காதலர் தின வைரல் பரிசு; கணவனே கண்கண்ட தெய்வம் என்பதற்கு இதுதான் சான்று

கணவருக்கு சிலை வடித்து மனைவி கடவுளாக வழிபடும் சம்பவம் கொல்லப்பட்டி பகுதியில் நெகழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

Written by - ZEE TAMIL NEWS | Last Updated : Feb 15, 2022, 01:36 PM IST
காதலர் தின வைரல் பரிசு; கணவனே கண்கண்ட தெய்வம் என்பதற்கு இதுதான் சான்று title=

சேலம் ஏற்காடு பிரதான சாலை மத்திய சட்டக் கல்லூரி அருகே உள்ள அன்னை இந்திரா நகர் மூன்றாவது குடியிருப்பு பகுதியை சேர்ந்தவர் சசிகுமார். இவரது மனைவி பெயர் கோமதி. இவர்களுக்கு ஒரு மகன் மகள் உள்ளனர். வங்கி ஒன்றில் மேலாளராக வேலை பார்த்து வந்த சசிகுமார் சமூகப் பணிகளிலும் இறைபணியிலும் அதிகமாக ஈடுபாடு கொண்டவர். 

அன்னை இந்திரா குடியிருப்புவாசிகளை ஒன்றிணைத்து சங்கம் அமைத்து அனைவரும் ஒற்றுமையாக வாழ வைத்ததும் குடும்பத்தில் பல்வேறு இன்னல்களை சந்தித்து வாழ்க்கையில் உயர்ந்தவராக சாதித்து காட்டிதும் இவரது கடும் முயற்சிக்கு கிடைத்த வெற்றியாக சொல்லப்படுகிறது. மேலும் குடும்பத்தில் கணவன் மனைவி எப்படி இருக்க வேண்டும் என்பது மற்றவர்களுக்கு எடுத்துக்காட்டாக வாழ்ந்ததாகவும் சொல்லப்படுகிறது. இவர்கள் இருவரும் மனைவி மீது அளவற்ற பற்று கொண்ட கணவரும். கணவன் மீது அதித பாசம் கொண்டவராக மனைவியும் இருந்துள்ளனர்.

மேலும் படிக்க | ‘அவள் எனக்கே சொந்தம்’: திருமணத்தில் குட்டையை குழப்பிய மணமகளின் காதலன் ..!!

இந்த நிலையில் கடந்த 2019 ஆம் ஆண்டு கணவர் சசிகுமார் உடல்நலக்குறைவால் திடீரென உயிரிழந்ததால் அவரது குடும்பம் சோகத்தில் மூழ்கியது. கணவனின் இழப்பில் இருந்து மீள முடியாத அவரது மனைவி கோமதி அவரது நினைவாக ஏதாவது ஒன்று செய்ய வேண்டுமென ஆவலுடன் இருந்துள்ளார். இதற்காக அவரது வீட்டு வளாகத்தில் ஒரு மணிமண்டபம் போல் உருவாக்கி கணவரின் உருவம் பொறித்த மார்பளவு சிலையை செய்து வீட்டின் முன்பு வைத்து வழிபட முடிவு செய்தார்.

 

அதன்படி கணவரின் சிலையை வீட்டின் முன்பு வைத்து இந்த காதலர் தினத்தில் ஊர்மக்கள் முன்னிலையில் திறந்து வைத்துள்ளார். தொழில்நுட்ப வளர்ச்சி மிகுந்த இந்த காலத்தில் கணவன் மனைவி இடையே ஏற்படும் சிறு பிரச்சனை கூட விவாகரத்தில் முடியும். இன்றைய காலகட்டத்தில் கணவன் மனைவி இப்படித்தான் இருக்க வேண்டுமென்பதற்கு எடுத்துக்காட்டாக இருவரும் வாழ்ந்து காட்டி அதில் ஒருவர் பிரிந்து சென்றால் அந்த பிரிவையும் வாழ்நாள் முழுவதும் கண் முன்னே நிறுத்தும் வகையில் கணவருக்கு சிலை வடித்து மனைவி கடவுளாக வழிபடும் சம்பவம் கொல்லப்பட்டி பகுதியில் நெகழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

மேலும் அந்த பகுதியில் உள்ள குடியிருப்பு வாசிகள் அனைவரும் நேரில் வந்து சசிகுமாரின் இறைபணி மற்றும் சமூகப் பணியை பாராட்டி செல்வதோடு கணவனுக்கு சிலை வைத்த மனைவியை வெகுவாக பாராட்டி செல்கின்றனர்.

மேலும் படிக்க |  பட்டையைக் கிளப்பும் பாட்டியின் டான்ஸ், புகழ்ந்து தள்ளும் நெட்டிசன்கள்: வீடியோ வைரல்

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, டிவிட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR

Trending News