும் ஒரு நாளைக்கு 100SMS வசதி இதில் நமக்கு கிடைக்கிறது. இந்த திட்டம் பயன்படுத்தி ஒரு மாதத்திற்கு 105GB டேட்டா பெறலாம். முதல் நபருக்கு 75GB டேட்டா மற்றும் கூடுதல் இணைப்பில் இருப்பவருக்கு 30GB டேட்டா இந்த திட்டம் மூலம் கிடைக்கும். நாம் பய்னபடுத்தாத டேட்டா இருந்தால் அவை 200GB என்ற அளவு வரை சேமிக்கப்பட்டு மீண்டும் நமக்கே ரோல் ஓவர் முறையில் கிடைக்கும்.

பிற வசதிகள் என்ன?
இதனுடன் நமக்கு handset Protection, Xstream Mobile Pack, Hello Tunes, Wynk Music Premium போன்ற கூடுதல் வசதிகள் கிடைக்கும். மேலும் இதில் நீங்கள்  9 பேர்கள் வரை கூடுதல் நபர்களாக சேர்த்துக்கொள்ளமுடியும். ஒருவருக்கு 299 ரூபாய் கட்டணம் செலுத்தவேண்டும். கூடுதல் Addon ஒவ்வொன்றிற்கும் 30GB டேட்டா கிடைக்கும். மேலும் நாம் Airtel நிறுவனத்தின் அன்லிமிடெட் 5G பயன்படுத்தலாம் என்பது குறிப்பிடத்தக்கது.

ஜியோ ரூ.599 திட்டத்தின் சிறப்பு என்ன?
ஜியோவின் ரூ.599 திட்டத்தில் அன்லிமிடெட் வொய்ஸ் காலுடன் அன்லிமிடெட் டேட்டா வழங்கப்படுகிறது. இத்துடன் தினமும் 100 எஸ்எம்எஸ் வழங்கப்படுகிறது. இதில், ஜியோ ஆப்ஸுடன் ஜியோ டிவி, ஜியோ சினிமா மற்றும் ஜியோ கிளவுட் ஆகியவற்றின் இலவச சந்தா வழங்கப்படுகிறது. ஜியோவின் இந்த திட்டத்தில் ஜியோ வெல்கம் ஆஃபர் வழங்கப்படுகிறது. இந்த திட்டத்தில் அன்லிமிடெட் 5ஜி டேட்டாவும் வழங்கப்படுகிறது.

மேலும் படிக்க | அட்டகாசமான இ-பைக் 55555 ரூபாயில்! லைசன்ஸ் வேண்டாம்! உங்கள் மொபைலே பைக் சாவி

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News