வாஷிங்டன்: AI விமானிகள் பயணிகள் விமானங்களை இயக்குவதற்கான சாத்தியக்கூறுகள் இருப்பதாக எமிரேட்ஸ் விமான நிறுவனத் தலைவர் சுட்டிக்காட்டுகிறார். விமானத்தை செயற்கை நுண்ணறிவு விமானி ஓட்டுவதை நீங்கள் பார்க்கலாம், என்று எமிரேட்ஸ் விமான நிறுவனத் தலைவர் டிம் கிளார்க் கூறினார், AI தொழில்நுட்பத்தின் அடுத்த கட்டம் தொடர்பான விவாதங்கள் இவ்வாறு ஒவ்வொரு துறையிலும் தொடர்கிறது.
செயற்கைத் தொழில்நுட்பத்தின் (AI) விரிவடையும் திறன்களுடன், விமானங்கள் இப்போது தன்னியக்கப் பயன்முறையிலிருந்து AI பைலட் பயன்முறைக்கு மாறக்கூடும். விமானி அறைக்குள் இருந்து இரண்டு பயிற்சி பெற்ற விமானிகள் விமானத்தை இயக்கும் முறையில் இருந்து மாறி, AI பைலட்டுகள் விமானங்களை மிகவும் சீராகவும் பாதுகாப்பாகவும் பறக்கவிடும் சூழ்நிலையில், விமானிகள் இல்லாமலேயே விமானம் பறக்கும் என்ற நிலைக்கு மாறலாம்.
இது உண்மையில் சாத்தியமாகுமா என்பதை எதிர்காலம் தான் சொல்லும் என்றாலும், குறைந்தபட்சம் எமிரேட்ஸ் விமான நிறுவனத் தலைவர் டிம் கிளார்க் இதற்கான சாத்தியக்கூறுகள் அதிகம் என்று சொல்கிறார். சமீபத்தில் ஊடகம் ஒன்று அளித்த நேர்காணலில், பயணிகள் விமானங்கள் எதிர்காலத்தில் AI துணை விமானிகளைக் கொண்டிருக்கலாம் என்று கிளார்க் கூறினார்.
முழு தானியங்கி விமானங்களின் தொழில்நுட்பம் ஏற்கனவே முன்னேறி வருவதை சுட்டிக்காட்டும் எமிரேட்ஸ் விமான நிறுவனத் தலைவர் டிம் கிளார்க், ஒற்றை விமானி விமானத்தின் சாத்தியத்தை வலியுறுத்துகிறார்.
"ஒரு பைலட் விமானத்தை நீங்கள் பார்க்கலாம். விமானத்தை முழுமையாக தானியங்கி முறையில் பறக்கவிட முடியுமா? ஆம், தொழில்நுட்பம் இப்போது சரியாக உள்ளது. ஆனால் பயணிகள் இரண்டு விமானிகள் இருக்க வேண்டும் என விரும்புகிறார்கள். எனவே, இரு விமானிகள் என்ற நிலை மாறாவிட்டாலும், அதில் செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பம் ஒன்றாக இருக்கும்” என்று கிளார்க் கூறினார்.
அவரது கருத்துக்கள் AI தொழில்நுட்பம் எவ்வளவு வேகமாக மற்றும் எந்த அளவிற்கு உருவாக்கப்பட வேண்டும் என்ற விவாதத்தை தூண்டியது. இருப்பினும், எமிரேட்ஸ் விமான நிறுவனத் தலைவர் பின்னர் பயிற்சி பெற்ற விமானிகளின் திறமைகளை வலியுறுத்தினார்.
“விமானிகள் வெறும் விமான ஓட்டுநர்கள் மட்டும் அல்ல; அவர்கள் மிகவும் திறமையான வல்லுநர்கள், அவர்கள் ஒரு விரிவான பாதுகாப்பு அமைப்பில் முக்கிய பங்கு வகிக்கிறார்கள், பயணிகள், பணியாளர்கள் மற்றும் சரக்குகளின் பாதுகாப்பான வருகையை உறுதி செய்பவர்கள்" என்று கிளார்க் கூறினார்.
“விமானத்தை ஓட்டுவதற்கு அப்பால் விமானிகளுக்கு பல்வேறு பொறுப்புகள் உள்ளன. அவர்கள் நேவிகேட்டர்கள், பொறியாளர்கள், தொழில்நுட்ப வல்லுநர்கள், வானிலை நிபுணர்கள் மற்றும் வாடிக்கையாளர் சேவை மேலாளர்களாக செயல்படுகிறார்கள். ஒரு பொதுவான நாளில், விமானிகள், விமானப் பணியாளர்கள், தரைப் பணியாளர்கள், கேபின் குழுவினர், விமானப் போக்குவரத்துக் கட்டுப்பாடு மற்றும் பயணிகள் உட்பட பல்வேறு நபர்களுடன் தொடர்பு கொள்கின்றனர். விமானிகளுக்கு பயனுள்ள தகவல்தொடர்பு, விமானப் போக்குவரத்துக் கட்டுப்பாட்டுடன் வானொலித் தொடர்பைப் பயன்படுத்துதல் உட்பட விமானப் போக்குவரத்து தொடர்பான அனைத்தையும் நிர்வகிப்பவர்கள்.” என்று அவர் மேலும் கூறினார்.
மேலும் படிக்க | கைது செய்யப்பட்ட பாகிஸ்தான் முன்னாள் பிரதமர்கள்! பல தசாப்தங்களாக தொடரும் கைதுகள்
"விமானிகள் பலவிதமான பணியாளர்களுடன் பறக்கிறார்கள், அவர்கள் மற்ற விமானம் மற்றும் கேபின் பணியாளர்களுடன் எளிதாக ஒரு நல்லுறவை ஏற்படுத்திக்கொள்ள முடியும். அவர்கள் இதுவரை சந்தித்திராத நபர்களுடன் தெளிவாகத் தகவல்களைப் பரிமாறிக் கொள்ள வேண்டும். விமானிகளுக்கு தொடர்பு கொள்ளும் நல்ல திறன் இருக்க வேண்டும். பயணிகளுக்குத் தகவல் அளிப்பது, பயணிகளுக்குப் பொறுப்பாக இருப்பது என விமானத்தில் உள்ள அனைவருக்கும் கேப்டன் பொறுப்பேற்கிறார், அவர்களின் தேவைகள், விமான நேர வரம்புகள், ஓய்வுத் தேவைகள், தொழில்துறை ஒப்பந்தங்கள் மற்றும் பயணிகளுடனான தொடர்புகள் என ஒரு விமானியின் பங்களிப்பு மிகவும் முக்கியமானது" என்று கிளார்க் கூறினார்.
முற்றிலும் பைலட் இல்லாத விமானங்கள் பற்றிய யோசனைகள் என்பது தொடர்பாக தனது கருத்தில் தெளிவாக இருக்கும் அவர், “விமானத்தை முழுமையாக தானியங்கி அடிப்படையில் இயக்க முடியுமா? ஆம், அது முடியும், தொழில்நுட்பம் இப்போது உள்ளது, ஆனால் விமானத்தில் செயற்கை நுண்ணறிவைத் தவிர மற்றுமொரு பைலட்டும் இருப்பார்" என்று கூறுகிறார்.
மேலும் படிக்க | செம ஃபார்மில் இருக்கிறாங்க...இந்திய அணிக்கு தேர்வு செய்யுங்கள்: சுரேஷ் ரெய்னா
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ