தாயின் உடலுறுப்புகளை தானம் செய்ய முன்வந்த இளம்பெண்கள்

அதிவேகமாக வந்த கார் திடீரென கட்டுப்பாட்டை இழந்து வித்யா சென்ற மொபட் மீது பயங்கரமாக மோதியது. இதில், தூக்கி வீசப்பட்ட அவர் படுகாயமடைந்தார். இந்த சம்பவம் தொடர்பாக அவரது குடும்பத்தினர் தகவல் தெரிவிக்கப்பட்டதை அடுத்து கோவையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. 

Written by - Vijaya Lakshmi | Last Updated : Dec 31, 2022, 01:51 PM IST
  • சாலை விபத்தில் மூளைச்சாவு அடைந்த பெண்.
  • தாயின் உடல் உறுப்புகள் தானம் செய்ய முன்வந்த மகள்கள்.
தாயின் உடலுறுப்புகளை தானம் செய்ய முன்வந்த இளம்பெண்கள் title=

ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலத்தை சேர்ந்த ராமலிங்கம் என்பவரது மனைவி வித்யா. ஏற்கனவே ராமலிங்கம் உரிழந்தவிட்ட நிலையில் வித்யா அதே பகுதியில் டெய்லர் கடை நடத்தி வந்துள்ளார்.
இவர்களுக்கு 2 மகள்கள் உள்ள நிலையில் சம்பவத்தன்று வித்யா தனது மொபட்டில் சத்தியமங்கலம் ஆர்.டி.ஓ அலுவலகம் அருகே சென்ற போது பின்னால் வந்த கார் திடீரென கட்டுப்பாட்டை இழந்து வித்யா சென்ற மொபட் மீது மோதியது. இதில் தூக்கி வீசப்பட்ட அவர் பலத்த காயம் அடைந்தார். அவரது குடும்பத்தினர் அவரை கோவையில் உள்ள குமரன் மருத்துவமனையில் அனுமதித்தனர்.அவரை அவசர பிரிவில் அனுமதித்து டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்து வந்த சூழலில் நேற்று அவர் மூளைச்சாவு அடைந்தார்.இதுகுறிதது மருத்துவமனை நிர்வாகம் அவரது குடும்பத்தினருக்கு தகவல் தெரிவித்த போது அவர்கள் வித்யாவின் உடல் உறுப்புகளை தானம் செய்ய முன் வந்துள்ளனர். 

இதையடுத்து மருத்துவர்கள் வித்யாவின் உடல் உறுப்புகளை தானம் பெறுவதற்கான நடவடிக்கைகளை மேற்கொண்டு வித்யாவிடம் இருந்து கண், நுரையீரல், இருதயம், சிறுநீரகம், தண்டுவடம் ஆகியவற்றை தானமாக பெற்றனர்.தொடர்ந்து ஏற்கனவே நோயாளிகளின் தேவைகளை ஆராய்ந்து அவற்றை சென்னை மற்றும் கோவையில் உள்ள மருத்துவமனைகளுக்கு வழங்குவதற்கான ஏற்பாடுகளையும் மேற்கொண்டனர்.

மேலும் படிக்க | மக்களை மட்டுமின்றி மண்ணையும் காத்து விவசாயிகள் நலனை பேணும் திமுக அரசு!

இது தொடர்பாக செய்தியாளர்களை சந்தித்த மருத்துவமனை தலைவர் மருத்துவர் ஹரிபிரசாத் மற்றும் நரம்பியல் அறுவை சிகிச்சை நிபுணர் மருத்துவர் சந்தானம் ஆகியோர்,ஹெல்மெட் அணியாமல் இருசக்கர வாகனத்தில் சென்ற நிலையில் விபத்தில் சிக்கி தாய் மகள் ஆகியோர் படு காயங்களுடன் தங்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டதாகவும் அதில் தாய் வித்யா தலையில் படுகாயமடைந்ததன் காரணமாக மூளைச்சாவு அடைந்தாகவும் மகள் லேசான காயமடல்டைந்ததால் காப்பாற்றப்பட்டதாகவும் தெரிவித்தனர்.மேலும் வித்யா மூளைச்சாவு அடைந்த சம்பவத்தை அவரது பெற்றோர் மற்றும் மகள்களிடம் கூறிய நிலையில் அவர்களாகவே உடல் உறுப்பு தானம் செய்ய முன் வந்ததாகவும் அதனடிப்படையில் பெண்ணின் தண்டுவடம் கோவை கங்கா மருத்துவமனைக்கும்,கண் கோவை சங்கரா கண் மருத்துவமனைக்கும்,சிறுநீரகம் தங்கள் மருத்துவமனையிலேயே சிகிச்சையில் உள்ள நோயாளி ஒருவருக்கும் நுரையீரல்,இருதயம்,கல்லீரல் ஆகியவை சென்னையிலுள்ள மருத்துவமனைகளுக்கும் பாதுகாப்பாக வழங்கப்பட்டதாகவும் தெரிவித்தனர்.மேலும் தாய் மகள் ஆகியோருக்கு சிகிச்சை கட்டணம் இலவசமாக்கப்பட்டுள்ளதாகவும் கூறினர்.

இது குறித்து இறந்த வித்யாவின் தாய் கூறுகையில், தங்கள் மகள் உயிரிழந்த நிலையில் அவரது உறுப்புகள் ஆறு பேரின் உயிரை காப்பாற்றியுள்ளது மகிழ்ச்சி எனவும் ஏற்கனவே தந்தை இல்லாமல் தற்போது தாயையும் இழந்துள்ள இரண்டு பெண்களுக்கும் அரசு ஏதாவது உதவி செய்ய வேண்டும் எனவும் வேண்டுகோள் விடுத்தனர்.

மேலும் படிக்க | நாமக்கல்லில் பட்டாசு விபத்து : 50 அடி தூரத்திற்கு தூக்கி வீசப்பட்ட பெண் - 4 பேர் உயிரிழப்பு

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News